Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

உடல் தானம் செய்வீர்

Image
உடல் தானம் செய்வீர் உன்னத முடிவெடுப்பீர் கடல் கடந்து பார்த்தால் கட்டாயம் நீயும் செய்வீரே உயிர்போன பின்னே உடம்பென்ன செய்யும் மண்ணரித்து  புழுதின்னும் மரம்செடி கொடியே வளரும் பொன்னெழுத்தில்  போற்ற புகழோடு பலர் வாழ என்னிருத்தி பாருங்கள் எண்ணியதை சொல்லுங்கள் அவயம்  இல்லார்க்கு அனைத்தும் கிடைக்கும் அடுத்தவர்  நலம் வாழ அவசியமான முடிவு செய்

இதழன்றி என்ன தருவாய்? அன்பே!

Image
    அருகில் வராதே அணைத்து கொள்வேன் அனைவரின் முன்னே இணைத்துக்கொள்வேன் அடுத்த நிமிடம் சுவைக்க தோன்றும்-எனக்கு அதற்கும்  மேலும் தாண்டச் சொல்லும் இனிக்கத்தானே இதழைப் பிடித்தேன் இதை மறுத்தால் என்ன செய்வேன் இன்று  மழையில் இந்த நேரம்-எனக்காக இதழன்றி  என்ன தருவாய்  அன்பே என்னை மீறி எதுவும் நடந்தால் எனக்கும்  உனக்கும் பங்கு  உண்டு பினக்கின்றி  பிரியமாய் தந்திடு-உரிமை பிணைப்பை உண்டென உணர்ந்திடு நெஞ்சிலே நெருப்பு வார்த்தாய் தீ கொஞ்சமாய்  பற்றி வர செய்தாய் துஞ்சமில்லை எனக்கு தூக்கமில்லை வஞ்சியே வா வனப்பிதழைத்தா !

கவியாழி : முதல்நாள் இரவு

கவியாழி : முதல்நாள் இரவு :  இரவெல்லாம் விழித்திருந்து இமை மூடா தவமிருந்து ஊரெல்லாம் கூடிவந்து-இன்பமாய் உற்றாரின் நலம் பகிர்ந்து விளக்கு தோரணம் விடியும்வர...

இளமை இருப்பது சிலகாலம்

Image
  இளமை இருப்பது சிலகாலம் எளிதில் வசப்படும் வரும்காலம் கனவு கண்டிடு நிகழ்காலம்- கனிந்திடும் வெற்றி  உன்கையில் எதிர்காலம் வெற்றியின்  நிழலை தீண்டி விளையாடு வேகமாய் வந்திடும் உன் பின்னாடி ஒற்றுமை உள்ளுள் நினைத்து போற்றி-உண்மையாய் ஒருநாளும் மறவாமல் உழைத்திடு உயர்ந்திடு சொல்லுவர் பலர் சொன்னதை மறந்து வெல்லுவ தேன்றே வேதமாய் எண்ணி துள்ளி விளையாடு துவளாமல் ஓடிடு-முயன்று அள்ளி கரை சேர்ப்பாய் அறிவோடு பட்டங்கள் தேவை யில்லை படித்த சட்டங்கள்  துணைகொண்டு வெல்ல கட்டங்கள்  கடந்து  கவலையும் மறந்து-உயரத்தை எட்டிவிடு எளிதில் வெற்றியை தொட்டுவிடு

நினைவிழந்து நிம்மதி கெடும்

Image
ஆரோக்கியம் அவசிய மில்லையென அவர்களுக்கு தெரியவில்லை  பின் அமைதி கெட்டு அழிவுப் பாதை ஆவது- ஆசையால் ஆத்திரம்  கொண்டு  ஆளையும் கொல்வது சாத்திரம் தேடார் சரித்திரம் அறியார் போக்கிட மின்றி  பெரும்பினி சேர்ந்து மக்களை கொல்லும் மடைமை யாகி  -பணம் பெரும் ஆசை தரும்பின் தவறு செய்யும் குடும்பம் கூடி பேச மறந்து குறுகி நெடும்பகை தேடி நேசமற்று  மாறும் நினைவிழந்து  நிம்மதி கெடும்-வாழ்க்கை நிச்சயமற்ற தன்மையாகும் நிலைமை மாறும் தரித்திரம் சேரும்  தயவு கெடும் தன்னுள் சிந்திக்கா தன்மை யாகும் பிரித்திட மனதில்  தினம் பேசும்-குழப்பமாய் பிள்ளை உற்றார் நேசம் மறையும் பெரியவர் பெண்டிர் பிள்ளை மறந்து உரியதை நாடி உள்ளம் போகும் பேராசையால் பெரும்பிணியும் சேரும்-மனித பிழைப்பென எண்ணி பித்தாய் மாறும் உழைக்க மறந்து உண்ண தோன்றும் உயிரை பிடுங்கி சொத்தும் சேர்க்கும் மலைக்க வைத்து மனதை உருக்கி-இறுதியில் மாமிசமாக்கி உள்மனமே பிணமாகும்

மழைக்காலம்

Image
மழைப்பூச்சி மழை  வரும்   திசையை மகிழ்வுடனே   சொல்லும் மடியும்முன்னே! மறுபடியும் காண மழைக்காலம்  தான் காண வேண்டும்!! துணைக்காலமும் குறைந்து ஓடி இளைத்துளிரில் மறைந்துகொள்ளும் உன்னைப்போல் என்னுள் தங்கி விடும் !!!   தட்டான் பூச்சி ஓடி  ஓடி  களைத்தாலும்  உடனடியே  சிக்காது  ஒளிந்திருந்து  பார்த்தாலும் உவப்புடனே   பறந்துவிடும் தேடிப்பிடிததும் துவண்டுவிடும் உன்னைப்போல!!!    நீர்த்தேரை குதித்து  வரும் கொண்டாடி  மகிழும் பிடிக்கப்போனால் பாய்ந்து  ஓடும் கடிக்காது கண்ணால்  பயம் காட்டும்  உன் ,  கண்ணைப்போல!!!

திருவிழா தொடங்கியாச்சு

Image
  திருவிழா தொடங்கியாச்சு தெருவெங்கும் கூட்டமாச்சு உருமாறி  மனசெல்லாம்-அன்பான  உண்மையாக  மாறியாச்சு நவராத்திரி தொடங்கியதும் நண்பர் இல்லம் பார்த்தாச்சி நலம் கேட்டு சிரித்து-நட்பாக நாளெல்லாம் மகிழ்ச்சியாச்சி ஆயிரம் கஷ்டமானாலும் அடுத்த மாசம் தீபாவளி அடுக்கடுக்காய்  செலவுகள்-கடனும் அருகில்வர முடிவாச்சி சின்னவங்க பெரியவங்க செலவு செய்ய உள்ளவங்க சேர்ந்து பேசி முடிவாச்சி-சிக்கனமாய் சொந்த பட்டியல் தேர்வாச்சி வீட்டு  தலைவருக்கு விலைவாசி கவலையாச்சி வேண்டிய செலவு  விபரம்-மனதில் வேகமாய் நாடி துடிச்சாச்சி

வாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடு

Image
வாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடு வார்த்தைகள் பலவிதம் மறந்துவிடு தோல்விக்கு பயமில்லை துணிந்து விடு-மீண்டும் துயரத்தை மறந்து அவனுடன் இணைந்துவிடு நாட்களை கடத்தி நமக்கென்ன பயன் நாமிங்கு இணைவதால் என்ன பிழை பூக்களை போல்  நீ வாடுவதை- புரிந்தும் ஏக்கமாய் உள்ளதே எழுச்சியும் கொள்ளுதே தூங்கி எழுந்ததும் துணை தேடிடும் ஏங்கி  இழந்ததை நாடிடும் இன்பம் தாங்கித்தான் இருப்பேனே  துணையாக-என்றும் பாங்கி உன்னை பார்த்திடுவேன்  நலமாக நிலவுக்குள்  நாம் நடந்தால் நிம்மதி நேரம் செல்லும் முன்னே சொல்லடி ஈரம் இருக்கும் வரை உன்மடி -இளமை தூரம் அதிகமில்லை  துணிந்து நில்லடி நிலவு தேய்ந்தாலும் மீண்டும் எழுந்திடும் உறவு மறந்தாலும் உரிமை கிடைத்திடும் கனவு  மீண்டும் உன்னை துரத்தி- இறுதி காலம் முடியுமுன் ஆசையை  நிறுத்தி உள்ளதை சொன்னால் உணந்திட மாட்டார் சொல்லென சொல்லி  சிதைத்துடுவார் நல்லதை சொல்லி அழைக்கின்றேன் -நட்பின்றி இல்லறமாக கிடைக்க  நான் ஏங்குகிறேன்

ஆயுதபூஜை - மகிழ்ச்சியா? நிகழ்ச்சியா?

Image
  முதலாளி சொன்ன  நேரத்தில் செய்ய முடியல செய்த பொருளை -வியாபாரி கேட்க ஆளில்லை   தொழிலாளி ஓடாத இயந்திரம் உருகாத  வியர்வை தேடாத பாட்டு-தொழிலாளி தேவையில்லை  எனக்கு குடும்ப தலைவன் மின்சாரம்  இல்லாது மிச்சமிருந்த  சாப்பாடும் மிளகாய் வெங்காயம்-பழைய கஞ்சிதான் குடிக்கணும்   மனைவி சாயங்காலம் செய்திட்ட சரியா  வேகாத சப்பாத்தி குருமா-வழியில்லை சாப்பிட்டுத்தான் ஆகணும் பிள்ளைகள் சுண்டலும் இல்லை கிண்டலும் இல்லை கடமைக்காக இன்று -கடலைப்பொறியும் கஷ்டமாம் என்ன சொல்ல?

கல்வி (காசு பார்ப்போரின்) கடவுள்

Image
கல்வி கடவுளென நேரில் கண்டவர்கள் கூறுவதால் சொல்லி கொடுத்த-நல்ல ஆசிரியரை மறப்பது தகுமோ? நல்லொழுக்கம்-நேர்மை நற்பண்பை போதித்த நம்பெற்றோரையும் -மறந்து நாடுவது கோவில் தானோ கல்வி கட்டணம் அள்ளி கொடுத்தாலும் கண்டபடி அங்கு-இருந்து திட்டு வாங்கினாலும் புத்தகத்தை துடைத்து-அதில்  அழகாய் பொட்டிட்டிட்டு விபூதி பட்டையில்-விரைவாக குங்குமம் சந்தனம் வைத்து அர்ச்சனை செய்தால்-படிப்பு அனைத்தும் புரியுமோ? தட்சனை கொடுத்தால்-படிப்பின் தரம் கூடுமோ? நம்பிக்கை நல்லதே! நாளும் படித்தால் நல்ல மதிப்பெண்-வெற்றியும்  நன்றுகிடைக்குமே !!

சகோதரியின் அன்பு

அம்மாவின் அன்பு முதன்மையானது அதற்க்கு ஈடு இணை சொல்லவே முடியாது அதற்க்கு நன்றி சொன்னால் அர்த்தமாகாது  மனைவி என்பவள் வாழ்க்கையின் அங்கம அவளும் வாழ்வில் அங்கமே தானே ஒழிய அவளுக்கும் நன்றி சொல்ல நிர்பந்தமில்லை ஆனால்,இடைப்பட்ட இளவயது காலங்களில்  நமக்கு வாழ்க்கை கல்வியை கற்றுத்தருவது அம்மாவோ ஆசிரியரோ அப்பாவோ இல்லையென்று சொல்வேன் அதற்க்கு அர்த்தம் நமது உடன்பிறந்த சகோதரிகள் மட்டுமே சகோதரனை தவிர்க்கலாம் காரணம் அன்பு ஆசை நேசம் எல்லாமே சகோதரியிடம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் அவர்கள் வாழும் தத்துவமாக வழிகாட்டியாக இருந்திருப்பதால் தான் நம்மால் ஒழுக்க நேரியோடும் உயர்வான படிப்போடும் உன்னதமான அன்போடும் இருக்க முடியும் எனவே வாழ்க்கையயில்  சகோதரிகளின் அன்பு பண்பு பாசம் நேசம் மறக்க முடியாதது  மறக்கவும் கூடாதது

மின்சார இரவு

Image
  மின்சாரம் இல்லாததால் மின்விசிறி தன் சுவாசம் இல்லாமல்  இருந்தது இடியுடன் மழை இருவரையும் சேர்த்து-சுகமாய் இன்னிசை வேண்டியது  ஏக்கத்துடன் பார்த்தது இருவரையும் சுவைத்த இரு கொசுக்கள் இணைந்து பாட்டு பாடியது  இன்னலாய்  பசிதுறந்தும் பக்கமிருந்தும் வெட்கமாய் -மனதை வேண்டியது வீழ்த்த தூண்டியது வேண்டியது மேடான பகுதிகளில் மெல்ல மெல்ல சூடான  மூச்சு காற்றுடன் நகர்ந்து மேலிதழை கவ்வி கொண்டான்-மங்கையை மீண்டும் மீண்டும் சுவைத்தான்  மகிழ்ந்தான் தீராத மோகத்தில் தினமும் ஏங்கி பூவாக இருந்தவளை கசக்கி பிழிந்தான் மேலோடு மேல் மோதி மெல்லிய-வலியுடன் மார்போடு  அணைத்தான்  மீண்டும் செய்தான் யாரோடு தர்க்கம் எதற்காக தயக்கம் தேனுண்ட வண்டாய் திகட்டிய வேளையிலே இசை வருவதுபோல் இளங்காற்று வீசியது-இன்பத்தை  இசையோடு போற்றியது இன்பத்தேர் ஒட்டியது நன்றி சொன்ன நம் தலைவன்  நாணத்தோடு இன்னும் வேண்டுமா  இந்நிமிடம் போதுமா உண்ணும போதெல்லாம் உன்வாசம் -இரவு சொன்ன  கனவிதுவே சுவைக்கூடி கண்டதுவே

அம்மா வருவாயா ?

Image
உயிர் பிடித்து உடல் கொடுத்து உள்ளத்தில் நல் அன்பை விதைத்து நல்பிள்ளையாய் நாளும் வளர்த்து-என்னை செல்லமாய்  நன்கு  சீராட்டி வளர்த்தவளே அப்பனை அடையாளம் காட்டி எனக்கு அன்பையும் பண்பையும் ஊட்டி வளர்த்து அண்ணன் தம்பி  உறவுகளும் சொல்லி-உரிமைக்கு அக்கா தங்கை கடமைகளும் போதித்தாய் கதைசொல்லி தூங்க வைப்பாய் கருத்துக்களை பேசவைப்பாய் நாளும் காண்பவர் எல்லோரின் உறவு சொல்வாய்-விழித்ததும் கண்டவரின்  கண்படுமென பொட்டு வைப்பாய் தான் உணவு உண்ண மறந்தாலும் நான்  தூங்க தாலாட்டு சொன்னவளே ஏனென்ற கேள்வி இன்றி எதிலும்-தப்பின்றி எந்நாளும் என்னுள் அன்பை சேர்த்தவளே கள்ளமில்லா அன்பை  கனிவுடன் தந்தவளே கருவாக  என்னை உருவாக்கி சுமந்தவளே பெரிதாக  அன்பும்  குடும்ப நெறியும்-குறைவின்றி உருவாக்கி வளர்த்தவளே உலகை உணர்தியவளே   சொல்லோர்கள் தப்பாய் என்னை  சொன்னாலும் எல்லோரையும் பதில்  எச்சரித்து அனுப்பிடுவாய் செல்லமாக செய்யாதே என கண்கலங்குவாய்-யாரின்று மெல்ல புரியவைத்து  மேனியை தட்டுவார்கள் என்னால் எழுத முடியவில்லை உருவாய் எதிரில் நீயே நிற்பதுபோல்எண்ணுகிறேன் சொன்னால் வார்த்தையில் அடங்காது-இறந

இளமையில் இன்பம் இழப்பதோ நெஞ்சம்

Image
கல்லூரி செல்லாமல் கண்டபடி சுத்துறான் கண்டதையும்  பார்த்து கனவிலே மிதக்கிறான் உண்டதை மறந்து உடனுணவு  தின்கிறான்- வயிற்றில்  உபாதை கெட்டதும் மருத்துவரை பார்க்கிறான்   இள வயதில் நலமின்றி தவிக்கிறான் இமை மூடா காணொளியில் கிடக்கிறான் துணை நாடி வலைப்பக்கம் போகிறான்-வீட்டில் இணை வந்தபின் முடியாது போகிறான் நலனை  நாடாமல் நேரத்தில் உண்ணாமல் பலமணி நேரம் வேலை செய்து பத்திரத்தில்  பணத்தை முழுதும் போடுறான்-அப்புறம் பாதுகாத்து  பல நாட்களை கழிக்கிறான் கஷ்டமான  நேரத்திலும் காசு சேர்க்கிறான் கஷ்டமெல்லாம்  தீர்ந்தப் பின்னே  அதை இஷ்ட மான இடத்தில் பதுக்கி- வயித்துக்கு இஷ்டம்  வரும்போது சாப்பிட மறுக்கிறான்   பலநூறு செலவு செய்து பயந்து பலவேறு பரிசோதனை செய்கிறான் பலலட்சம் பணம் கொடுத்து - தொலைக்கிறான் பயந்து நடுங்கி தினமும் சாகிறான் ஜோடியாய் சேர்ந்து சோதனைக்கு சென்றால் ஜொள்ளு  விடும் கூட்டம் அங்கே வேடிக்கை பார்த்து விதமாய் சிரிக்குது-அங்கே வாடிக்கையாக்கி தினம் பணம் பாக்குது வாழ்க்கையை தொலைத்து விட்டு தினம் வாடிக்கையாகி அங்கே பணம் செலவழித்து தேடிய செல்வம் மறந்து பித்தனாகி

பெண்மையின் பேரின்பம்

Image
       நாள்பார்த்து நல்ல நேரம் பார்த்து நல்லோர்கள் வாழ்த்து நல் சொல்ல பார்த்து பேசி இருவீட்டாரும்-மகிழ்ந்து சேர்த்து வைத்த திருமணம் சிறப்பாக தாலி கட்டியதும் தவம் ஆரம்பம் தனியறையில் நாளும்   ஏற்படும் பூகம்பம் தாகமென கடக்கும் முப்பதுநாளும்_ ஆசை தாகமது மட்டும் தணியும் முடியும்! கருவுற்றதும் கனவுகள் ஆரம்பம் அதை கருத்தாய் கவனித்து சினம் கொள்ளாமல் சிறிதளவும் அசைக்காமல் உருவேற்ற- உள்ளத்தில் சீரான முகமாக்கி ரணத்தையே உணவாக்குவாள்! அன்பையும் நற்பன்பையும் நாளும் சொல்லி அன்னையின் தவிப்பை அன்றே சொல்லிடுவாள் வயிட்றை தடவி வழியெல்லாம் பார்த்த- அறிவை பயிற்றுடுவாள் மகிழ்வாள் மனமெல்லாம் பூரிப்பாள்! பிறக்குமுன்னே பிள்ளை   செய்யும் சேட்டையை பிறரிடம் சொல்வாள் நாளும் சிரிப்பாள் பித்தாய் இருப்பாள் பிறப்பை கேட்பாள்- பூவே இத்தனை நாளாய் இதற்குத்தானே என்பாள்! நல்லோரின் நல் ஆசியுடன் பெயரை எல்லோர் நினைவில் சொல்லி வைத்து பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி-குழந்தைக்கு எல்லோரும் கூடி தாயை-சேயை வாழ்த்துவார்கள்

இனிமை உலகத்தை ரசிப்போம்

Image
    அவள்:மேலோட்டமாய் பார்க்காதே              மேனியை திருடாதே-எதிர்பார்த்து              மேலும் கீழும் பார்த்து              மெதுவாய் தொடாதே அவன்:மெல்லிய காற்றும்              மிதமான சூழ்நிலையும்-தொட்டு              துள்ளிவிளையாட  தோணுது              தயக்கமாய்  இருக்குது               அவள்:அப்படி பார்க்காதே              அருகில் வராதே -இருந்தாலும்              அள்ளி அணைக்கத்தான்              ஆசையை தூண்டுது அவன்:இன்னும் ஏனோ               இணக்கம் தானோ-இப்போது               இனிமை  நமக்கு               நல்ல சமயம்தானே அவள்:சொல்லி பார்த்தேன்              மனதை மெல்ல -மென்மையாய்              வெள்ளமென  அதை              உருக்கிவிட்டாய் அவன்:துள்ளி விளையாடியபின்              இல்லம் செல்வோம்-துவளாமல்              இணைந்து செய்வோம்              புனைதலில்  பேரின்பம் இருவரும்:எண்ணத்தில் இணைந்தோம்                     வண்ணமாய் கலந்து-வாலிப                     விருந்தை பகிந்திட்டோம்                     உண்மையாய் இருப்போம்        

எப்போதும் வேண்டும் !!

Image
நேசம் வேண்டும் நேர்மையாக வேண்டும் நெஞ்சுருகி  நாடவேண்டும்  நீ நியாயமாக இருக்க வேண்டும் கொஞ்சவும் வேண்டும் குறைகளை  அறிய வேண்டும் குற்றமெனில் கூற வேண்டும் கூடவே நீ  துணையாக வேண்டும் சுகமாக  வேண்டும் சுற்றத்தில் நீ வேண்டும் கற்றுதர நல்லவை வேண்டும் கடும் சொல்லால் திட்ட வேண்டும் நற்றமிழ் வேண்டும் நாளும் துணை வேண்டும் நல்லோர்கள் ஆசி வேண்டும் நாள்தோறும்  அது கிடைக்க வேண்டும் எப்போதும் வேண்டும் என்னுடனே நட்பு வேண்டும் எல்லாமுமாய் இருக்க வேண்டும் எனக்கு,உன்னுயிரில் இணைய வேண்டும்!

இன்று அம்மாவாசை

Image
காலையில் எழுந்ததும் கடமையாக செய்வது மனதில் கருத்தாய் நிறுத்தி நினைவில் வைத்து இறந்த பெற்றோரை நிறைந்த மனதுள் நினைக்கும் நாள்! இந்த நாளில் மட்டும் சொந்த நாளாய் நினைகிறேன் பிள்ளை பருவத்தை மெல்ல நினைக்கிறேன் சொல்ல வார்த்தையில்லை சொல்வதில் வெட்கமில்லை சின்ன பிள்ளைபோல சாகும்வரை அன்புடன்  இருந்ததை! எப்போதும் உண்மையான எள்ளளவும் குறையாத அன்பினை உள்ளமெங்கும் உள்ளதை உள்ளபடி நினைத்து அழுகின்றேன்!!! ஒருபொழுது பட்டினியாய் உங்களை நினைத்து மடிகிறேன் எள் தண்ணியிட்டு எனது இறந்தோரை நினைத்து நல் மனதோடு நினைதிட்டு  நாள் முழுதும் விரதமும் உங்களை நினைத்து உளமாற நினைக்கும் நாள் இந்த  நாள் மட்டும் இமைகளுக்கு  இருப்பதில்லை உறக்கம் என்றுமே மறந்ததில்லை உங்களின்  அன்பான ஏக்கம்

அம்மா.....வருவாயா? (மீண்டும் )அன்பை .....தருவாயா?

Image
http://tamilmanam.net/ உயிர் பிடித்து உடல் கொடுத்து உள்ளத்தில் நல் அன்பை விதைத்து நல்பிள்ளையாய் நாளும் வளர்த்து-என்னை செல்லமாய்  நன்கு  சீராட்டி வளர்த்தவளே அப்பனை அடையாளம் காட்டி எனக்கு அன்பையும் பண்பையும் ஊட்டி வளர்த்து அண்ணன் தம்பி  உறவுகளும் சொல்லி-உரிமைக்கு அக்கா தங்கை கடமைகளும் போதித்தாய் கதைசொல்லி தூங்க வைப்பாய் கருத்துக்களை பேசவைப்பாய் நாளும் காண்பவர் எல்லோரின் உறவு சொல்வாய்-விழித்ததும் கண்டவரின்  கண்படுமென பொட்டு வைப்பாய் தான் உணவு உண்ண மறந்தாலும் நான்  தூங்க தாலாட்டு சொன்னவளே ஏனென்ற கேள்வி இன்றி எதிலும்-தப்பின்றி எந்நாளும் என்னுள் அன்பை சேர்த்தவளே கள்ளமில்லா அன்பை  கனிவுடன் தந்தவளே கருவாக  என்னை உருவாக்கி சுமந்தவளே பெரிதாக  அன்பும்  குடும்ப நெறியும்-குறைவின்றி உருவாக்கி வளர்த்தவளே உலகை உணர்தியவளே   சொல்லோர்கள் தப்பாய் என்னை  சொன்னாலும் எல்லோரையும் பதில்  எச்சரித்து அனுப்பிடுவாய் செல்லமாக செய்யாதே என கண்கலங்குவாய்-யாரின்று மெல்ல புரியவைத்து  மேனியை தட்டுவார்கள் என்னால் எழுத முடியவில்லை உருவாய் எதிரில் நீயே நிற்பதுபோல்எண்ணுகிறேன் சொன்னால் வ

நாய்க்குட்டி.....செல்லமே.

Image
  மனிதன்  என்னை மதிக்கா விட்டாலும் மண்டி இட்டு நன்றி சொல்லும் மனதுள் என்னையே தினம் நோக்கும்-மகிழ்ச்சியாய் மதித்து வாலாட்டி நன்றி செய்யும் என்னைப் பார்க்க யார் வந்தாலும் முன்னே வந்து முறைத்து நிற்கும் பின்னே சென்று சுற்றி வந்து-முகர்ந்து பின்னங் கால்களை ஒட்டி நிற்கும் கருப்பாய்  நிறம் கொண்டிருந்தாலும் அது பொறுப்பாய் தான் இருக்கும் அருமையாக வெறுப்பாய் நான் திட்டி சொன்னாலும்-நகராது வெகு அருகில் நின்று கொண்டிருக்கும் செல்லமாய் சீண்டி அதட்டி விட்டால் சீக்கிரம் பயந்து குரைத்து விடும் ஆத்திரம் கொண்டு அடித்து விட்டால்-பிறரை அடுத்த நொடியே கடித்து விடும் பொன்னை  பொருளை காத்து நிற்கும் புதிதாய் இருந்தால் நுகர்ந்து செல்லும் மண்ணையும் மனதில் பதிந்து கொண்டு-நினைவாய் மண்டியிட்டு உடனே  நக்கி திண்ணும் தூங்கும் போதும் அதன் கவனம் துணையாய் மட்டும் தான் இருக்கும் நல்ல நண்பன் தான் என்றாலும்-நல்லதில்லை உள்ளபடி  சொல்வ தென்றால் ஒவ்வாமை பெற்றோரும் நண்பர்களும் மனைவியும் மகளும் மற்றோரும் மறந்தாலும் மறவேனே உன்னை உற்ற  நண்பநென பற்றோடி ருப்பேன்-இன்பமாய்  உயிருள்ளவரை உன்னை  நன்ற

முதுமையின் ஏக்கம்

Image
அன்னைத் தமிழ் நாட்டிலே அன்பாய் அப்பன் பிள்ளைகள் உறவிழந்து தினம் துஞ்சுகின்ற நாளை எண்ணித் துயர்-இறுதியில் தொண்டையைக் கம்ம செய்து  தொடருதே நடை பயில திறன் மறந்து நடப்பதற்கு துணை யழைத்து வளர்த்திட்ட பிள்ளையும்  மறந்து-வாழ்வில் கிடைத்திட்ட நட்புகளும் இறந்தும் பஞ்சமில்லை பணம் பொருளுக்கும் எஞ்சி நின்ற சொத்து மிழந்தும் தஞ்சமென கிடைத்திட்ட இல்லமே-எனக்கு மஞ்சமென நான் கிடந்து  மடிவேன் எந்தன் நண்பர்கள் எல்லோரும் சென்றும் பந்தமுடன் பாசம் கேட்கும் எனக்கு தரும்  கடைசி பாலும் கொடுக்க -தவறும் பிள்ளைகளால் இந்தநிலை ஏன் இறைவா ஏழுகடல்  தாண்டி என்ன பயன் ? ஏழுலகம் போற்றி என்ன பலன் ? படைத்தோரை மறந்த பாவிகளே-உனக்கும் கிடைக்காதோ நாளை இந்த நிலை சொந்தமும் சுற்றமும் பெற்றோரு மின்றி இந்தநிலை  பலர் இழித்தும்  வாழ்வா? பந்தம் பாசம் பண்பாட்டுடன் நேசமும்-தமிழ் எந்தம் பண்பென விரைந்து வா அன்னை தந்தையின் அன்பு வார்த்தையில் அழகு தமிழின் நல்ல கருத்துக்களை உன் பிள்ளைகள் மகிழ்ந்து கேட்க - எங்களோடு இணைந்து  வா இறுதி காலத்திலாவது

காதலா? காமாமா? நட்பா?

Image
   விழியோடு மொழிபேசி விரலாலே கோலமிட்டு புரியாத  வார்த்தையாலே புதிராக சேர்ந்து பேசி பதியாத  நட்போடு பரிதவிப்பில் கலந்து இதழோடு இதழ் இரண்டுமே  சண்டைபோட்டு இனிமை போற்றி இனிமையான தருணமாக்கி முனகலும் முக்கலும் முகமிறுக்கி நக்கலும் கனி இரண்டையும் கசக்கி சுவைத்து இடையிடையே இணைந்து முடிவில்லா ஆனந்தமாய் முடிந்தவரை  நாதமாக்கி முடியாமல் முடிதிட்டு முகமிரண்டும் பார்த்தால் முடியாது  இன்னும் வேண்டும் மொழி தெரியா மௌனமாய் முடிதிட்டால் என்ன சொல்ல காதலா? காமாமா? நட்பா?..............

முதல்நாள் இரவு

Image
  இரவெல்லாம் விழித்திருந்து இமை மூடா தவமிருந்து ஊரெல்லாம் கூடிவந்து-இன்பமாய் உற்றாரின் நலம் பகிர்ந்து விளக்கு தோரணம் விடியும்வரை  எரிந்தும் நலுங்கு நாட்டியமும்-கச்சேரி நாளெல்லாம்  பெரு விருந்தாய் விடியும்முன் எழுந்து விமரிசையான சடங்குகளுடன் காலை கதிரவனை கைகூப்பி-வணங்கி மாலை மாற்றி  மகிழ்ந்தேன் தாலிகட்டி தவம் கலைத்தேன் தைரியமாய் அருகில் அமர்ந்தேன் நாளை குறித்து நல்பழங்களுடன்-சத்தான நலபாகத்துடன் விருந்து படைத்து சேலைமாற்றி சிவந்த முகத்துடன் சொம்பில் பாலுடன் நடந்தேன் மாலை அணிந்து  மங்கலமாய்-நாணமாய் ஆளை பார்த்தேன்  ஆர்வமாய் தோளை பிடித்து தொட்டதும் துவண்டு விழுந்தேன் சரிந்தேன் துணிகளை  இழந்தேன் மகிழ்ந்தேன்-மீண்டும் தொடங்கி  மீண்டும் மகிழ்ந்தேன்

மெல்ல பேசும் செல்ல கூட்டம்

Image
  துள்ளி யோடி துரத்தி பிடித்து மெல்ல வந்து பல்லை காட்டி சொல்மாய்  சிணுங்கி மெல்ல ஓடிடும் மின்னலென ஓடி மேகமாய் மறைந்திடும் பிள்ளை மொழி பேசியே பிடிசோறும் திண்ணிடும் தொல்லை என்ற வார்த்தையே மெல்ல நம்மை ஈர்திடும் இல்லையென்று சொல்லாமல் இன்பமேங்கும் தந்திடும் பிள்ளை கூட்டம் பிரச்சனைகளின் கூடாரம் இல்லை  அதுபோல் இன்பமான மழை நேரம்

சின்ன பசங்க நாங்க

Image
சிவந்த உதடும்  சிற்றிதலும் நவ அழகும் நிறைத்திருக்க தவழ்ந்து வரும் பேரழகே-கண்ணே தவம்கிடந்தேன் உன்னை காண கவலை மறந்து கண் சிமிட்டி கண்டோரையும் உடன் அழைத்து மலர்ந்து விரிந்த முல்லைபோல்-சிரித்து கவர்ந்திழுக்கும் கண்ணு குட்டிகள் தூங்கி எழுந்ததும் துள்ளிவரும் பாங்கினை  பார்த்தாலே  சிரிக்கும் ஏங்கி என்னை அள்ள துடிக்கும்- அன்போடு தூக்கியதும் முத்தம் கொடுக்கும் மழை வந்தாலே  பல் இளிக்கும் மறைந்து ஓடி முழுதும் நனையும் மறுநாள் காய்ச்சல் வந்தாலும்-கவலையின்றி மறக்காம திரும்பவும் செய்யும் குரங்கு போல சேட்டை செய்யும் கூப்பிட்டவுடன்  பயந்து நடிக்கும் விலங்கு போட்டால் வீட்டுப் பாடம்-முழுவதும் விரைவுடனே  விந்தையாக செய்திடும் வீடு பாடம் செய்ய சொன்னா விடியகாலை செய்வேன் என்று ஓடிபோகும் உட்கார்த்தே சாப்பிடும்-அம்மாவிடம் கூடி பேசிய கும்மாலத்தையும் சொல்லும்

கோவிலுக்குள்ள இருப்பது யார்?

Image
கஷ்டமென்னு சொல்லி கடவுளை பார்க்க போனேன் கடன்கார பூசாரிக்கு காசு கொடுத்தால் நோட்டை பார்தப் பின்பே தட்டை எடுக்கிறான் மொட்டை  போட்டாலும் விரட்டி  தள்ளுறான் பட்டைபோட்டவனுக்கும் பூணூல் உள்ளவனுக்கும் காணிக்கை கொடுக்காமலே கழுத்துமாலை போடுறான் கண்ணு தெரியாதா கடவுளும் கேட்காதா ஐம்பதுக்கு அரைமுழம் நூறுக்கு கழுத்து மாலை ஐநூறுக்கு  பரிவட்டம் அனைத்திலும்  லஞ்சம் ஆண்டவனே உன்னை காண அடியேனிடம் என்ன தொகை வேண்டும்? அதனாலா ஒளிந்துகொண்டாய் அவனுக்குமே அடிமை ஆகிவிட்டாய்?

தம்பிமேல் பாசம்

Image
  அதிகாலை பிடிச்சு வந்த அயிர மீனும் அத்தானுக்கு பிடித்தமான நாட்டு கோழியும் மத்தியானம் இருக்கு சாப்பாட்டுக்கு மறக்காம வந்திடு தம்பி வறுத்த நிறமும் கருத்து போச்சு கோழி குழம்பும் கொதிச்சி போச்சு மாமன் இன்னும் வரலியே மடிஞ்ச வயிறு வலிக்குதக்கா இடிஞ்சி போயி இருக்கறப்ப இனிப்பும் பூவும் வாங்கிவந்து குடும்பத்தோட சாப்பிடலாம் கொஞ்சம் நீங்களும் வந்திடுங்க இனிய ஞாயிறு நளபாக வாழ்த்துக்கள்

மறுமணம் வேண்டும்

பூவெல்லாம் பூத்திருக்கு புது  நெல்லும்  விளைஞ்சிருக்கு காதோரம் வண்டு வந்து கவலையோடு சொல்லுது கோழி குஞ்சுகளோடு குப்பையை  கிளறி  சாப்பிடுது பசுவும் கன்றும் பசியாறி  மகிழ்ந்திருக்கு ருசியானஉணவும் பசிதீர  கிடக்குது விதி மட்டும் என்னை ஏன் ? விதவை .... என்று சொல்லுது ? மல்லிகை  முல்லை மனமிங்கே  வீசுது தினமிங்கே பார்த்தாலும் தொட்டு பூ பறித்தாலும் மனமதனை முகர்ந்தாலும் மல்லிகையை பிடித்தாலும் குனமேனக்கு இருந்தும் குறைஎன்ன தெரியலியே அவனை பார்கிறேன் அழகை ரசிக்கிறேன் நாவெல்லாம் இனிக்க நாளும்  பேசினாலும் நட்புடன் என்னோடு நாளும் இருந்தாலும் என் மனதை அறிந்தாலும் என்னை அடையலியே எனக்கும்  இன்பம் வேண்டும் என்னோடு பகிர வேண்டும் விதவையின் விதி என்ற வெட்டி வேஷம்  கணக்காய்  சொன்ன கயவரை கொல்ல வேண்டும் இளமையுள்ள இளைஞனே இவர்களையும் பாருங்கள் எழிலோங்க  செய்யுங்கள் இழி நிலையை மாற்றுங்கள்

எங்கே நிம்மதி?

ஏழெட்டு வீடிறுக்கு ஏசி  காரும் நிறைந்திருக்கு கூவிட்ட குரலுக்கு கூட்டமாக நிறைய  வேலையாளிருக்கு வங்கியிலே பணமிருக்கு வாங்கி வைத்த நிலமிருக்கு பொருளிருக்கு நடைபோக தெம்பிருக்கு நலம்கேட்க நட்பிங்கே மட்டுமிருக்கு இத்தனை  இருந்தும் இறைவனை நினைத்தும் தப்பிருக்கே ஆம் பெற்றவரை விட்டுவிட்டு பொறுப்பை மறந்தேனே தவறு செய்தேனே நிறைந்த சொந்தமெங்கே நண்பர்களேங்கே தமிழே நீயும் எங்கே இத்தனையும் மறந்து இங்கே தனியாய் வாழ்வதா இனிய சொந்தம் மறப்பதா உண்பதும் உணவா உறவிழந்து மகிழ்வா எங்கே நிம்மதி பணம் பொருள் போதுமெனக்கு நேசமும் நிம்மதியும் வேண்டும் சொந்த நாடே சுகமென்று வந்தவழி செல்கிறேன் வாழுமிடம் செல்கின்றேன்

சின்னஞ்சிறு செல்லங்கள்

சின்ன  மலர்களே சிரிக்கும் பூக்களே வண்ண நிறத்து வாண்டு குட்டிகளே உண்ண மறுக்கும் உவ்வா செல்லமே மண்ணையும் திங்கும் மழலை செல்வங்களே கண்ணீர் வராமல் கண்ணடிக்கும் கண்ணே உன்னை  காணாது உணவருந்த  முடியாது கண்ணே கனியே இனிக்கும் கற்கண்டே உன்னை விரும்பாதோர் உலகில் உண்டோ சின்னஞ் குழியுடன் சிரிப்பாய் சிவப்பாய் எண்ணமெல்லாம் நீ வண்ணமாய்  இருக்கிறாய் சொன்னதையே நீ எந்நாளும் இருக்கிறாய் இந்நாளில் உன்னை இனிதாக வாழ்த்துகிறேன்

இரவில் இம்சை ஏன்?

Image
மெல்ல சிணுங்கி வந்து மேனியெல்லாம் தவழ்ந்து செல்லாமாய் கடித்கும் சின்னஞ் பிள்ளையா நீ! நோயை  பரப்பும் நேசமில்லா எதிரியே! இரவில் அழைத்து இம்சிக்கும் இளவளே! உறவுக்கா அல்லது உனது உரிமைக்காகவா! காதோரம் பாடுவது கண்ணுரங்க முடியவில்லை.... அப்படியென்ன  ரகசியம்? அடிக்கடி  தொல்லை செய்ய வேண்டாமென்றாலும்  மீறி மீண்டும் மீண்டும் கடிக்கிறாய்..... முத்தமிட்டு செல்கிறாய் முடியவில்லை உன் தொல்லை சத்தமும் பிடிக்கவில்லை சரியாக  தெரியவில்லை. மெத்தையில் படுத்ததும் மெல்ல  கடித்து  ஓடுகிறாய் எனக்கு பிடிக்கா து இருந்தாலும் கடிக்கிறாய் இனி பொறுமையில்லை உனக்கு  வாழ்க்கையில்லை ஒழிந்து போ கொசுவே உன்னால் போச்சு தூக்கம் ஒழிந்தாய் ! இறந்தாய்!! இனிமேல் இனிமையாக உறங்குவேன்

வரதட்சணையா? வேதனையா?

Image
கிழங்களே கீழ புத்தி கொண்டோரே....... நாள் முழுதும் நல்லது செய்யாதவரே....... மூடங்களே  மூளையில்லா மூடவரே....... வாழவேண்டிய வாரிசுகளை வஞ்சிப்பவரே....... தாழ்ந்த புத்தியால் தடம் மாறிய மிருங்களே......... வாழ்க்கைக்கு வழி  சொல்லாத வயோதிகரே..... இன்னுமா தேவை இல்லறதுக்கு வரதட்சனை? எண்ணிப்பார் ஏமாரபோவது யாரென்று? ஏய்காதே எள்ளளவு எண்ணிப்பாரீர்! எதிகாலத்தில் உண்ண உணவின்றிருப்பீர் ! சொல்லொன்னா சோகத்தை எதிர்கொள்வீர் கள்ளமில்லா நல்லுறவை காசாக்காதீர்! கண்ணீரால் கஷ்டத்தை வாங்காதீர்! நல்வழி வழிகாட்டி நன்றாக வாழ வையுங்கள்!

காலை வணக்கம்

இன்றும் நான்....... எழுட்சியோடுதான் உள்ளேன் இன்னும் சில மணித்துளிகளில் எழுந்து வருவேன்............... குழந்தையாக ? ... கூனி மறைவேன் கிழவனாக...... என்றுமே ... என்னால் முடியும் இன்றும்.. நாளையும்... முடியும்... முடியும்......முடியும் காலை வணக்கம் ! என்னை காணும் அனைவருக்கும்!!!

எதிரியை வீழ்த்த எத்தனை யுக்திகள்

Image
செடியிலே வலை பின்னி சிங்கராமாய்! செய்து முடிக்கிறாய் ஒய்யாரமாய் நடக்கிறாய்! நொடியிலே உணவை நுழைந்ததும் சுவைக்கிறாய்! நெய்த வலையை நேர்த்தியாய் செய்கிறாய்! எதிரியை வீழ்த்த எத்தனை யுத்திகள் எப்படியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை! எத்தனை நிமிடம் இதை செய்ய- கஷ்டமான ஏனிந்த கோட்பாடு எத்தனை துணிச்சல்! அமிலம் சுரந்து அத்தனையும் முடித்து அழகாய் வலை அரவறம் தெரியாமல்  ஆனந்த தொட்டிலில் அதிசிய பிறவி-எதிரியை  ஆட்கொள்ளும் ஆளுமை சக்தி நீ! பலசாலியல்ல பயமுறுத்தும் கண்களால் சில நொடியாவது சிந்திக்க வைக்கிறாய்! சிக்கனமாய் இடத்தை சூழ்ந்து கொள்கிறாய்! தக்கணமே எதிரியை தனிமையில் விடுகிறாய்! உயிருக்காகவா உனக்காகவா உரிமைக்காகவா? உண்மையில் எதற்காக வாழ்கிறாய் நீ? என்ன செய்து சாதிக்க நினைக்கிறாய்! எத்தனை நாள் உயிர் வாழ்ந்திட இருக்கிறாய்! முடியும் என்பதை முன்னிறுத்தி சொல்கிறாய்! முயற்சி செய்ய முன்னோட்டம் தருகிறாய்! புதிய  வாழ்கையை  புரிய வைக்கிறாய்-புதிராய்? பிள்ளைகள் வாழ காத்து நிற்கிறாய் !!!  

உன்னையே நேசி உண்மையாய் யோசி

இளம் வயதிலேயே இன்னலை தீண்டியவளே ! இதற்காகவா பிறந்தாய் இவ்வளவுநாள் வளர்ந்தாய் ! உனக்காக வாழ்ந்திடு  உணர்ச்சியை பகிந்திடு ! ஒரு  வருடஇன்பம் ஒருவருக்கும் திருப்தி இல்லை கணக்காக நடந்தால் கண்ணியத்தில் குறையுமில்லை பிறரருக்காக பார்க்காதே பிறருக்காக வாழாதே! இளைமை  என்பது இன்றைய நாள்தான் இனிமை என்பது இளமைக்கும்  தேன்தான் இன்றைய வாழ்வை இனிமையாக்க  முயற்சி செய் ! உறவுக்காக இருக்கும் உன் பிள்ளைகளை நேசி ! இப்போதும் தப்பில்லை இனிசொல்ல வழியில்லை மாண்டு  போனவனுக்காக மீண்டும் தப்பு செய்யாதே ! கோழைக்காக நீயும் கேள்விக்குறியாய்  இருந்திடாதே ! நீ தான்  நீதிபதி நின் வாழ்க்கைக்கு அதிபதி மறுமணம் தப்பில்லை மறுவாழ்வு கசப்பதில்லை உருவாக்கு   புதுயுகம் உனைபோற்றும் இந்த உலகம் துணிந்திடு செயல்பாடு துயரத்தை வென்றிடு !!!

விதவையாக்கியது யார்? வேதனை வேதனை சுமப்பது நான்?

Image
காலமும் பார்த்து நேரமும் பார்த்து கல்யாணம் கடமையாக பண்ணி வச்சாங்க கட்டமெல்லாம்   பொருத்தம் பார்த்து-கண்ணியமாய் கடவுளிடம்  சொல்லிதானே சேர்த்து வச்சாங்க பெற்றவரும் மற்றவரும் பொருத்தம் பேசி சுற்றமும் நட்பும்  சொந்தமும் சூழதானே நற்றமிழ் நல்லோரும் நம்மூர் கடவுளின்-முன்னிபாக பற்றினேன் பரவசமானேன் பக்தியால் உருகினேன் இத்தனையும்  செய்ததால் இனிமேல் பயமில்லை இன்பத்துக்கு  எல்லையில்லை  யாருக்கும் பயமில்லை பார்க்கும் போதெல்லாம்  படுத்தேன்  இணைந்தேன்-ஆனந்தமாய் பக்கமிருப்பான்  பிள்ளைகள் பிறந்ததும் என்றிந்தேன் பிறந்த வீட்டில் பிள்ளைகளுடன் இருந்தபோது இருந்த இடம் விபச்சாரியிடம் விருந்தானான் வருந்தினான்  வாங்கி கொண்ட நோயினால்-மருந்தால் திருந்துவான் என நினைத்து தேடினேன் நிம்மதியை எதையும் சொல்லவில்லை யாரிடமும் பேசவில்லை மனதை கல்லாக்கி  மாயந்துவிட்டான் தூக்கில் மறுநிமிட செய்தியில் நான் மாயந்துவிட்டேன்-மனதால் மணவாழ்வில் சாய்ந்துபோனேன் சறுகானேன் குற்றம் செய்தது நானா அல்லது கும்பிடும் தெய்வம் குற்றவாளி தானா நம்பிய பெற்றோரா நண்பர்களா- நரகமாய் நாள் நட்சத்திரம் நல்லோர்

இயற்கையின் மறுபிறப்பு

விதை செடியாகி செடி மரமாகி மரம பூ பூத்து பூ கனியாகி கனி விதையாகி விதை மீண்டும் என்னவாகும்? எல்லாம் வினைபயன்? விதை பயன்? என்ன சொல்ல முடியும்? எல்லா விதையும் முளைப்பதில்லை எல்லோர் உறவும் பிறபுக்கல்ல ,உறவுக்கு? எப்படி சொல்வது யாரிடம் கேட்பது? அனைத்தும் அறிந்துகொள் ஆணவம் கொள்ளாதே அதுவே வாழ்க்கையென அற்பமாய் நில்லாதே கணத்தில் முடியும் அது காமத்தில் தெரியும் பணத்தால் முடியாது மனதால் மட்டுமே முடியும் இன்பம் இருவருக்கல்ல இளமையை முடிபதர்கல்ல

நீயும் இறைவனே

Image
அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு   அகிலமும் உனை பார்க்க நேர்நிறுத்து சுகத்தை உன்னுள் நேர்த்தி செய்தால்-ஆயுளில் யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் ! உன்னில் ஒளிந்திருக்கும் ஒளியரிந்திடும் உன் கணக்கு என்னவென்று   உடலில்   வெண்ணை சேர்காதமேனி வெளிர்ந்திடும்-உண்மையாக கண்ணுள் காட்டிடும்   கனவாக தெரிந்திடும்! மெய்யும்   பொய்யும் மேனியு   ளதில்லை மெய்ஞானம் நேரில் பார்த்த தில்லை சொல்லும்   செயலும்   சேர்ந்தே யன்றி -எளிதில் சொல்லாத சொல்லால் பயமேதுமில்லை! இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம் இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம் பொய் சொல்வோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில் புரிந்திடும்   மெய்ஞானம்தெரிந்திடும் செயலாலே! நம்பிக்கை வாழ்வில் நல்வழி படுத்தும் நாணயம் எப்போதும் துணை நிற்கும் வம்பிலுப்போர்   வாழ்வு நெறிகெட்டு-துன்பமாக சம்பவிப்பார் சாபங்களை சந்ததிக்கு சேர்ப்பார் ! கஷ்டம் கடக்கும் காலம் வந்தால் நஷ்டமும் தீரும் நன்மை பெறும் இஷ்டமாக இனிதே உதவி செய்தால்-இயன்றதை துஷ்ட மெல்லாம் தூரசென்று   விலகிடும் ! நல்லவனாய் இருப்பதால் நல் மனிதனாவாய்

பிள்ளையாரப்பா! புத்திசொல்லப்பா!!

Image
வினையேதும் செய்யாமல் விதியென்று சொல்லாமல் துணை நிற்க வேண்டாமல் துறவறமும் பூண்டாமல் பண்ணெடுத்து பாடாமல் பகிர்வின்றி வாழாமல் மனிதனை நினைக்காமல் மதப்பற்று கொள்ளாமல் இருப்போர்கள் இல்லாதோர்க்கு இமியலவே நினைதிட்டால் விதையேதும் போடாமல் விளைச்சலையும்  தேடாமல் மனதோடு மனிதமும் மற்றவர்க்கு உதவியும் இல்லாத ஏழைக்கு எழுத்தறிவும் தந்திட்டால் பொல்லாங்கு சொல்லமாட்டார் புறந்தள்ளி பேசமாட்டார் கனபோளிதில் செய்திட்டால் கணபதியே அருள்புரிவான் எல்லோருக்கும் இனிய பிள்ளையார் தின வாழ்த்துக்கள் இராம.கண்ணதாசன் சென்னை

அரசாங்க ஊழியன்

அரசாங்க ஊழியன் அரைகஞ்சி குடிச்சாலும் அன்றாடம் வருமானவரி கட்டாமல்  இருந்தால் சிரமபட்டாவது கட்டிவிட வேண்டும்-இல்லையெனில் சீக்கிரமே கட்டாமல் செத்துவிட வேண்டும் நடுத்தர மக்களுக்கு நாய் பொழப்பு நாகரீகமென நகையும் நல்லுடையும் நல்லகல்விக்கு நாயக அலையவேண்டும்-ஆனாலும் நாதியத்து வேலைக்கு போகவேண்டும் அகத்தில் கவலையும் முகத்தில் பவுடரும் அடுக்கில் சாப்பாடு அளவோடு இருக்கவேண்டும் அடுத்தவனுக்கு வசதியாய் காட்டவேண்டும்-மீண்டும் அடுத்தவேளை சோறில்லாமல் கிடக்கவேண்டும் பளபளக்கும் நகைனட்டு போடவேண்டும் பித்தளைக்கு தங்கபூச்சு போடவேண்டும் வாகனமும் கடனாக வாங்க வேண்டும்-வட்டியுடன் வசவும் கேட்டு தலைகுனிய வேண்டும் பெண்டுபிள்ளை குடியிருக்க வீடு வேண்டும் பெண்டாட்டி புகழ் ஓங்க வாழவேண்டும் கையூட்டு பெறாது இருக்க வேண்டும்-நேர்மையான கடன்காரன் என்று புகழ் பாட  வேண்டும் இப்படியே இருந்தாலும் இருப்பதை கொண்டு தப்பேதும் செய்யாமல் சிக்கனமாய் இருந்தாலும் கற்பனையாய் பேசுவார் கண்டபடி ஏசுவார்- முடிவில் நற்பயனை வேண்டி நாதியத்து  செத்திடவேண்டும்

என் தங்கை

  தங்கை                 *** என்னை துணைக்கு எப்போதும் சார்ந்திருப்பாள் எப்போதும் என்னுடனே கை கோர்த்து நடந்திடுவாள் தப்பே செய்தாலும் அப்பாவிடம் சொல்ல மாட்டாள் தனியாக என்னைவிட்டு கரிசோறும் தின்ன மாட்டாள் சிக்கல் கழித்துவிட்டு  தலை சீவி மகிழ்ந்திடுவாள் எப்போதும் என்னுடனே எதிர்வாதம் செய்திடுவாள் அப்பாவித்தனமாய் அழுதிடுவாள் அண்ணனை காணவில்லையென சின்ன காயம் பட்டாலும் எனக்கு சிரித்துக்கொண்டேகேவி கேவி அழுதிடுவாள் இப்போதும்  இருக்கிறாள் எரிந்து எரிந்து விழுகிறாள் பெற்ற பிள்ளைகளையும் பிணமாகி பொங்கல் என்கிறாள்  கோவத்தில் ஆனாலும் என்னை பார்த்தவுடன் அடங்க மறுத்து அழுகிறாள் தேனாக இருந்த நாட்கள் திரவமாகி விஷமாகி போனாலும் தெரியலையே  அவளை மறக்க தெரிகின்ற உயிர்போகும் நாள்வரை ஊனாகிவிட்டேன் ஊமையாகிவிட்டேன் கானது அவள் துயரை கண்டவுடன் தொடரும் துயரத்தை தொலைக்க முடியுமா? மறுபடியும் அண்னாக பிறக்க முடியுமா? பிறந்தாலும் அன்றுபோல் இருக்க முடியுமா? இராம.கண்னதாசன் சென்னை

இளைப்பாற மடி வேண்டும்

Image
உன்னை பார்க்க வேண்டும் உன்னுடன் பழக வேண்டும் மடிமீது படுக்க வேண்டும் மனக்கவலை விலகவேண்டும் இதமாக நீ வருடவேண்டும் இளைப்பாறி நான் மகிழ வேண்டும் தலைகோதி தழுவ வேண்டும் தலை சாய்ந்து படுக்க வேண்டும் எல்லா கவலையும் மறக்க  வேண்டும் என்னுடனே நீ சேர வேண்டும் தடையில்லா இன்பம் வேண்டும் தழுவி தழுவி சுவைக்கவேண்டும் இதழ் முத்தமும  வேண்டும் இடையிடையே பேசவேண்டும் முக்கனிசாறுதடன்  பருக வேண்டும் முதலாய்  இருப்பதாக நினைக்க வேண்டும் புதிதாக நீ நினைக்க வேண்டும் பூவுலகில் மெய்மறந்து பறக்க வேண்டும் எந்நாளும்  இருக்க வேண்டும் எப்போதும் மகிழ்ச்சி வெண்டும்

என் மகளே!

துள்ளி விளையாடி தோள்மீது சிந்தும் கிள்ளியும் கேலி செய்தும் நீ நல்ல சிரிப்பும் நகையாடிய பொழுதில் கள்ள சிரிப்பும் கும்மாளமும்  பிடித்தது மெல்ல அருகில் வந்து மெதுவாய் சொல்லிய வார்த்தைக்கு  நூறு  பதில் அள்ள அள்ள குறையாத அன்புக்கு தெள்ள தெளிவாய்  பதில் சொன்னேன் நல்லதும் கெட்டதும் நாட்டில் நடப்பதும் உள்ளது உள்ளபடியே உரைத்தேன் சொன்னேன் செல்ல கிளியே செந்தமிழ் மொழியே உள்ளம் இனிக்குது உன்னால் மகிழ்ந்தது சொன்னதும் செய்தாய் சிரிப்போடு இருந்தாய் சொர்கமை இருந்தது சொந்தமாய் முத்தம் கன்ன குழிவிழ கண்சிமிட்டி சிரிதாயே கண்ணினின்மொழி பேசி மகிழ்ந்தாயே என்னை சீன்டியதும்இடைமறித்து உன்னை திட்டியதாய் உள்வாங்கி கண்ணை கசக்கி கடும் கோபமுடன் அன்னையையும் அடித்தாய் அழுதாயே அத்தனையும் நடந்தது அமுதுன்னும் பித்தில்லா பிள்ளை பருவத்தில் சித்தனாக பித்தனாக நானிருந்தேன் சிறிதும் கொபமில்லாது மகிழ்ந்தேன் முப்பது மாதம் தான் முடிந்தது முன்பருவ பள்ளியில் சேர்த்தபோது முடியாது மறுத்து அழுதாய்  பின் முகமலர்ந்து தொடங்கினாய் படிப்பை அன்றே உரைத்தது அவ்வளவுதான் அன்பால் அடித அடியும் மறந்தது அன்பால் கடித்தது கட்டி பிடித்தது அன்பாய்  சிரி

எனக்கு வேண்டும்

எனக்கும் ஆசை எப்படியும் முடியுமென என்னவள் மறுக்கிறார் என்னசெய்யலாம்? ஆசையும் இருப்பதால் அது முடியுமா என்று ஒவ்வொரு நாளும் உள்ளம்தான் சொல்லுது இந்தமுறை இருக்கலாம் என்று? சொல்லி பார்த்தேன் சொந்தமாய் வேண்டுமென்று! எள்ளி நகைகிறாள் என்னை இன்னும் முறைக்கிறாள்! பள்ளி படிப்பும் பள்ளியறை இல்லையென்றால், என்ன செய்வேன் எப்படி கொஞ்சுவேன்? கண்ணே மணியே கண்ணனின் மகனே என்று!!! இராம.கண்ணதாசன் சென்னை

கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?

கடவுளே கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா? கயவர்கள் நிம்மதியாய் காசு பார்க்க விடுவானா? திருடன்  துரோகிஎல்லாம் தைரியாமாய் திரிவானா? காசு பணத்திற்காக கள்ள தொழில் செய்வானா? இல்லாதவன் ஏங்குகிறான் இருப்பவனோ  பதுக்குகிறான் உள்ளதை சொல்பவன் உயர்வின்றி தவிக்கிறான் நல்லவனாய் இருப்பவன் நாளும்  மனதால்இறக்கிறான் பொல்லாங்கு சொல்பவன் புகழோடு இருக்கிறான் உனக்காக செய்வதை ஏழைக்கு கொடுக்கசொல்! உயர்வாக உன்னிடம் ஒழுக்கத்தை பயிலசொல்! தனக்காக உள்ளதுபோக தருமம் செய்யச்சொல்! மனித நேயம்  மறக்காமல் மனிதனை இருக்கசொல்! மனிதனாக இருக்க மனிதாபிமானம் மதிக்கசொல்! பெற்றோரை,மற்றோரை மாண்புடனே மதிக்கசொல்! தனியோளுக்கம் கற்றுதந்த ஆசிரியரை மதிக்கசொல்!!!

கன்னி பெண்ணே வருவாயா?

Image
முக்குடமும் தளும்ப முந்தானை விலக்கிவிட்டு சொக்கிவிடும் சுந்தரியே! சூரியனும்  நானும் சுட்டுவிட போகிறோம் ? தாகமெனக்கு தருவாயா? தங்கமேனியே வருவாயா? தாகம்  தீர்க்க குடம் தண்ணீர் தருவாயா? பூமியும் தெரியவில்லை பொழுதும் அடங்கவில்லை கூவும் குயிலும் குரல் கொடுக்கும் தவளையும் மேவி அழைக்குது மேகமும் கருக்குது மோகம்  குறையவில்லை மேனியோ அடங்கவில்லை போக பெண்ணே நீ போதை ஏற்றாதே! பார்போரிடம் என்னை தூற்றாதே தவறியும், கால சக்கரமும் கண்டிப்பாய் உருண்டோடும் கைபிடிக்க காத்திருக்கேன் கரையேறி வருவாயா? கனிந்த முத்தம் தருவாயா  கட்டியனைப்பாயா? இராம.கண்ணதாசன் சென்னை

என்ன ஆச்சு?

பார்த்ததும் ? நான்...... தோற்றுவிட்டேன் கை பட்டதும்........... பயந்துவிட்டேன் தொட்டவுடன் துவண்டு விட்டேன்! நேற்றுவரை புரியவில்லை நிகழபோவது என்னவென்று? பூத்தது போலானேன்! தேனூருது தென்றலும் வீசுது தேகமெல்லாம் நடுங்குது ஏனோ?       .................... இராம.கண்ணதாசன் சென்னை

கல்யானதிற்குப்பின்

மெல்ல மெல்ல இடைபிடித்து மெதுவாக முத்தமிட்டு செல்லமாக இதழ் சுவைத்து செளுமைதனை ஆட்சி செய்து இனிமை மேலோங்க இமைகளும் இடைஏங்க சொல்லாத கதைகளும் சொல்லமுடியா நிலையிலும் உள்ளபூர்வ உரிமையோடு கள்ளமில்லா காதலினை கணிந்துருக செய்திடுவீர் ! காதலுடனே இணைந்திடுவீர் !!

ஆனாலும் தவிக்கிறேன்

அவ்வளவு வயதில்லை அதனால் தவிக்கிறேன்! சொல்ல வெட்கமில்லை சொல்லத்தான் இருக்கிறேன் ! பிள்ளை இருக்கும்போது...... பெருமையாக சொல்லவில்லை ! காதல் இல்லாமல்.... கஷ்டத்தை சொல்லாமல்... கனா மட்டும்தான் ? கடமையில் கண் இருந்தும், கழிகிறது கஷ்ட காலம் எனக்கும் புரிகிறது ?? என்னதான் செய்வது? கடந்து போன இன்பம்.... கனவில் தான் நடக்குது நாட்களைதான் கடத்துது ஆனாலும் தவிக்கிறேன் ?

சித்தனும் பித்தனும் நீயே

நீ என்ன சித்தனா? நிலை மறந்த பித்தனா? எனை வணங்கும் பக்தனா? அன்பனா? அறியோனா? உடையில்லை உள்ளத்தில் பிழையில்லை வீடில்லை வெறும் தரையில் பற்றில்லை பகட்டில்லை பேசவில்லை நேசமில்லை பாசமில்லை பசியுமில்லை எதிரியில்லை இழப்புமில்லை பார்ப்போரின் கண்களுக்கு பைத்தியக்காரன் பார்த்துவிட்டேன் நீ பாராளும் வேந்தன் பிரச்சனைஇல்லா ஈசன்

ரசித்தவர்கள்