Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

பிறப்பே தவறாய் எண்ணுதடா...

சொல்லாமல் கேட்காமல் சுயமாக முன்வந்து கொடுக்கா உறவும் சோம்பலாய் இருக்கையில் அறிவைச் சொல்லாத அப்பாவும்   அம்மாவும் இல்லாத அறிவை   இயைந்து எடுத்துச் சொல்லா உடன்பிறப்பும் இருப்பதைக் கொடுத்துத் துணையாய் இன்முகம் காட்டா நட்பும் பொல்லாத நேரத்தில் புரியாமல் போலியாய்த் தேவையென நடித்து தள்ளாத காரணம் சொல்லி தாங்க வைக்கும் உறவும் நிலைமை தெரிந்தும் வருந்தாமல் நேரமும் பழிக்கும் மனைவி வயதைக் கடந்தும் வேலையின்றி வருந்தாத வாரிசின் அலட்சியமும்   உறவென்று சொல்ல வெட்கமடா உலகில் இதுவும் உண்மையடா பிள்ளைகள் இருந்தும் தொல்லையடா பிறப்பே தவறாய் எண்ணுதடா @@@@@ கவியாழி   @@@@@@

மனமே மீண்டும் வருந்தாதே.......

மகிழ்ச்சியில் திளைக்கும் மனமே மகிழாதோர் இல்லை தினமே நெகிழ்ச்சியாய் இருப்போர் சிலரே நெஞ்சுருக மகிழ்வோர் பலரே நேசிக்கத் தெரியா மனிதன் நேசமற்ற மனிதன் உள்ளத்தில் நாளும் தாவும் குரங்கு-மனிதன் நிம்மதி மறந்த விலங்கு காணும் காட்சிகள் அவலங்கள் கண்டும் காணா உள்ளங்கள் தேசம் தோறும் சண்டைகள்-மனிதமே தேடிக் காணா உண்மைகள் வெறுமையான மனித உள்ளம் வேதனையில் தவிக்கும் இல்லம் வீண்பேச்சு சந்தேகம் விவாதம்-இன்று விதியல்ல இது மெல்லோர்க்கும் பணமில்லை சிலருக்கு வாழ குணமில்லை கொடுத்துமே உதவ தினம் வருகின்ற தேவையே-என்றும் தீராத ஆசை நோயே மனமே மீண்டும் வருந்தாதே மனிதனின் நிலையால் கலங்காதே குணமே இதுவென வழுவாதே-எல்லா குறைகளும் தீர்த்திடும் உணர்ந்தாலே (கவியாழி)

சாலை விதியை மதிப்பீரே

Image
       நவநாகரீக மாற்றத்தில் மக்களின் பொருளாதாரம், வாழ்க்கை வசதி , கல்வி,சுகாதாரம், வேலைவாய்ப்புகள் மற்றும் வாகனத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாமல் அனைவருக்கும் வாகனம் அவசியம்  என்ற நிலையாகிறது.நமது நெடுஞ்சாலைகளும்  நல்ல தரத்துடன் மாறி நல்லதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் கெடுதல்களையும் நாம் அனைவரும் உணரவேண்டும்  இன்று எல்லோருமே பெரும்பாலும் சாலை விதிகளை கடைபிடிக்கிறோம் ஆனாலும் சில நேரங்களில் விபத்து நடப்பதை தவிர்க்க இயலாமல் போகிறது.இங்கு  குற்றம் குறைகளை தவிர்க்க ஒவ்வொரு தனி மனிதருக்கும் சாலையின் பயன்பாடு அவசியம் பற்றித் தெரிந்திருந்தாலும் அவசரம் என்ற அலட்சியத்தால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முன்வரவேண்டும். சாலைவிதிகளை அறிந்தும் தவறிழைத்தல் என்ற காரணமே விபத்துக்கு முக்கிய காரணமாய் இருக்கிறது.முந்திசெல்லுதல் ,தவறான இடத்தில் வண்டிகளை நிறுத்தி வைத்தல் ,மாற்றுவழியில் அவசியமற்ற வேகம், பாதசாரிகளின் ஒழுங்கற்ற சாலையைக் கடக்கும் முயற்சி, விலங்குகளை  சாலையில் திரிய விடுதல்  போன்றவையே முக்கிய காரணிகளாய் இருக்கிறது தனி மனித ஒழுக்கமே சாலையில் விபத்துக்கள்

மனிதம் மனதில் இருந்தாலே......

மனிதம் இல்லா மனிதரையே மாற்றம் செய்ய வையுங்கள் மனதில் துளியும் அன்புடனே மனிதனாக வாழச் சொல்லுங்கள் செல்வம் அதிகம் சேர்ந்தாலே செல்லும் வழியும் தடுமாறும் சொல்லில் வார்த்தை  தவறாகி சொந்தம் தள்ளி உறவாடும் சொந்தமும் நட்பும் இல்லாமல் சுகமாய் வாழ்க்கை வாழ்ந்தாலும் செல்லும் வழியில் சிலரேனும் சிரித்துப் பேசச் செய்திடுங்கள் குற்றம் குறைகளை நல்லதை குணத்தை மாற்றி வாழ்வதை சுற்றமும் நட்பும் உணர்ந்ததை சொல்லிப் புரிய வையுங்கள் அருகில் இல்லா உறவுகளால் அதிகத் துன்பமும்  வருவதையும் அன்பே இல்லா மனிதர்களின் அடைந்த நிலையை காட்டுங்கள் மனித வாழ்க்கை உணர்வதற்கு மக்கள் சூழ்ந்தே வாழ்வதற்கு மனிதம்  மனதில் இருந்தாலே மகிழ்ச்சி நிறைந்து வாழ்ந்திடலாம் (கவியாழி)

மகிழ்ச்சி இல்லா நேரத்திலே...

மகிழ்ச்சி இல்லா நேரத்திலே மனதில் தோன்றும் எல்லாமே மறைக்க முடியா தருணங்களாய் மடியும் நிலைக்கு வந்துவிடும் மலையும் கடலும் வானமும் மரமும் செடியும் கொடியுமே மனதில் பாரத்தைக் குறைத்திடும் மகிழ்ச்சியை மீண்டும் தந்திடும் தோழமைத் துணிவும் சேர்ந்ததும் தொடரும் துன்பமும் விலகிடும் தொடரும் நட்பின் ஆதரவால் தொல்லைகள் மறைந்து சென்றிடும் இதயம் உணரா மனிதருக்கும் இனியவை செய்திடசொல்லிடும் இன்பம் தந்திடும் செயல்களை இனியும் செய்ய வைத்திடும் கலக்கம் வேண்டாம் நண்பனே கடவுள் போல வந்தேனும் கருணை கொண்டு உதவியாய் கடந்து செல்ல வைப்பார்கள் (கவியாழி)

புத்தகத் திருவிழா2014-செல்லப்பா அவர்களுக்குப் பாராட்டு

Image
நேற்று மாலை ஐந்து மணிக்கு திரு.செல்லப்பா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் ' என்ற புத்தகத்தை அய்யா.புலவர் .ராமாநுசம் அவர்களின் திருக்கரங்களால்  அகநாழிகை பதிப்பகத்தார் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பதிவுலக நண்பர்கள் பலரும் திரு.பாலகணேஷ் அவர்களின் கைபேசிவழித் தகவல் கிடைத்ததும் சிரமம் பார்க்காமல் வந்திருந்து திரு.செல்லப்பா அவர்களை வாழ்த்தியபோது எடுத்த சில படங்கள். நான் அறிமுகம் செய்து பேசியபோது  மிக கவனமாக உரையை கேட்கும் மெட்ராஸ் பவன்  சிவகுமார்,நம்ம புலவர்.ராமாநுசம்,எழுத்தாளர்.செல்லப்பா  மற்றும் மின்னல்வரிகள் பாலகணேஷ் பன்.ராமசாமி,ஸ்கூல் பையன் சரவணன்,ஆர்.வி.சரவணன்,தோத்தவண்டா ஆரூர் மூனா செந்தில்,இரவின் புன்னகை செல்வின் அகநாழிகை புத்தக வெளியீட்டாளர்  பொன் வாசுதேவன் உஷா ராமச்சந்திரன், புதுவைக் கவிஞர் உமா மோகன், பெருமிதக் கவிஞர் தேனம்மை ஆகியோர்களுடன்  பொன்வாசுதேவன் வந்திருந்து வாழ்த்திய பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. (கவியாழி)

கடவுள் போலச் சொல்வார்கள்

உதவி செய்ய வருவோர்கள் உரிமையோடு  செய்வார்கள் உணரும் துன்பம் யாவையுமே உடனே தீர்க்கத்  துணிவார்கள் எண்ணம் முழுதும் உண்மையாய் என்றும் துணையாய் இருப்பார்கள் எதிலும் உரிமை சொல்லியே எளிதில் அன்பைப் பொழிவார்கள் ஊரும் பேரும் தெரியாமல் உற்ற நட்பு என்பார்கள் உள்ளம் முழுதும் தெய்வமாய் உணர்ந்துப் பழகி வருவார்கள் இன்றும் நட்பாய் ஒருசிலரே இப்படி மகிழ்ச்சி கொள்வார்கள் இதயம் நிறைந்து எப்போதும் இன்முகத்தோடு வாழ்வார்கள்  கடமை என்றே எண்ணியே கருத்தாய் செய்து முடிப்பார்கள் கடந்து வந்து வெற்றியக் கடவுள் போலச் சொல்வார்கள் (கவியாழி)

மகிழ்ச்சிக் கிடைத்தால் மறுக்காதே....

மகிழ்ச்சிக்  கிடைத்தால் மறுக்காதே மறுத்துப் பின்னால் வருந்தாதே புகழ்ச்சி மிகுந்து மயங்காதே பிறகு மயங்கி துடிக்காதே கிடைத்த வாழ்வைத் தொலைக்காதே தொலைத்து விட்டுக் கலங்காதே கிட்டும் வாய்ப்பை விலக்காதே கலங்கி உயிரைப் போக்காதே உழைத்து வாழ மறுகாதே உயர்வு உனக்குக் கிடைக்காதே ஓய்ந்து படுத்துக் கிடந்தேநீ உறங்கி வாழ்வை இழக்காதே தொடுத்த சொல்லால் துணையைநீ தொடரும் சொந்தம் முடிக்காதே தொலைத்து விட்ட வாழ்கையே தேடிச் சென்றும் கிடைக்காதே பெண்கள் கல்வி கொடுக்காமல் பிறந்த வாழ்வைக் கெடுக்காதே பிறப்பை தவறாய் நினைக்காமல் படிப்பைத் இடையில் நிறுத்தாதே கெடுத்தும் வாழ்வு வாழாதே கெட்டப் பின்பு துடிக்காதே கொடுத்து வாழ்ந்து மகிழ்ந்தாலே கொடுக்கும் நன்மை உணர்வாயே?

பொங்கலைக் கொண்டாடுவோம் .....

உலகத்துத் தமிழரெல்லாம் ஒற்றுமையாய்ச்   சேர்ந்திருந்து தமிழன்னை மகிழ்ந்திடவே  தவறாமல் பொங்கல் வைப்போம் நல்லோரை நாடிச் சென்று நல்வாழ்த்து சொல்லிடுவோம் நம்மக்கள் மனம்மகிழ நாடிச் சென்று உதவிடுவோம் புத்தாடை  தனையுடுத்தி  புதுப்பானை பொங்கலிட்டு தலைக்கரும்பு மஞ்சளுடன் தலைவாழை இலைபோட்டு உலகாளும் சூரியனுக்கும் உழவனுக்கும் நன்றி சொல்வோம் உயரும் வழி என்னவென்று உள்ளோர்க்கு எடுத்துரைப்போம்

பொங்கலே பொங்குக.....

தாத்தன் பாட்டிச் சொந்தங்களை தமிழில் இல்லா வார்த்தைகளில் பார்த்தே மகிழ்ந்தே சிரித்திடுவீர் பாசம் கொண்டே அழைத்திடுவீர் நேற்றும் நடந்தக் கதைகளையே நேசம் கொண்டே பேசிடுவீர் நேர்மை வீரம் சத்தியத்தை நேரில் கண்டேப் பேசிடுவீர் ஊரும் உறவும் உள்ளதென உரிமைச் சொந்தம் நல்லதென பேரும் புகழாய் வாழ்ந்திருந்த பெரியோர் கதைகளைக் கேட்டுடுவீர் வீரம் மிகுந்த தமிழர்களின் வேட்கை நிறைந்தப் பாட்டுகளும் வீதியில் சூழ்ந்தே விளையாடி விரும்பிப் பழகி மகிழ்ந்திடுவீர் தாழ்ந்த உணர்வும் இன்றில்லை தரணி முழுதும் கொண்டாடி தமிழர் திருநாள் பொங்கலையே தமிழர் அனைவரும் பொங்கிடுவீர் மஞ்சள் கரும்புடன் படையலிட்டு மாட்டையும் ஆட்டையும் வர்ணமிட்டு பொங்கலை வைத்துப் படையலிட்டு புகழ்ந்தே மகிழ்ந்தே வணங்கிடுவீர் பொங்கலே பொங்குக என்றுரைத்து பொழுதும் அனைவரும் சூழ்ந்திருந்து மங்கள நாளில் ஒற்றுமையாய் மகிழ்ந்தே சேர்ந்து சாப்பிடுவீர் (கவியாழி)

திருவாளர்.செல்லப்பா அவர்களின் சிறுகதைப் புத்தகம்

Image
கிராமத்துப்  பின்னணி உள்ள இந்த அட்டைப் படத்தைப் பார்க்கும்போது இவர் கிராமத்தை விரும்பி ரசிக்கும் எழுத்தாளர்  என்பதும்  படத்திலுள்ள சிறுமி செல்வி.சம்ப்ரித்தா(அவருடைய பேர்த்தி)  இவரது உறவுக்கு அய்யனாரைப் போன்று பாதுகாவலராய் இருப்பார் என்பதும் தெளிவாகப் புலனாகிறதல்லவா? இந்தப் புத்தகத்தில் உள்ள "சாந்தி நிலவ வேண்டும் " என்ற சிறுகதைக்காக பிரபா ராஜன் அறக்கட்டளையின் சார்பாகக் கலைமகள்  பத்திரிகை நடத்திய  சிறுகதைப் பரிசுபோட்டியில் இரண்டாம் பரிசு பெற்றபோது எடுத்த படம். மணிமேகலை பிரசுரமும் இணைந்து நடத்திய விழா.                               ஹரணி (முனைவர் க அன்பழகன்) தமிழ்ப் பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைகழகம், சிதம்பரம். சொல்லியது............     "ஒழுக்கமான படைப்புலகத் தர்மத்தோடு, மனிதநேயச் சிந்தனையோடு எடுத்துக் காட்சிப்படுத்துகிறார்  தன் உள்ள ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு. ஒருமுறை வாசித்தாலும் பன்முறை பாராயணம் செய்துவிட்ட ஒரு பாடம்போல மனத்தில் தேங்கி மாற்றங்களை விளைவிக்கும் சிறுகதைகள்." இன்றைய புதிய தலைமுறை  எழுத்தாளார்களின்    அதிக புத்த

மனிதநேயம் உள்ளவராய் வாழ்ந்திடுங்கள்

அடுத்தவரின் குறையை எண்ணி அனுதினமும் ரசிக்கதோன்றும் படித்தறிந்த மானிடனே நீ பண்ணுவது நல்லதில்லை எடுத்தெறிந்து செய்வதனால் ஏழுபிறப்பும் பாதித்ததாய் படித்தறியா முன்னோர்கள் பழமொழிகள் சொன்னார்கள் பணம்காசு கொடுக்காமல் பண்புகளை சொன்னாலே குணம்மாறி வாழ்ந்திடுவான் கும்பிடுவான் தெய்வமென வழியின்றித் தவிப்போருக்கு வயிற்றுப்பசி போக்கிடுங்கள் வாழ்வதற்கு நல்லவழி வணங்கும்படிச் செய்திடுங்கள் நாளிதுவே வாழ்வதற்கு நாளைக்குத் தெரியாது நாளைவரை உடன்வருவார் யாரேனவேத் தெரியாது வேலைக்கு மாத்திரையும் வேதனைகள் மறைவதற்கு இருக்கும்வரை   மனிதநேயம் இருப்பவராய் வாழ்ந்திடுங்கள்

நல்லவராய் வாழ்ந்திடுவோம்....

எண்ணத்ததைத் தூய்மையாக எப்பொழுதும் வைத்திருந்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக இன்பமாக வாழ்ந்திடலாம் சொல்லுவதைச் செயலாக்கி சொன்னபடி வாழ்ந்திருந்தால் செல்வமது நிலைத்திடுமாம் சொந்தமெனத் தாங்கிடுமாம் உள்ளமதில் கள்ளமின்றி உண்மையாகப் பேசிவந்தால் தொல்லையில்லா வாழ்க்கையாக தொடர்ந்திடலாம் எப்பொழுதும் அன்புடனே அறநெறியும் அடுத்தவருக்கு உதவியுமே இன்பமெனச் செய்திட்டு இருப்பதையுமே கொடுத்திடலாம் நண்பனையும் அன்புடனே நன்னடத்தைச் சொல்லிவந்தால் நன்றியுடன் இருந்திடுவான் நல்லபடி வாழ்ந்திடுவான் உள்ளவரை எச்செயலும் உயர்வதற்காய் செய்தாலும் நல்லவையே செய்திடுவோம் நல்லவராய் வாழ்ந்திடுவோம் (கவியாழி)

தவறிய அழைப்பு மிஸ்சுடு கால்.(Missed call)

                       தவறான அழைப்பு       (Missed call )  இதைப்பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.தவறிய,தவறான,அவசியமில்லாதது போன்ற அழைப்புகள் சில நேரங்களில் எரிச்சலையும்  கோபத்தையுமே தந்தாலும் சில நேரங்களில் போதிய கையிருப்பு இல்லாமை அல்லது அலைவரிசை பிரச்னை போன்றைவையும் காரணமாய் இருக்கிறது.ஆனாலும் பெரும்பாலானவர்கள்  தவறிய அழைப்பு  வருவதை விரும்புவதில்லை.சிலர் இதை வாடிக்கையாக கொண்டிருப்பதும் உண்மையே. இன்றைய நவீன காலத்தில் அவரவர் விருப்பத்திற்கேற்ப கைபேசி உபயோகித்து வருகின்றனர்.இதில் வயதோ,வசதியோ  வேறுபட்டாலும் விருப்பத்திற்காக,வசதிக்காக,அடுத்தவருக்காக  பல வண்ணங்களிலும் அதிக விலையிலும் வைத்துள்ளார்கள்.இங்கு கிராமமோ,நகரமோ பாகுபாடு இருக்கவில்லை.அவரவர் மனதைப் பொறுத்தே  உள்ளது. ஆனாலும்  இந்த தவறிய அழைப்பை பற்றி எல்லோருமே தெரிந்துள்ளனர். ஒவ்வொரு அழைப்பின்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும் கைபேசி அழைப்பு சில நேரங்களில்  சிலர் தவறான அழைப்பு  செய்வது மிகுந்த வேதனையும் கோபத்தையுமே ஏற்படுத்துகிறது.  பெரும்பாலும் உறவினரோ அல்லது நண்பர்களோ தவறிய அழைப்பு விடும்போது நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது ஆ

மலரும் தேனைத் தருவதில்லை

மார்கழி மாதத்தில் வண்டுகள் மலர்களைத் தேடி வருவதில்லை மலரினில் சேர்ந்திடும் பனியினால் மலரும் தேனைத் தருவதில்லை பனியும் அதிகம் பெய்வதாலே பூக்களும் அதிகமாய் பூப்பதில்லை பெண்களும் பூக்களை நினைத்தே பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை பனியில் தேனிகள் வருவதில்லை பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை அதிகப் பனியால் ஆண்களுக்கும் அதற்கும்  இப்போ விருப்பமில்லை ஆக்கல் குறைந்த காரணத்தால் அழித்தலை ஆண்டவன் செய்வதால் அதனால் மக்களில் பலபேர் ஆலயம் செல்வதே உண்மை வருடக் கடைசி  உனக்கும் வரவு செலவு உள்ளதோ? ஏனிந்த வேதனை இறைவா! இதுவும் உனது செயலா?

சின்ன சின்ன மொட்டுகளே

சின்னச் சின்னப் பிள்ளைகளே சிரித்து மகிழும் முல்லைகளே வண்ணப் வண்ண பூக்களைப்போல் வந்தே சிரிக்கும் வாண்டுகளே நல்ல  நல்ல கதைகளை நாட்டில் நடக்கும் செய்திகளை வானில் மின்னும் நட்சத்திரம் வட்ட நிலவைப் பற்றியுமே தேனாய் இனிக்கும் வார்த்தையிலே தினமும் சொல்லி வந்திடவே தோளில் ஏறித் தினந்தோறும் தொல்லை செய்யும் செல்வங்களே குருவிக் காக்கை கொக்குபோல் குனிந்தும் தாவியும் ஆடவைத்து குழவி குழவி மகிழ்ச்சியாக கொள்ளை கொள்ளும் உள்ளங்களே எல்லை இல்லா கேள்விகளை எளிதில் புரிந்தே தெரிந்திட்டால் கொள்ளை இன்பம் கொண்டேநீ கொஞ்சி நன்றி சொல்வீரே 2014 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் ^^^^^^கவியாழி^^^^^^^

ஆண்களின் மாரடைப்புக்குக் காரணம் பெண்களா?

மாரடைப்பு நோய் என்பது பெண்களை விட  ஆண்களை அதிக அளவில் தாக்குகிறது. அதிகமாக   என்பது சதவிகிதம் ஆண்கள் இவ்வாறான மாரடைப்பு நோய்க்கு உள்ளாகிறார்கள்.சரியான உடற்பயிற்சி உடலுழைப்பு,உணவு கட்டுப்பாடு இல்லாமை ,அதிக அலைச்சல்,பணத்தேவைக்கான நெருக்கடி போன்ற காரணிகளே பெண்களைவிட ஆண்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம்  உண்டாகி மாரடைப்பு ஏற்படுகிறது. மேலும் நம் உடலின் கழிவானது சிறுநீர்,மலம்,வேர்வை,மாதவிடாய்,விந்து வெளியேறுதல் போன்ற  இயற்கை நிகழ்வுகளால் நமது உடலில் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு  நல்ல ரத்தம் இருதயத்திற்குக் கிடைக்கிறது.நாற்பது வயதில் தான் அதிக உழைப்புக்கும் அலைச்சலுக்கும் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி வீடு வாகனம் மற்றபிற பொருட்களையும் பிள்ளைகளின் உயர்கல்வி அவர்களின் எதிர்கால நலன் குறித்த கவலைகள் போன்ற காரணங்களே மனவழுத்தம்,உறக்கமின்மை ,வீட்டில் பிரச்சனைகள் எனப் பல வழிகளிலும் மனிதனின் மனதை முடக்கச் செய்யும் காரணிகளாய் இருக்கிறது உடலில் ஹார்மோன் உற்பத்தி குறையும்போதும் நமக்குச் சில அறிகுறிகளைக் காட்டும் அப்போதே நாம்  மருத்துவரை அணுகி நமது இதயத்தின் இயக்கம், செயல்பாடு,ரத்தத்தின் அடர்த்தி,எ

பள்ளிச் செல்லும் பிள்ளைகளே

பள்ளி செல்லும் பிள்ளைகளே பாடம் படிக்கப் போறீங்களா நல்ல செய்தி அறிவுரைகள் நாளும் கற்கப் போறீங்களா சொல்லக் கேட்ட செய்திகளை சொல்லி வைத்த உண்மைகளை மெல்ல மெல்ல உள்மனதில் மிகவும் நன்றாய் சேர்த்திடுங்கள் தாத்தா பாட்டி சொல்வதிலே தமிழில் சொன்ன கதைகளிலே படித்தால் தானே புரிந்திடும் பள்ளியில் இதையும் படிப்பீரே உலகம் முழுவதும் உங்களுக்காய் உரிய முறையில் எழுதியதை பலதும் கற்றுப் பயனடைவீர் பாரினில் சிறப்பாய் இருந்திடுவீர் இதையே அனைத்து ஆசிரியரும் எடுத்துச் சொல்லி மாணவர்க்கும் கதையில் உள்ள உண்மைகளை கற்றுத் தெளிய  வைத்திடுவீர் உள்ளம் மகிழப் படித்திடுங்கள் உண்மை நிலையும் அறிந்திடுங்கள் உலகம் சிறக்க வாழ்ந்திடவே உயர்ந்த களமே அமைப்பீரே

வேலைக்கு ஆட்கள் தேவை

வேலைக்கு ஆட்கள் தேவை ,ஆண்-பெண் ,அதிகச் சம்பளம், ஏ.சி வசதியுடன் வேலை வாய்ப்பு,தங்குமிடம் உணவு இலவசம்,குறைந்த நேரம், அனுபவமில்லாத,குறைந்த கல்வித் தகுதி இருந்தால் போதும்,வாகனம் இலவசம்,குழந்தைகள் காப்பகம் உண்டு, போனஸ் ,வீட்டுவாடகை , குடும்பத்துடன் தங்குமிடம் இலவசம் போன்ற  பல சலுகைகளுடன் அழைத்தாலும் உள்ளூரில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஆனாலும் மும்பை,குஜராத்,டெல்லி,கேரளா,ஆந்திரா,கர்நாடகா  போன்ற வெளியூர்களுக்குச் சென்று அங்குக் கடுமையாக உழைத்தும் அந்தந்த ஊர்களில் தங்கியும் வேலைச் செய்கிறார்களே ஏன் அப்படி இங்கு நம்மூரிலேயே ஏன் உழைக்க முன்வருவதில்லை .பல நேரங்களில் கொத்தடிமை மீட்பு ,அங்குத் தமிழர்களை அடித்து விரட்டுகிறார்கள்,சம்பளம் கொடுக்கவில்லை  போன்ற எல்லாப் பிரச்சனைகள் இருந்தாலும் உள்ளூரில்  வேலைசெய்வதில்லை  இது ஏன்? யாரால் ? எப்படி? இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதோ? ஏழ்மை என்பதே தமிழ் நாட்டில் இல்லையோ? அல்லது தொழில் வளம் மிகுந்த நிலையில் உள்ளதோ?. தமிழர்களின் பொருளாதார நிலை  உயர்ந்து விட்டதோ? இப்படி எண்ணற்ற கேள்விகள் என்மனதில் எ

விரும்பி உன்னை முத்தமிட...

நண்பரையே இன்று காணவில்லை நாளும் கடந்து போகவில்லை எந்நிலையை எடுத்துச் சொல்ல -அவரன்றி எவரிடமும் மனது இல்லை பொன்பொருளைக் கேட்டதில்லை பெரும் தொகையும் தருவதில்லை என்னிடமும் கிடைப்பதற்கு வழியுமில்லை-அவரும் எனக்கும் சுமையாய் இருந்ததில்லை இரவிலின்று தூங்கவில்லை இன்று மனதில் மகிழ்ச்சியில்லை என்னவென்று புரியவில்லை -எப்படியோ என்னிடம் அமைதி இல்லை திரும்பி வரும் நேரத்தை நான் திசையெங்கும் பார்த்திருக்கிறேன் தெருவோரம் நின்று நானும்-உனக்காய் தேடிவந்து  தவமிருக்கிறேன்

இராய.செல்லப்பா அவர்களை வாழ்த்துவோம்

Image
          எனது நெருங்கிய நண்பரும் நமது வலையுலகில் "செல்லப்பா தமிழ் டயரி "மற்றும் "இமயத்தலைவன்" ஆகிய இரண்டு வலைப்பூக்களை வைத்திருக்கும் அன்பிற்குரிய திருவாளர்.இராய.செல்லப்பா அவர்கள் Corporation Bank ல் துணை பொது மேலாளராகவும் (AGM)  பணியாற்றி ஓய்வுபெற்று இப்போது கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள்  எழுதி வருகிறார்.          இவர் டெல்லியில் பணியாற்றியபோது டெல்லி தமிழ் சங்கத்துடன் இணைந்து பல கவியரகங்கள் பட்டிமன்றங்கள் நடத்தியும்  டெல்லித் தமிழர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து அரியபணியாற்றியவர்.அப்போதே பல தமிழ் ஆர்வலர்களை டெல்லிக்கு அழைத்து  அவர்களைக் கௌரவித்து மகிழ்ந்தவர்.          ஏற்கனவே இரண்டு கவிதை நூல்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.தற்போதும் ஒரு "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் " என்ற கதைத் தொகுப்பையும் வெளியிடவுள்ளார்.மேலும் அகிலஇந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் தனது படைப்புகளை ஒலி & ஒளி பதிவிட்டிருக்கிறார். ""அமரர் பிரபாராஜன் அறக்கட்டளை சார்பாக 'கலைமகள்' நடத்திய சிறுகதைப்போட்டியில்  'சாந்தி நிலவ வேண்டும்'

உறவென்று சொல்ல வெட்கமடா...

சொல்லாமல் கேட்காமல் சுயமாக முன்வந்து கொடுக்கா உறவும் சோம்பலாய் இருக்கையில் அறிவைச் சொல்லாத அப்பாவும்  அம்மாவும் இல்லாத போதும்  இயைந்து எடுத்துச் சொல்லா உடன்பிறப்பும் இருப்பதைக் கொடுத்துத் துணையாய் இன்முகம் காட்டா நட்பும் பொல்லாத நேரத்தில் புரியாத போலியாய்த் தேவையென நடித்தே தள்ளாத காரணம் சொல்லி தாங்க வைக்கும் உறவும் நிலைமை தெரிந்தும் வருந்தாமல் நேரமும் பழிக்கும் மனைவி வயதைக் கடந்தும் வேலையின்றி வருந்தாத வாரிசின் அலட்சியமும்  உறவென்று சொல்ல வெட்கமடா உலகில் இதுவும் உண்மையடா பிள்ளைகள் இருந்தும் தொல்லையடா பிறப்பே தவறாய் எண்ணுதடா @@@@@ கவியாழி  @@@@@@

கூட்டமாய் சொந்தங்கள் அருகில் இருந்தும் ...........

கூட்டமாய்ச் சொந்தங்கள் அருகில் இருப்பர் கொடுப்பதை வாங்கிடப் பலர் வருவர் நோட்டமாய்க் கவனித்து நேர்வழி சொல்லாது-கெட்டும் நோயுற்ற மனதையே குத்திக் கிழிப்பர் வாட்டமாய் வாழ்கையில் வந்தே உதவிடார் வழித்துணை யாருமே வந்திட மாட்டார் வாழ்க்கையில் துன்பமாய்  வாழ்ந்திடும் போதிலே-இருந்தும் வசவுமாய்ப் பழியுமாய்ச் சொல்லத் தயங்கிடார் கூட்டணி சேர்ந்து பழித்தே  பேசுவர் கூடுதல் சுமையாய்த் தனித்தே வைப்பர் பாட்டனும் பேரனைப் பார்க்க மறுப்பர்-ஆனாலும் பாசமாய் இருப்பதாய் அனைவரும் நடிப்பர் ஏழ்மையைப் போக்க யாருமே வந்திடார் ஏசியும் பேசியும் இருக்கத் தவறிடார் ஊரையும் நாட்டையும் உவமையாய்ச் சொல்லியே-வாழ்வில் ஊழ்வினை என்றே பலரும் சொல்லிடார் கேட்டதைக் கொடுத்து உதவி செய்தால் கேளிக்கை பேசலை நிறுத்தி கொண்டால் வாழ்கையின் தத்துவம் விளக்கிச் சொன்னால்-நிச்சயம் வணங்கியே கடவுளாய்  நன்றி சொல்வார் இயன்றதைக் கொடுத்து உதவி செய்து எதிர்காலத் தேவைக்கு  வழி அமைத்து முயன்றுமே விரைவில் முன்னுக்கு வர-உறவே முடிந்தால் அனைவரும் உதவி செய்வீர் ******கவியாழி******

பெற்றோரும் பிள்ளைகளும் .......

          உறவு, உரிமை என்ற பந்தம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் மட்டுமே தொடர்வது. இந்த இரண்டும் செவ்வனே கடைபிடிக்க முடியுமானால்  இந்தப் பிறப்பும் இந்த உறவும் இனிமையாய் இருக்கும்.  இல்லையென்றால் சொல்லொணாத் துன்பமும் மனவலியுமே மிஞ்சும். பெற்றோர்கள், பிள்ளைகளின் நேர்மையான ஆசைகளை  வளர்ப்பதும் அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்ற முயலுவதும்  அவசியம்.             பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமே தம் பிள்ளைகள்  நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குச் சென்று, நல்லவிதமாக மணமுடித்து,   பேரக் குழந்தைகளுடன்  மகிழ்ச்சியாய்  இருந்தால் போதும்  என்பதே ஆகும்.  அதற்காக, அவர்களின் படிப்பு விஷயத்தில் கண்டிப்பாக இருந்தாகவேண்டிய  கட்டாயம் உள்ளது.              அவ்வாறு  படிக்கும் காலத்தில்  பொறுப்புடன் இருந்து  எதிர்காலத்தில் தன்னைத்தானே உணர்ந்து செயல்பட வழிகாட்டுவது  பெற்றோர்களின்   முதல் கடமையாகும். நல்ல உடை, உணவு, சேமிப்பு, சுகாதாரம் நட்புடன் கூடிய நல்ல பழக்க வழக்கங்கள் போன்றவற்றையும் அறிவுறுத்துதல் பெற்றோர்களின் அடுத்த கடமையாகும்.               தாங்கள் வசதியின்றி நடுத்தர வர்க்கத்தைச்

முத்துக்கள் பத்து.(முகப்புத்தகப் பதிவுகள்)

அன்பு எல்லா உயிரிடமும் இருக்கும் அனுதாபம் மனிதனுக்கு மட்டுமே irukkum ________________________________________ இளமைக்கும் முதுமைக்கும் வலையே இன்பமான தளமாக உள்ளது எத்திசையும் உறவு கொள்ள ஏழுகடல் தாண்டியும் இணைக்கின்றது ____________________________________ நண்பனை தெரிந்து கொள்ள நாடுவாய் -கஷ்டமென நட்பின் ஆழத்தை அறிவாய் _____________________________________ பணத்தால் எல்லாம் வாங்கலாம் நல்ல குணத்தால் எதையும் வெல்லலாம் _______________________________ தருகின்ற இரைச்சலும் தவிர்த்திடவே தலையில் கவசம் அணிவீரே _____________________________________ ஏமாந்ததும் ஏமாற்றியதும் நீ தானே? _____________________________________ மனிதன் இறந்தபின்பு மறுபிறவியில்  எந்த சாதியில் சேர்க்கப் படுகிறான்? ____________________________________ இரசாயண கலவையே மனிதன். உயிர்போன பின்பு குப்பைதான் ____________________________________ இரவுக்கும் பகலுக்கும் இமை மட்டுமே சாட்சி இமைகளை மூடிவிட்டால் ஏது காட்சி? ______________________________________ துயரமும் வாழ்கையில் பார்த்தவன் துன்பத்தை

ஊரே கும்பிடும் உத்தமி .........

தனியாக யாரும் சென்றால் துணிவாக எதிர்த்து நிற்கும் தர்பாரும் விலகிச் செல்ல தரையிலே ஊர்ந்து செல்லும் துணிவுள்ள மிருகம் அல்ல துண்டு கயிறு போலவுள்ள பணிவான உயிர் அதுவாம் பயந்து சென்று ஓடுவதாம் ஊரையே காலி செய்யும் உருண்டு நீண்ட மேனியாய் ஒருவருமே பார்க்காத தனியிடமாய் ஒளிந்தே பயந்தே வாழ்ந்திடுமாம் போருக்குப் போவோரை எதிர்த்திடுமாம் பொல்லாத திரவியத்தால் கடித்திடுமாம் பேருக்குச் சத்தமாய் இருந்தாலும் பயமாக ஒதுங்கிச் சென்றிடுமாம் வீறிட்டுக் கத்தி பயந்தால் விரைவாகத் தானும் பயந்தே வேர்விட்டு விஷத்தைக் கக்கிடும் விரைவாக உயிரைப் போக்கிடும் ஊருக்கு வெளியில் வாழ்ந்திடும் உண்மையில் பயந்து ஓடிடும் நீர்வயல் ஓரங்களில் வாழ்ந்திடும் நல்லவளாய் ஊரே கும்பிடும்

நல்லதைச் சொல்லிடும் நட்பு

நல்லதைச் சொல்லும்  நட்பு நாடகம் போலவே இன்றி நன்மையே செய்திடும் வல்லமை நட்புக்கு உண்டாம் உண்மையே எல்லையே இல்லையாம் அன்புக்கு ஏக்கமாய் இருக்குமாம் பார்ப்பதற்கு தொல்லையே இல்லாத நட்பினால் துன்பமும் விலகிடும் இன்பமாய் உள்ளதைக் கொண்டே தொடருமாம் உண்மையைப் பேசியே மலருமாம் ஊரும்  மாறிப் போனாலும் உண்மை நட்பு மாறாது பணத்தால் விலையோ போகாது பண்பால் மறக்கக் கூடாத மனத்தால் அன்றி நல்லன்பை மனிதன் பெறவே முடியாது நல்லவை மட்டுமே செய்யுமாம் நன்மைத் தீமையைச் சொல்லுமாம் எல்லையைத் தாண்டிய அன்புக்கு எளிதில் பிரிவும் இல்லையாம் பிள்ளைகள் பிறந்த பின்புமே பேரனைப் பார்த்துச் சொல்லுமாம்  நடந்ததை மகிழ்ந்ததைச் சொல்லியே நகைச்சுவை பொங்கச் செய்யுமாம் -------கவியாழி--------

சீக்கிரம் எழுந்து விடுவாள்.........

ஏக்கம் மனதில் வளர்த்தே எப்போதும் நம்மைக் காத்து தூக்கம் கெட்டும் நமக்காய் -வாழ்வைத் தொலைக்கும்  உத்தமி அவளே ஆத்திரம் மனதில் வந்தால் அதையும்  உள்ளுள் வைத்தே அன்புடன் அடக்கி இருந்தே-நம்மை ஆசைக் கோபமாய்க் கடிவாள் சாத்திரம் அனைத்தும் படித்து சரியெனப் பட்டதை மட்டுமே சீக்கிரம் விளக்கிச் சொல்லி-கதையாய் சிறந்திடப் புரிந்திட வைப்பாள் மிச்சம் மீதியைத்  தின்று மேனியைக் கெடுத்தும் நமக்காய் உச்சி முகந்தே அருகில்-தொட்டு உண்மை மகிழ்ச்சியைத் தருவாள் சீக்கிரம் எழுந்து விடுவாள் சேவைகள் பலதும் செய்வாள் சிந்தனை நமக்காய்ச் சுமந்து-மனதால் சிரித்தே சமைத்துத் தருவாள் சீருடன் உடம்பை மதியாள் சீக்கிரம் தூங்க மாட்டாள் பாத்திரம் அனைத்தும் கழுவி-இறுதியில் படுத்து உறங்கச் செல்வாள் அவள்தான் பெற்ற அன்னை.....

உடலும் கழிவாய் மாறும்...

உடலும் கழிவாய் மாறும் உயிரும் பிரிந்து போனால் உணர்ந்தே நாளும் வாழ்ந்தால் உண்மை வாழ்க்கை  புரியும் தூக்கி செல்ல நால்வர் துவண்டே அழவும் சிலபேர் தொடர்ந்தே வந்திட உற்றார் தொலைத்த குடும்ப உறவோர் வாழ்ந்த வாழ்க்கை  போற்றி வாழ்த்தும் நண்பர் கூட்டம் வணங்கிச் செல்லும் மக்கள் வருந்தி அழைத்தால் வருமா ஆக்கம் செய்த பணிகள் அனைத்தும் முன்னே வருமாம் அன்பால் செய்த செயலே அருகில் நின்று அழுமாம் ஏக்கம் இல்லா வாழ்வும் ஏழ்மை உணரா உயர்வும் என்றும் நன்மை செய்யா எவரும் நம்மை மதியார் தூக்கம் விழித்துப் பார்க்கத் தோழமை வேண்டும் உலகில் தொடர்ந்தே குழிவரை வருவோர் துயரம் கண்டிட வேண்டும் உயிரும்  உள்ள போதே உரிமை  கொண்டோர் மகிழ உணர்வை மதித்துச் செய்தால் உடலும் மனமும் அழுமே எல்லா உயிரும் இதுபோல் ஏந்தல் செய்வது மில்லை பொல்லா மனித இனமே புரிந்தால் வாழ்க்கை நலமே ---------கவியாழி----------

எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் ......

பாம்பும் தேளும் பூரானும் பார்த்தே ஓடி மறைந்திடுமாம் பகையாய் நினைத்தே அடித்தாலே-மிரட்டிப் பயந்தே நம்மைக் கடித்திடுமாம் வீம்பாய்க் காளையை மிரட்டினால் விரைந்தே வந்து முட்டிடுமாம் விலங்குகள் பலதும் அதுபோல-மிரண்டு வீணாய் நம்மைத் துரத்திடுமாம் வேண்டா வெறுப்பாய் பழகினால் வேற்றுமை வந்தே பிரித்திடுமாம் விஷயம் இன்றி வாதிட்டால்-முடிவில் வீணே சண்டை வந்திடுமாம் ஈன்ற  பொருளைக் காத்தாலே இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம் இல்லை என்றே சொல்லாமல்-இயன்றால் இருப்பதைக் கொடுப்பதும்  நலமாகும் சோதனை  துயரம் ஏழ்மையுமே சாதனை செய்ய வழிதருமாம் சோம்பலை நீக்கி உழைத்தாலே-பலனாய் செல்வம் சேர்ந்தே மகிழ்ந்திடுமாம் எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் எதிராய் காரியம் கெட்டிடுமாம் எதிலும் பொறுமை  காத்தாலே-அதனால் எல்லா நன்மையும் கிடைத்திடுமாம் ......கவியாழி........

அவளுக்கு இப்படி செய்வது ஆனந்தமா?கோபமா ?

ராத்திரி நேரத்திலே குளிருது ரகசிய ஆசையும் தொடருது போர்த்திக்கத் தோணுது தேடுது போர்வைய பார்த்ததும் தோணுது தனிமையை இப்போ வெறுக்குது தலைவியைத் துணைக்கு அழைக்குது இளமைக்குத் தேவையும் கிடைக்குது இனிமையும் சிணுங்குது தொடங்குது இதழ்களை வருடிட விரும்புது இருவிரல் விலக்கிடத் துடிக்குது இன்னும் அதிகமாய் இருக்குது இமைகளும் ரகசியம் சொல்லுது அணைத்திட்ட இடைவெளி குறையுது ஆசையும் தொடர்ந்திடச் சொல்லுது அவளுக்கு இப்படிச் செய்வது ஆனந்தக் கோபமாய்த் தோணுது அடுத்ததை மகிழ்ச்சியாய் முடித்ததும் ஆசையும் அடங்குது முடிந்தது வாழ்கையில் இன்பமாய் இருப்பது வளமாய்ச் சேர்த்திடும் மகிழ்வன்றோ

மகிழ்வாய்ப் பாராட்டுங்கள்

           எப்போதும் எல்லோரையுமே மகிழ்வாய் பாராட்டுங்கள் அப்போதுதான் அவர்களின் செயல் அங்கிகரிக்கப்படுகிறதுப் பின்பே அவர்களுக்கு ஆனந்தம் கிடைக்கிறது.அதனால் செய்த செயலைச்  சீர்தூக்கிச் சிறப்பாய் செய்தோமா இல்லை  இதைவிட இன்னும் சிறப்புறச் செய்யலாமா என்ற சுயப்பரிசோதனைச் செய்ய வாய்ப்புக் கிடைக்கும்.              சிறுபிள்ளைகளும் சரி,மாணவர்களும் ,நம்முடன் வேலைசெய்யும் சக ஊழியர்களும் .பழகும் நண்பர்களும் அல்லது வயதில் மூத்தப் பெரியவர்களும் சரி இம்மாதிரியான அங்கிகாரத்தை எதிர்பார்பார்கள் அல்லது செய்த செயல் அவர்களை எப்படி மகிழ்வித்தது என்று நினைத்து  பாராட்டியதை எண்ணி மகிழ்வார்கள்.            ஒருவர் தான் செய்யும் செயலில்விருப்பப்பட்டோ  மனம் ஒன்றியோ அல்லது செய்யவேண்டிய கட்டாயத்திலோ செய்யும்போது பாரட்டுக் கிடைக்குமேயானால் அதைவிட ஆனந்தம் இருக்காது.ஒவொரு செயலுக்கும் ஒவ்வொருமுறையும் பாராட்டுக்கிடைக்கும்போது நிச்சயம் மனம் மீண்டும் மீண்டும் செய்யும் உத்வேகத்தைத்தரும்.           உதாரணமாய் ஒரு அவசர அவசியமான வேலைக்காக வெளியூர் சென்று வரவேண்டும் என்ற கட்டாயம் வருகிறது விருப்பப்பட்டோ அல்லது கட்டாயத்தின்

கருவைச் சுமந்தவள்

கருவைச் சுமக்கச் சொல்லி கடனாய்த் தந்தவன் ஒருவன் கருவே உருவாகி வளர்த்தும் கடமை என்றே கொடுத்தால் உடமைப் பொருளும் பிடுங்கி உணவாய்த்  தின்பவள் ஒருத்தி உரிமை  கொண்டாடி மகிழ உடலைத்  தந்த அவனும் உயிரைக் கொடுத்தும் மயங்கி உற்றார் மறுத்த பிள்ளை பெற்றோர் கடமை மறந்து போதையில் வாழ்தல் முறையா இதனை எல்லா மதங்களும் இழித்தே கூறி வந்தாலும் எப்படி மகிழ்ந்து வாழ்வாய் ஏனோ மறந்தாய் இகழ்வாய் மனிதன் மட்டும் இதனை மறந்தே வாழச் சொல்லும் கடமை துறக்கச் சொன்ன கடவுள் உண்டா மகனே ...............கவியாழி..........

கடந்தும் செல்வது நலமோ.............

எத்தனைப் பெரிய மனிதர்கள் எப்படி எளிமையாய் இருந்தே சத்தியம் தவறா வழியில் சமத்துவம் போற்றி  வாழ்ந்தே நித்தமும் மகிழ்வாய்  உணர்ந்த நேர்வழி நெறிமுறை வளர்த்தே சித்தமும் சிவனுமாய்ப் போற்றிச் சீராய்த் திருத்திச்.சொல்லி குற்றமும்  தவிர்க்க வேண்டிக் குறைகளைக் கண்டு களைந்தே அப்பனும் பாட்டனின் வழியில் அன்று வாழ்ந்ததைச் சொல்லி சிற்பமாய் அறிவால் செதுக்கிச் சீராக்கி நேர்வழியில் வாழ அற்பமாய்ச் செய்யும் தவறும் அறியச் சொல்லிக் கொடுத்தே தப்பேதும் இல்லா வாழ்வை தினமும் சொல்லி வந்தே முப்போதும் மகிழ்ந்து வாழ முறையாய் சொல்லி வாழ்த்தினர் இப்போது நிலைமை இல்லை இருப்பதோ நிலைமை  தலைகீழ் தப்பதை உணர்ந்து வருந்தி தகையோரை மதிப்போர் உளரோ கற்பதை முறையாய் சொல்லாக் கல்வியால் வந்த வினையோ காலத்தை உணர்ந்தே நாமும் கடந்தும் செல்வது நலமோ

கார்த்திகைக் குளிரில் காதல் .......

கார்த்திகைக் குளிரில் காதல் கண்ணனின் அருகில் மகிழ்வாய் காரிகைக் கூட்டமும் இணைந்தே காத்திடும் காரணம் ஏனோ பலரும் சூடாய் இருக்க பருவம் மாறிய மழையும் பாவையர் மனதும் இனிக்க பயனாய் இருப்பதும்  தவறா பூத்திடும் பூக்கள் கூட பூவையர் தலையில் சூடி புரியும் லீலைகள் காண புகலிடம் தேடி வருமாம் பூச்சிகள் ஒன்றாய் கூடியே பூத்திட்ட மலர்களைக் கண்டு போட்டிகள் நடத்திட வேண்டி புதிதாய் ஸ்வரங்கள் தருமாம் பூத்த  மலர்களைத் தேடி புறப்பட்ட வண்டினைப் போல புயலாய்க் கண்ணன் வந்தே புதுமை அனுபவம் தருவான் விலங்குகள் ஒன்றாய் அமர்ந்து வேடிக்கை பார்த்தே சிரித்தே வீதியில் ஆடி இன்பமாய் விரும்பியே மகிழ்வாய்  இருக்கும் இரவில் இன்றி பகலிலும் இனிமை விரும்பும் இனங்கள் இமையால் பேசும் கண்ணன் இனிமை தருமே கார்த்திகை [[[[[[[[ கவியாழி]]]]]]]]

சித்தன் அருளே வேண்டும்.........

சித்தன் அருளே வேண்டும்-தினம் சிந்தனை செய்யவே வேண்டும் நித்தமும் நினைக்க வேண்டும்-மனதில் நிம்மதி கிடைத்திட வேண்டும் சத்தியம் போற்றிட வேண்டும் -நல்ல சங்கதி செய்திட வேண்டும் பத்தியம் இருந்திட வேண்டும்-எனக்கு பகலவன் துணையும் வேண்டும் நேர்மையாய் வாழ்ந்திட வேண்டும் -அன்பை நேசித்தே போற்றிட வேண்டும் சீர்மிகு நட்பும் வேண்டும் -என்னை சிரம்போல் காத்திடவேண்டும் கஷ்டமும் தீர்ந்திட வேண்டும் -எல்லோர் கவலையும் தீர்த்திட வேண்டும் இஷ்டமாய்ச் சிவனை நினைக்கும் -நிலை இனிதே நாளும் வேண்டும் எல்லா  வளமும் பெற்று -வறுமை இல்லா நிலையே வேண்டும் பொல்லா எதிரியும் மாறி -மீண்டும் நட்பினைத் தொடர்ந்திட வேண்டும் கொடுத்து உதவி செய்ய-பணம் குறையே இன்றி வேண்டும் கொடுக்கும் மனமே எனக்கு-நாளும் குறை வில்லாமல் வேண்டும் குறைகள் அகன்றே தீர-மனம் குளிர வணங்கிட வேண்டும் குடும்பம்  மகிழ்ந்து வாழ-சித்தன் கூடவே துணையாய் வேண்டும் ########கவியாழி########

ரசித்தவர்கள்