தெய்வங்கள்

தெய்வங்கள்

இதயமே .... இனிய இயந்திரமே !

இதயமே
இயக்கத்தை நிறுத்தாத
இனிய இயந்திரமே !

என்றுமே நிற்காத
உன் தந்திரமே
எனக்கு மாத்திரமே !

காற்றடைத்த
என் உடம்பில்
திரவம் குடித்து
தினம் வாழ்கிறாயே !

மகிழ்ச்சியும் வேதனையும்
ஏற்றுக்கொள்ளும்
உனக்கு
எசமான் யார் ?

நீயும் பரிதாபம்
ஓய்வு கொடுத்தால்
மீண்டும் வருவாயா
வருந்தி விடுவாயா !

எனக்கும் ஆசை
எப்படி கொடுப்பதென்று
நான் இருந்தால் முடியாது
இறந்தால் முடியும் ?

வேண்டுமென்று கேட்பாயா
வேதனையில் துடிப்பாயா
போதுமென்றுச் சொல்வாயா
போய்சேர்ந்துத் துயில்வாயா.....





Comments

  1. நினைவிற்கு ஓய்வு ஏ(எ)து...?

    வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. சொல்ல முடியா சுகமான தருனங்கள்,வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்க தனபாலன் சார்

    ReplyDelete
  3. இதயம் - அதற்குதான் எத்தனைப் பரிமாணம்! இதயத்துக்கும் ஓய்வளிக்க விரும்பும் இளகிய மனம் கொண்ட தங்களுக்கும் இனிய கவிதைக்கும் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. என் மனம்போல இதயமும் நன்றாய் உள்ளது.உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

      Delete
  4. இதயம் கவரும் கவிதை!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கயா.தொடர்ந்து வாங்க

      Delete
  5. வித்தியாசமான மாறுபட்ட சிந்தனை
    ரசித்தேன்.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு எனது மனநிலை அப்படித்தான் உள்ளது.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

      Delete
  6. மகிழ்ச்சியும் வேதனையும்
    ஏற்றுக்கொள்ளும்
    உனக்கு
    எசமான் யார் ? - மனதை கவரும் கவிதை..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க கருண்.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

      Delete
  7. மகிழ்ச்சியும் வேதனையும்
    ஏற்றுக்கொள்ளும்
    உனக்கு
    எசமான் யார் ?

    இதயம்.... இனிய இயந்திரமே !

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நன்றிங்கம்மா

      Delete

  8. வணக்கம்

    இதயக் கவிதை! இனிய கவிதை!
    உதயக் கதிரின் ஒளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றிங்கைய்யா

      Delete
  9. இதயம்.
    இதயமில்லையேல்
    மகிழ்வேது
    வேதனையோது
    வாழ்க்கைதான் ஏது.
    இனிய இயந்திரம்தான்.
    அருமையான கவிதை அய்யா நன்றி

    ReplyDelete
    Replies
    1. வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றிங்க

      Delete
  10. ''..நான் இருந்தால் முடியாது
    இறந்தால் முடியும் ?...'''

    ஏனிந்த ஆசை.?
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. அனைத்துக்கும் ஆசைபடு என்பதுதான் காரணம்.நன்றிங்கம்மா என் உணர்வை புரிந்தமைக்கு

      Delete
  11. வேண்டுமென்று கேட்பாயா
    வேதனையில் துடிப்பாயா
    போதுமென்றுச் சொல்வாயா
    போய்சேர்ந்துத் துயில்வாயா.....//அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே .தொடர்ந்து வாங்க டினேஷ்

      Delete
  12. இதயத்தைப் பற்றிச் சிந்தித்துக் கவி படிக்கவும் ஒரு இதயம் வேண்டுமே....!

    சில வீடுகளில், இல்லை, இல்லை நிறைய வீடுகளில் தாயோ மனைவியோ எல்லோருக்கும் சாப்பாடு கொடுப்பார்கள். அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று எத்தனை பேர் பார்க்கிறார்கள்? பல நேரங்களில் அவர்கள் சுவாரஸ்யம் இன்றி கொஞ்சமாகவும், மிஞ்சியதையும் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்வார்கள்.

    ஓய்வில்லாமல் உழைக்கும் இதயம் பற்றிய உங்கள் கவலைக்கவி படித்ததும் எனக்கு இதுதான் நினைவு வந்தது. :)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே.வருகைக்கு நன்றி.தொடர்ந்து வாருங்கள்

      Delete
  13. தமிழ் மனம் வீசும் கவிதை ...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தொடர்ந்து வாங்க

      Delete
  14. வேண்டுமென்று கேட்பாயா
    வேதனையில் துடிப்பாயா
    போதுமென்றுச் சொல்வாயா
    போய்சேர்ந்துத் துயில்வாயா.....//நல்ல வரிகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ப்ரியா தொடர்ந்து வாங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more