தெய்வங்கள்

தெய்வங்கள்

கவிஞர்களை நானும் போற்றுவேன்


அடுத்தப் புத்தகம் வெளியிட
ஆர்வமாய் நானும் உள்ளேன்
படித்துப் பார்த்து எனக்கு-சான்றாய்
பதிலளித்த வலை நண்பர்களே

கொடுத்த ஆதரவுக்குப் பதிலாக
கோடி என்னிடம் பணமில்லை
பிடித்துப் போன காரணத்தால்-தமிழ்
பிறந்த மொழி தெரிந்ததனால்

சிறகடித்துப் பறக்கக் கருத்தை
சீக்கிரமே தாருங்கள் அடுத்ததாய்
சிலந்தி போலப் பிண்ணி-சிறிதே
சிற்றெறும்பு போலச் சேர்த்தே

பதிவுலகில் நானும் பதிவராக
பத்திரிக்கைப் பேசும் மனிதராக
பைந்தமிழ் மக்களில் ஒருவராக
பணிவுடன் படைக்க விரும்புகிறேன்

கற்றறிந்த கவிதை நண்பர்களே
கவிதையில் கண்ட சொற்பபிழையை
சொல்லுங்கள் மீண்டும் மாற்றுவேன்
சொல்வோரை நானும் போற்றுவேன்


Comments

  1. புத்தக வெளியீடு சிறக்கவும் தங்களின் பணிவுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் உங்க ஒத்துழைப்பு இல்லாமலா?உங்கள் வாழ்த்துக்கு நன்றிங்க நண்பரே

      Delete
  2. கற்றறிந்த கவிதை நண்பர்களே
    கவிதையில் கண்ட சொற்ப்பிழையை
    சொல்லுங்கள் மீண்டும் மாற்றுவேன்
    சொல்வோரை நானும் போற்றுவேன்// அருமையான வரிகள்..

    வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. தவறுகள் திருத்தப்படவே தயவுடன் எல்லோரையும் கேட்கிறேன்

      Delete
  3. உதவும் மனமும் எனக்குண்டே
    உமக்கும் செய்வேன் அத்தொண்டே!
    நிதமும் எழுதும் திறன்கண்டே
    நினைத்தேன்! நூலென வரலீண்டே

    ReplyDelete
    Replies
    1. நீங்க கொடுக்கும் ஊக்கமும் உற்சாகமுமே என்னை மேலும்மேலும் செம்மைபடுத்திகொள்ள முடிகிறது.

      Delete
  4. கனிவுடன் கவிதரும் கண்ணதாசரே!
    பணிவுடன் பாங்காய் பகருகிறீர்
    இனிமையான குணமே இருக்கிறதே
    இயற்றிடும் இன்னும் இன்னும்!

    உங்கள் முயற்சி உயற்சிபெற என் உளமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள் சகோதரரே!

    வாழ்க வளமுடன்!

    த ம. 5

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா.நாளும் தொடர்ந்து ஆதரவு நல்கிடும் தங்களின் வாழ்த்துக்கு நன்றி.உங்களையும் விழாவுக்கு அழைப்பேன் வரவேண்டும்
      என எதிர்பார்ப்பேன்

      Delete
  5. சிறகடித்துப் பறக்கக் கருத்தை
    சீக்கிரமே தாருங்கள் அடுத்ததாய்
    சிலந்தி போலப் பிண்ணி-சிறிதே
    சிற்றெறும்பு போலச் சேர்த்தே

    சிறப்பான பகிர்வுகளாக்கியதற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா.உங்களின் ஆதரவும் அன்பும் என்னை மேலும் எழுத ஊக்கப்படுத்துகிறது.நன்றிங்க

      Delete
  6. மகிழ்ச்சி கவிஞரே..

    இந்த சொற்பிழை ((சொற்ப்பிழையை)) என்பது எத்தனை முறை பார்த்தாலும் நம் கண்ணை ஏமாற்றிவிடும். நூல் வெளியிடுதல் என்பது தவம் போன்றது.

    இன்னும் பல பயனுள்ள நூல்கள் வெளியிட வாழ்த்துக்கள் கவிஞரே.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பிழைத்திருத்ததுக்கும் நன்றிங்க நண்பரே.

      Delete
  7. சிலந்திப்போலப் பின்னிச் செய்த
    கவிதை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார்.உங்களின் வருகை எனக்கு எப்போதுமே பெருமை. நீங்கள் சொல்லும் ஓவ்வொரு வாழ்த்துமே என்னை மேலும் செம்மைபடுத்த முடிகிறது

      Delete
  8. வாழ்த்துக்கள் ஐயா அருமையான முயற்சி விரைந்து பணியாற்றுங்கள்
    உங்கள் எண்ணம் போல் ஆக்கமும் உயர்வு பெற இறைவனருள் கிட்டட்டும் .

    ReplyDelete
    Replies
    1. உங்களைப்போல தொடர்ந்து பதிவெழுத ஆசை, நேரமின்மையால் அதிகப் பதிவுகள் எழுத முடியவில்லை.ஆனாலும்உங்களின் ஆதரவாலும் எழுதுவேன் புத்தகமும் வெளியிடுவேன்.

      Delete
  9. புத்தக வெளியீடு சிறக்கவும் தங்களின் பணிவுக்கும் வாழ்த்துக்கள்...
    Vetha.Elangathilakm.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா

      Delete
  10. புத்தக வெளியீட்டீற்கு வாழ்த்துக்கள்! படைப்புகள் மீண்டும் படித்து பார்க்க மெருகேற்ற தூண்டும். படித்து பார்த்து மெருகேற்றி வெளியிட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க சுரேஷ்

      Delete
    2. தளிர் சார்,

      உங்க கவிதைகள் எப்ப புத்தகமா வர இருக்கிறது. உங்கள் கவிதைகள் அத்தனையும் தேனில் நனைந்த மல்கோவா பழம் போல மனம் கொண்ட சுவைபடைத்தவை.

      வசந்தகோபால்

      Delete
  11. புத்தகம் சிறப்பாக வெளிவர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க விமலன் தொடர்ந்து வாங்க

      Delete
  12. தமிழுக்கு கோடி என்ன வேண்டி கிடக்கு....

    தமிழுக்கு அமுதென்று பேர், எங்கள் தமிழ் எந்தன் உயிருக்கு நேர், இல்லையா...!

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,தமிழ் நம் உயிருக்கு இணையானது.வாழ்த்துக்கு நன்றிங்க மனோ.

      Delete
  13. //கற்றறிந்த கவிதை நண்பர்களே
    கவிதையில் கண்ட சொற்பபிழையை//
    அது சொற்பிழையை சொற்ப பிழை ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். ஆனா அதுவும் பொருத்தமாத்தான் இருக்கு.
    இரண்டாவது நூல் வெளியிட வாழ்த்துக்கள்.
    ஒட்டு போட்டு கருத்து போடற எங்களுக்கெல்லாம் எங்களுக்கெல்லாம் treat கொடுக்கணும் சொல்லிட்டேன்.


    ReplyDelete
    Replies
    1. பிழைக்குத் தகுந்த மாதிரி நீங்க பரிசுத் தரலாமே .உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க நண்பரே

      Delete
  14. தவறுகள் காணும் தகுதி கொண்டோனாய்
    நிறைதமிழ் புலமைகள் எனக்கில்லை
    திறமைகள் பலதும் கொண்டவர் நீங்கள்
    சிறந்த படைப்பை தந்திட வாழ்த்துகின்றேன்...!

    தங்கள் முயற்சி சிறக்க உளம்கனிந்த நல்வாழ்த்துக்கள்
    வாழ்கவளமுடன்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நானும் புலவனில்லை இலக்கணம் நாளும் தெரிந்தவனில்லை எனவேதான் கேட்டேன்.உங்கள் கருத்தை மிகவும் மதிக்கிறேன். நன்றி

      Delete
  15. Amazing! Its truly awesome piece of writing, I have
    got much clear idea regarding from this post.

    my page - best stress relievers

    ReplyDelete
  16. Hi there friends, how is the whole thing, and what you wish for
    to say about this piece of writing, in my view its truly amazing in favor of
    me.

    my site ... best weight loss program pills

    ReplyDelete
  17. If some one wants expert view on the topic of blogging after that i recommend
    him/her to pay a visit this blog, Keep up the fastidious job.


    Feel free to surf to my website :: exercise tips for fat people

    ReplyDelete
  18. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  19. தங்கள் அவையடக்கம் போற்றுதற்கு உரியது
    எங்கள் உளவிருப்பம் தொடர்ந்து படையுங்கள்
    "மேலும் பல நூல்களுக்காகக் காத்திருக்கிறோம்!"

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அய்யா.என்னை வழிநடத்தும் உங்களின் விருப்பப்படியே நான் இன்னொரு புத்தகமும் வெளியிடுகிறேன்,வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்க அய்யா

      Delete
  20. தமிழை ரசிக்க கோடி எதற்கு லட்சம் எதற்கு... தங்கள் புத்தக வெளியீட்டிற்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

      Delete
  21. புத்தக வெளியீட்டிற்கு அன்பான வாழ்த்துக்கள் ஐயா...

    பிழையென அறிந்தும் மாற்ற மனமில்லா மனிதர்கள் மத்தியில் பிழையைத் திருத்தும் உரிமையை வரவேற்கும் தங்களுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தவறைத் திருத்துதம் செய்வதும் அதைத் தெரிந்தவர்களிடம் கேட்பதும் முறைதானே. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்கம்மா

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more