தெய்வங்கள்

தெய்வங்கள்

கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே

ரவிக்கைத் துணி யுடுத்தி
ரத்தக் கலர்ப் பொட்டிட்டு
உத்தரவு இல்லாமலே மனசில்
உள் நுழைந்த பைங்கிளியே

அஞ்சுமுழ மல்லிகைப் பூ
ஆடுகிற காது சிமிக்கி
பஞ்சுபோல உன்சிரிப்பால்
பாடாய் என்னைப் படுத்துறியே

திட்டம் போட்ட கெட்டிகாரி
திரும்பிப் பார்க்க வைக்கிறியே
பட்டம் போட்டு பரிசம்போட
பக்குவமாய் நானும் வாறேன்

இரட்டை சடை போட்டவளே
ராத்திரிய கேடுத்தப் புள்ள
கெட்டிக்காரி உன் குறும்பு
கட்டி யள்ள தோணுதடி

மஞ்சக் கயிறும் தாலியும்
மாமன் உனக்கு வாங்கியாறேன்
கொஞ்ச நேரம் நின்னுபேசேன்
குறையிருந்தா சொல்லிப்போடேன்

பஞ்சு மெத்தை தைச்சிருக்கேன்
பட்டுத்துணியும் வாங்கிருக்கேன்
மஞ்சகொடித் தாலிப் போட்டு
கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே

பரிசம் போட நானுவந்தா
பதிலைச் சொல்லி அனுப்பாம
பாசக்கார மாமன் என்னை-விரட்டி
பரிதவிக்க என்னை விட்டுடாதே



தொடரும்.....





Comments

  1. மஞ்சக் கயிறும் தாலியும்
    மாமன் உனக்கு வாங்கியாறேன்
    கொஞ்ச நேரம் நின்னுபேசேன்
    குறையிருந்தா சொல்லிப்போடேன்

    கெஞ்சும் வரிகள்
    கொஞ்சம் அழகு ..!

    ReplyDelete
    Replies
    1. மாமன் அழகுதான் அதுவும் அதிக அழகு.நன்றிங்கம்மா

      Delete
  2. அழகான கிராமத்து பாணி கவிதை...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கிராமத்துப் பாணியில் முயற்சிசெய்தேன்

      Delete
  3. வஞ்சிபார்த்து பாடும் உங்க
    கெஞ்சிக்கேட்கும் பாட்டு கண்டு
    கொஞ்சும் தமிழ் கோதைகூட
    வஞ்சம் கொள்ளப்போறா பாரு...

    சகோ... விடுறதில்லைன்னு நீங்களும் கிராமத்துல வயல்வாய்க்கா வழியே நின்னு பாட ஆரம்பிச்சிட்டீங்க....
    அசத்துறீங்க... வார்த்தைகள் கெ(கொ)ஞ்சுதே உங்ககிட்ட... :)
    அருமை. தொடருங்க சகோதரரே... வாழ்த்துக்கள்!...

    த ம 2

    ReplyDelete
    Replies
    1. ஆமா சகோ..அப்பப்ப கிராமத்தையும் பார்க்கணுமில்ல .மறந்திடக்கூடாது.வந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

      Delete
  4. மஞ்சக் கயிறும் தாலியும்
    மாமன் உனக்கு வாங்கியாறேன்
    கொஞ்ச நேரம் நின்னுபேசேன்
    குறையிருந்தா சொல்லிப்போடேன்//
    அதானே! மாமனிடம் சொல் பெண்ணே!
    கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் ஆனபின்பு உன்னைய பிடிக்கலைன்னு சொல்லிட்டா என்ன செய்வது அதனால் முதலில் சம்மதம் கேட்டேன்

      Delete
  5. அசத்தல்
    மாமன் பொன்னு மயங்கித்தான் ஆகணும்
    வேற வழியில்லை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்லித்தந்த யோசனைதான் .இப்படியும் பாட்டெழுத தோனிற்று.வாழ்த்துக்கு நன்றிங்க சார்

      Delete
  6. கொஞ்சு தமிழ் வரிகள் அய்யா. ரமணி அய்யா சொன்னதுபோல் மயங்கித்தான் ஆகணும்.

    ReplyDelete
    Replies
    1. பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி.நீங்க வந்தமைக்கு நன்றிங்க நண்பரே

      Delete
  7. நன்றிங்க சார்

    ReplyDelete
  8. வணக்கம்!

    தமிழ்மணம் 5

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா.
      நீங்கள் வந்தமைக்கும் தந்தமைக்கும் ? நன்றிங்க

      Delete
  9. ரசித்தேன்... மேலும் அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே.அசத்தலுக்கு நீங்களும் காரணம்.வாழ்த்துக்கு நன்றி

      Delete
  10. Replies
    1. நன்றிங்க கருண்.தொடர்ந்து வாங்க

      Delete
  11. உங்க கவிதையில் கிராமிய மண்வாசனை மணக்குதுங்க! நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே நம்ம குதிரை,அதாங்க கற்பனைக் குதிரையின் ஓட்டம்தான்.நீங்க வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து வாங்க

      Delete
  12. கொஞ்சு தமிழில் கெஞ்சும் கவிதை .. அருமை சகோ..

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்தமைக்கும் கருத்தும் தந்தமைக்கும் நன்றிங்க ராதாராணி

      Delete
  13. இன்னும் தொடருமா ! வரேன்! வரேன்! வீட்டுக்கு!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் எப்போதுமே நீங்க வரலாம்.வருகைக்கு நன்றிங்கைய்யா

      Delete
  14. மிகவும் அருமை.. நல்ல நாட்டுப்புற பாணி கவிதை

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றிங்கம்மா

      Delete
  15. நீங்கள் கொஞ்சி கொள்ள நிற்காது அவள் ஓடுவதாலேயே அல்லவா அவள் மீது உங்கள் காதலும் அதிகமாகிறது?

    மிகவும் ரசித்தேன்! அடுத்த பகுதி வாசிக்க செல்லுகிறேன். அங்கேயாவது அவள் நின்றாளா?

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more