தெய்வங்கள்

தெய்வங்கள்

அற்பனாய் தெரியும் அவரே சிவனார்



அழுக்குத் துணியும் பினுக்கு மணதர்
அலையில்லா மனமும் ஆனந்த சிரிப்பர்
இழுக்கு சொல்லை எதிர்க்க மாட்டர்
எல்லா நாளும் மகிழ்ச்சி உள்ளர்

பொற்சுவை அறியார்ப் புலனை மதியார்
நற்சுவை நாவில் நாளுமே தெரியார்
அற்பனாய் தெரியும் அவரே சிவனார்
அந்நிலை நமக்கு அறிந்திட முடியார்

பணம் பொருள் இடம் வேண்டார்
பகட்டு யோக வாகனம் வேண்டார்
குணம் தெரி குடிமை வேண்டார்
உணவு தினம் உண்ண வேண்டார்

சிரிப்பார் சினங்கொண்டு அடிபார்
துடிப்பார் தொல்லையென நடிப்பார்
அழமாட்டார் அமுதை தொடமாட்டார்
ஆனாலும் நோயின்றி படுக்க மாட்டார்

எக்கணம் தவமே செய்பவர் ஞானி
என்பதை உணர்ந்த மனிதனே யோகி
எங்கும் நிறைந்த எல்லோரின் தோணி
என்பவன் சிவனே என்பதை யுணர்நீ

சிந்தனை செய்வதை சொல்லத் தெரியா
நிந்தனை எந்த நேரமும் மிருந்து
பித்தனே என்றும் பைத்திய மென்றும்
சித்தனை நீவிர் சொல்லல் முறையா



Comments

  1. அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க நண்பரே.

      Delete
    2. கருத்தின் ஆழமும்
      சொற்சிலம்பமும்
      கண்டு மிக வியந்தேன்
      தொடர வாழ்த்துக்கள்

      Delete
    3. உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.நீங்கள் கொடுக்கும் ஊக்கமும் உற்சாகமும் என்னை இவ்வாறு ஊக்குவிக்கிறது. நட்ரிங்க சார்

      Delete
  2. ''..பணம் பொருள் இடம் வேண்டார்
    பகட்டு யோக வாகனம் வேண்டார்
    குணம் தெரி குடிமை வேண்டார்
    உணவு தினம் உண்ண வேண்டார்..''

    good good vaalththu...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு நன்றிங்கம்மா.

      Delete
  3. Replies
    1. நீங்க வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றிங்கம்மா

      Delete
  4. "எக்கணம் தவமே செய்பவர் ஞானி
    என்பதை உணர்ந்த மனிதனே யோகி"

    அற்புத சிந்தனை அழகாய் தொகுத்தனை
    பொற்பத நடமிடும் பொன் அம்பலவனை
    நிற்பதை நடப்பதை நினைப்பதை யாருளர்
    சொற்பல தொகுத்து சொன்னீர் நற்பாதனை...

    மிக அழகிய வார்த்தைக் கட்டமைப்பில் அருமையான கவி படைத்தீர்கள் சகோ! வாழ்த்துக்கள்!

    த ம 5

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்கம்மா உங்களைக் காணாது தவித்தேன் சகோதரியே.மிக்க மகிழ்ச்சி

      Delete
  5. அருமையான கருத்தாழம் மிக்க கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சுரேஷ்.தொடர்ந்து வாங்க

      Delete
  6. எந்த சப்ஜக்டையும் விடாம கலக்கறீங்களே கண்ணதாசன் சார்.
    இதோ உடனே ஒட்டு போட்டுடறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்தமைக்கும் ஓட்டு தந்தமைக்கும் நன்றிங்க
      நண்பரே,

      Delete
  7. தங்கள் கோவம் கவிதைகளில் தெரிக்கிறது...

    அழகிய கவிதை

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?அனுதாபம்தான் இருக்கிறது.வருகைக்கு நன்றி

      Delete
  8. நல்ல சொல்லாடலுடன் கூடிய கவிதை.. அருமை சகோ.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ராதா ராணி. உங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  9. எக்கணம் தவமே செய்பவர் ஞானி
    என்பதை உணர்ந்த மனிதனே யோகி
    எங்கும் நிறைந்த எல்லோரின் தோணி
    என்பவன் சிவனே என்பதை யுணர்நீ//

    நன்றாக சொன்னீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க கோமதி அரசு

      Delete
  10. சிந்தனை செய்வதை சொல்லத் தெரியா
    நிந்தனை எந்த நேரமும் மிருந்து
    பித்தனே என்றும் பைத்திய மென்றும்
    சித்தனை நீவிர் சொல்லல் முறையா

    சிவனை சிறப்பாக பாடியமைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா.உங்க பாராட்டு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது

      Delete
  11. அருமையான கவிதை அய்யா. நன்றி

    ReplyDelete
    Replies
    1. வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றிங்க ஜெயகுமார்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more