தெய்வங்கள்

தெய்வங்கள்

மனதிலே அன்பிருந்தால்...


இப்போது வணங்கும் இறைவனே
முற்போது வாழ்ந்த மனிதனே
வெவ்வேறு வுருவில் வணங்குவர்
வேதமும் சொல்லுமெனக் கூறுவர்

கல்லாக வீசுகின்ற காற்றாக
இல்லாத உருவாய் கூறுவர்
நில்லாத நிலையிலும் ஆடுவர்-சாமி
நேரில் வந்ததாய் கூறுவர்

கல்லாமை இல்லாதோர் வணங்கிடும்
இல்லாத உருவமே கடவுளே
பொல்லாத வைத்தியம் சொல்லுவர்
பேரதிர்ச்சி நடக்குமென கூறுவர்

இயற்கையே கடவுள் என்றிருந்தால்
எதற்குக் கோயிலும் குருக்களும்
அதற்குப் அன்றாடம் பூசையும்
ஆடும் கோழியும் வேண்டாமே

இல்லற வாழ்வை துறந்துதான்
இறைவனைக் காண முடியுமானால்
இறைவனின் தூதனாய் இருப்பவரும்
இல்லறம் தவிர்த்து இருக்கலாமே

மனதிலே அன்பைக் கொண்டிருந்தால்
மனிதனை நண்பனே என்றிருந்தால்
துணிவையே மனதினில் வளர்த்திருந்தால்
துணைக்கு சாமியும் வேண்டுமா

Comments

  1. /// துணிவையே மனதினில் வளர்த்திருந்தால்...
    துணைக்கு சாமியும் வேண்டுமா...? ///

    சிந்திக்க வேண்டிய கேள்விகள் பல... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே நல்ல வார்த்தைச் சொன்னீர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

      Delete
  2. நன்றாய்க் கேட்டீர் நாலுவார்த்தை
    நானும் இதைத்தான் கேட்கின்றேன்

    சொல்வார் தகையோர் ஒன்றேதான்
    சூழ்ந்தது ஊழ்வினை வேறில்லை

    வினைதான் எம்மை ஆளுதென்றால்
    வேறேதும் சாமி செய்யாதாம்

    பிறகேன் நமக்கு சாமியும் சார்ந்தே
    சுறண்டும் கோயிலும் பூசைகளும்!...

    த ம. 3

    ReplyDelete
    Replies
    1. "சூழ்ந்தது ஊழ்வினை வேறில்லை"
      என்று சொல்லித்தான் ஏமாற்ற முடியும்

      Delete
  3. அன்பே கடவுள்!

    ReplyDelete
    Replies
    1. அதுதான் உண்மை அய்யா

      Delete
  4. அன்பே கடவுள்..

    த.ம-5

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க உஷா அன்பரசு

      Delete
  5. அழகிய கவிதை வரிகள்...

    அன்பிருந்தால் அனைவரும் ஆண்டவர்களே...

    ReplyDelete
    Replies
    1. அன்பே தெய்வம் உண்மைதான்

      Delete
  6. அன்பை போதிக்கும் அருமையான கவிதை. எப்படித்தான் இப்படி கவிதையாய் எழுதித் தள்ளுகிறீர்களோ?

    ReplyDelete
    Replies
    1. எல்லா நிலைகளிலும் எழுத முடிவதே உங்களைப் போன்றோரின் ஆதரவினால்தான் ,அதனால் தொடர்ந்து வாங்க

      Delete
  7. Hi there, I enjoy reading all of your article. I wanted to write
    a little comment to support you.

    My blog post - best shampoo for thinning hair and hair loss

    ReplyDelete
  8. "கண்ணிலே அன்பிருந்தால்
    கல்லிலே தெய்வம் வரும் "தானே
    அற்புதமான சிந்தனை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்க பாணியிலே சிறப்பா சொல்லிட்டீங்க சார்

      Delete
  9. மனதில் இருப்பதை நம்பாதவர்கள்தான் தூணிலும் இருப்பான் ,துரும்பிலும் இருப்பான் என்பார்கள் !உங்களின் கருத்தை ஆதரிக்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. அதரவுக்கு நன்றிங்க பகவானே.

      Delete
  10. அன்புதான் கடவுள்
    அன்பேதெய்வம்.
    அன்பேஅனைத்துமென்பார்கள்.
    அதைஉணர்த்தும் அழகான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பினால் எல்லாமே சாதிக்க முடியுமே .வாழ்த்துக்கு நன்றிங்கம்மா

      Delete
  11. கடைசி பத்தி அருமையான முத்தாய்ப்பு

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க குட்டன் .தொடர்ந்து வாங்க

      Delete
  12. இயற்கையே கடவுள் என்றிருந்தால்
    எதற்குக் கோயிலும் குருக்களும்
    அதற்குப் அன்றாடம் பூசையும்
    ஆடும் கோழியும் வேண்டாமே/// மிகச் சிறப்பாய் சொன்னீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்வதும் உண்மைதானே ,வந்தமைக்கு நன்றிங்கம்மா

      Delete
  13. நன்றிங்க சார்

    ReplyDelete
  14. Replies
    1. மனமே கோயில்.வந்ததுக்கு நன்றிங்க

      Delete
  15. Undeniably consider that which you said. Your favorite reason
    seemed to be on the internet the easiest factor to
    take into account of. I say to you, I definitely get irked while other folks consider issues that they just
    do not recognise about. You controlled to hit the nail upon the top and also
    defined out the whole thing without having side effect , people
    can take a signal. Will probably be back to get more.
    Thank you

    Look into my web site - home workout resistance bands

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more