Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

மழையும் அதிகம் பெய்ததாலே.........

மழையும் அதிகம் பெய்ததாலே மரங்கள் சிரித்தே மகிழ்ந்தனவாம் மழைநீர் தேங்கி இருப்பதனால் மலர்கள் பூத்துச் சிரித்தனவாம் குளங்கள் எங்கும் நிறைந்ததாலே குளத்தில் தவளை கத்தியது கொக்கும் பாம்பும் பூச்சிகளை கொன்றே தின்று திரிந்தது பாம்பும் நிறையத் திரிந்ததாலே பறந்தே மயிலும் வந்தது பசியால் வாடிய கீரியும் பகிர்ந்தே பாம்பைத் தின்றது வனத்தில் எல்லா மிருகமும் வாழ்த்துப் பாட்டு பாடியே வருக மழையே என்றே வரிசையாகப் பாடி ஆடியது நரியும் பறவையும் இசையாக நல்ல சேதியைச் சொன்னது நலமாய் வாழப் பறவைகளும் நடனமாடி அன்பைப் பகிர்ந்தது ஆடும் மாடும் கூடியே ஆட்டம் போட்டு இருந்ததை அங்கே வந்த உழவனும் அதனுடன் சேர்ந்தே ஆடினான் எல்லா இனமும் ,மகிழ்ச்சியாக எளிதில் மனதும் குளிர்ச்சியாக நல்லாள் மழையால் இன்பமாக நன்றே வாழ முடிந்தது எல்லா வனங்களும் மரங்களாய் எல்லோர் மனதும் போலவே எங்கும் மரங்கள் வளர்த்தாலே என்றும் இதுபோல் மகிழலாம் .............கவியாழி,,,,,,,,,

எனது மலேசியப் பயணம்

Image
       நான் உலக அளவிலான கேரம் விளயாட்டுப்போட்டிகாக  1999 ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் இந்திய அணியின் மேலாளராக நானும்,இந்திய விளையாட்டு வீரர்களுடன் திருவாளர்.பி.பங்காரு பாபு. (சர்வதேசப் பொதுச்செயலாளர்) அவர்களும்  சென்றிருந்த போது நான் மற்றும் தெற்காசிய நிர்வாகிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.  மேலும் பல வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் இந்திய வீரர்களும் வந்திருந்து  நவம்பர் 26ரிலிருந்து 28  வரை நடைபெற்ற உலக போட்டி மிகச் சிறப்பாக  நடைபெற்றது,வழக்கம்போலவே இந்தியாவே ஒட்டுமொத்த பதக்கங்களையும் தட்டிச்சென்றது மகிழ்ச்சியாய் இருந்தது.    இதே மாதத்தில் சென்ற இனிமையான தருணம் மறக்க முடியாதது. -----கவியாழி---

வருகைத் தந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது!! நன்றி !நன்றி!! நன்றி !!!

Image
நன்றி  !              நன்றி !!                     நன்றி !!! கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய எனது பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்று ஐம்பதாயிரத்தை கடந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். மாதங்கள்                                                  =15 பதிவுகளின் எண்ணிக்கை                =350 பார்த்தவர்களின் எண்ணிக்கை   =50000  இன்றுவரை ஆதரவளித்துவரும் பதிவுலக அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும்  மீண்டும் தொடர்ந்து ஆதரவையும் வேண்டுகிறேன். -------கவியாழி------

நேரம் எனக்குப் போதவில்லை

நேரம் எனக்குப் போதவில்லை நிம்மதியாய்த் தூங்க வில்லை தூரம் அதிகமாய் ஒருவீடும் தொல்லையின்றி  மறுவீடும் இருப்பதால் காலைமாலை என அலைச்சலால் கண்ணெரிச்சல் குறைய வில்லை கண்டபடி தூங்க வேண்டியே கண்ணு ரெண்டும் அழைத்தே உடல் சூடும் குறையவில்லை உள்ளபடி எந்தக் குறையுமில்லை உண்மையாகச் சொன்னாலே எரிச்சல் உடம்பெல்லாம் தாங்க முடியவில்லை மகிழுந்தில் சென்றாலும் வெக்கை மறுபடியும் நிழலையே தேடுது மகிழ்ச்சியை மறந்தே மழையும் மக்களை  இப்படி  வதைக்குது வேலைச் செய்யவும் நேரம் வீணாய்க் கடந்து போகுது விடியல் காலை எழுந்தாலும் விழியில் கண்ணெரிச்சல் இருக்குது வெள்ளாமை இல்லாத நிலமும் விலைவாசியில் துள்ளிக் குதிக்குது எல்லா இடமும் சென்னையில் இப்படித்தான் வீடாய் இருக்குது இயற்கையின் சதியும் காரணமாய் இன்றையச் சூழல் இருக்குது என்னைப்போல் எத்தனைப்பேர் எரிச்சலால் மனம் தவிப்பது

மழையும் பெய்யவில்லை அதனால் .....

அருகருகே அதிக வீடுகளால் அன்றாடக் காற்றும் மறைக்குது ஆளாளுக்கு மின்சார பயன்பாட்டால் அதற்காகப்  பணமும் கரையுது மழையும் பெய்யவில்லை அதனால் மரங்களில் பச்சை செழுமையில்லை மதிய வேளையிலே எல்லோருக்கும் மறுபடித் தூங்கவேத் தயக்கமில்லை  ஏழையும் மனதால் வருந்தி எங்குமே செல்ல இயலவில்லை ஏர்பிடிக்க ஆசை இருந்தும் ஏரித்தண்ணிர்ப் பாய்ச்சலில்லை எப்போது மழை வருமோ எல்லோரின் மனம் மகிழுமோ தப்பாக மரம் வெட்டியதால் தண்டனை இப்போதே உள்ளது  இப்போதே எல்லோரும் யோசியுங்கள் இருக்கிற இடத்தில் மரங்களை இரண்டிரண்டு நட்டு வளருங்கள் இதையே எல்லோருமே சொல்லுங்கள் எல்லோரும் நன்றாக யோசித்தால்  எதிர்காலம் சிறப்பாய் இருக்கும் சொல்லாலே நில்லாமல் செயலில் செய்தாலே மழையும் வருமே  ----கவியாழி

இன்று நீரழிவு நோய் தினம்

எல்லா வயதினரும் பயப்படும் இளையோர் கூட அகப்படும் பொல்லா நோயாம் நீரழிவு புரிந்தே நடந்தால் போய்விடும் தினந் தோறும் மதுப்பழக்கமும் தீராத மனநோயுமே தொடர்ந்தால் வேராக வளர்திடுமாம் நீரழிவு வினையாக நோயாக வந்திடுமாம் மருந்தே இதற்க்குத் துணையாக மாலைகாலை  தின்று வந்தால் மறையும் காலம் அதிகரித்தே மறுபடி நோயும் தொடர்ந்திடுமாம் காலை மாலை வேளைகளில் கடினமான பயிற்சி செய்து வேளை தோறும் மருந்துகளை விட்டு விடாமல் சாப்பிட்டும் வியர்வை பார்த்தே விளையாடி வீதியில் காலாற நடமாடி விதியால் வந்த வியாதியை விரைவில் கட்டுக்குள் வைக்கலாம் மனதில் கவலை வைக்காமல் மருந்தை துணைக்கு அழைக்காமல் தினமும் பயிற்சி செய்தாலே திரும்ப வராமல் தடுத்திடலாம் உடற்பயிற்சியும் மனவலிமையும் உடலுறுப்பை உறுதி செய்யும் மனவளக் கலையையும் யோகாவும் மருந்தைவிட சிறந்த பலனாகும் ********கவியாழி*********

சலூன்கடையும் சாமியின் மடமும்

      சிறுவயதில்  முடிவெட்ட  சலூன் கடைக்கு அனுப்ப மாட்டார்கள் .காரணம் அங்கு அறைமுழுதும் கண்ணாடி  சீருடை அணிந்தவர் அதிக கட்டணம் வசூலிப்பார்கள் சுகாதாரம் என்ற பேரில்  சுழலும் சக்கர நாற்காலி  தினசரிப் பத்திரிகை வெளிநாட்டு முகப்பூச்சு கலர்கலரான பாட்டில்களில்  தண்ணீர்த்  தெளிப்பான் மற்றும்  வானொலிப்பெட்டி என்று மட்டுமே இருந்தது.         இன்றைய நாட்களில்  பெரும்பாலான நகரங்களில் சுகாதாரம் சுத்தம்  வேண்டி பொதுமக்கள் வந்து செல்லுமிடங்களில்  குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ளது .குஷன் மெத்தைகள் அழகிய வேலைப்பாடுகள் ,நறுமணம் வீசிக்கொண்டே நாளும் இருக்கும் வசதி போன்றவற்றுடன் கண்கவர் வண்ண விளக்குகள் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் உள்ளது.         ஆனாலும் மக்கள் சாதாரணக் கடைகளுக்கே செல்லுகிறார்கள்  அன்று வெறுத்த இடமே இன்று அவசியம் தேவையெனப் பட்டது.இப்போதெல்லாம்  எல்லோரும் விரும்புவதேக் காரணம்.காசு கொஞ்சம் கூட இருந்தாலும்  பரவாயில்லையென அவ்வாறான சலூன் கடைக்கே செல்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அங்கு எப்போதும்போல் கூட்டத்திற்கு குறைச்சலில்லாமல்  இருக்கும்            சொந்தகதைகள் ஊர்க்கதைகள் எப

இல்லமே மகிழ்ச்சியாய் இருக்கலாம்

நாற்பது வயதானால் நண்பனே நாவடக்கம் தேவை என்பதால் நாகரீகம் என்ற பெயரில் நா சுவைதரும் கொழுப்பும் நேரம் கடந்த தூக்கமும் நிம்மதி யில்லா மனமும் ஆண்மையின் ஆசை துறந்தும் அலுவலில் பணி அதிகரித்தும் பணமே  வாழ்க்கை என்ற பணியில் ஓய்வில்லா உழைப்பும் பகலிரவு அலைச்சல் இருந்தால் பசியும் குறைந்தே நோயேமிகும் நயவஞ்சகம் செய்வோரின் நட்பும் நலிந்தோரை இழிந்து பேசுதலும் நல்லோரின் நட்பை மறந்தே நாளும் குடித்தே இல்லாமல் இல்லத்தாளுடன் இனிய பிணைப்பும் இல்லறம் போற்றும் நல்லொழுக்கம் இணைந்தே  வாழும் குடும்பம் இன்முகமாய் எப்போதும் இருந்து தியானமும் தொடர்ந்து செய்து திடமாய் வாழ யோகக்கலையுடன் மனமே விரும்பும் கடவுளை மகிழ்ந்தே வணங்கி வந்தால் இனமே செழிக்க வளர்க்க இன்னுமே சிறப்பாய் வாழலாம் இனிமையாய்   நல்லதைச் செய்யலாம் இல்லமே  மகிழ்ச்சியாய் இருக்கலாம் ````````````````````கவியாழி``````````````````

ஆறடி நிலமும் உறுதியில்லை.....

ஆறடி நிலமும் உறுதியில்லை அப்படி இருந்தும் சாதியாடா அப்பனும் பாட்டனும் அறியாமல் அன்றே வளர்த்தத் தீயடா நித்தமும் உழைத்தே வாழ்கிறாய் நேர்மையைப் பெரிதாய் மதிக்கிறாய் புத்தமும் சொல்லும் போதனையை புரிந்தே அறிந்தே வாழ்ந்திடுவாய் கற்பனை வாழ்க்கை அறுதியில்லை கண்டதும் கேட்பதும் உண்மையில்லை அற்பனாய் வாழ்ந்திட முயலாதே அடிமை கொண்டே  வருந்தாதே உயர்வு தாழ்வு பார்க்காமல் உன்னில் வேற்றுமை காணாமல் உயர்ந்த நெறியில் வளர்ந்தேநீ உயர்வாய் மகிழ்வாய் பிறப்பாலே ஒற்றுமை என்பதே உயிர்மூச்சாய் ஒழுக்கம் நன்றே முதலீடாய் கற்பதை நன்றே புரிந்துகொண்டு காப்பாய் நீயும் அமைதிகொண்டு இனத்தில் நாமும் தமிழனாக இந்தியத் தேசத்தின் புதல்வனாக உணர்வாய் மனதில் முதல்வனாக ஒற்றுமை கொள்வோம் மனிதனாக

இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன்

இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன் இனித்தேன் இருந்தேன் சுவைத்தேன் மார்புக்குள் அவளை அணைத்தேன் மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள் சூடேற்றி சிலிர்த்தே சிணுங்கியே சின்னதாய் புன்னகையில் ஜோலித்தாள் செழுமையாய் உரிமையாய் இணைந்தே சேதியை முடித்தேன் ருசித்தேன் பூவுக்குள் தேனை எடுத்தேன் புரிந்ததும்  பார்வையாலே சிரித்தாள் தூறலும் நின்றது மகிழ்ச்சியாய் தூரத்தில் தெரிந்தது வானவில் மார்புக்குத் திரைப் போட்டு மனதிலே அசைப் போட்டு ஊருக்குள் மகிழ்ந்த நாட்கள் உண்மையான சிறந்த நாட்களே யாருக்குத்தான் இனிக்காது இச்சுவை எதிரிக்கும் ஆசைவரும் இதுபோல ஊருக்கும் தெரிந்திருக்கும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்த தன்றோ

பணத்தை மதிக்க மாட்டேன்....

பணமும் தேவை யானாலும் பணத்தை மதிக்க மாட்டேன் பணத்தாசை இல்லா நானும் பணத்தால் அடிமை ஆகேன் இனிமைப் பேசத் தயங்கேன் இன்முகம் காட்ட மறவேன் இழித்தே எளிதில் பேசேன் இறைவனை அதற்க்காய் தேடேன் நல்லோரை  வணங்கி  மகிழ்வேன் நாளும் சென்றுப் பார்ப்பேன் நலிந்தோரின் வாழ்க்கைச் சிறக்க நல்லதை சொல்லியே வருவேன் பொல்லாதோர் நட்பை மதியேன் பொய்யாக எதையும் சொல்லேன் புகழுக்கு அடிமை ஆகமாட்டேன் புரிந்தோரைக் கைவிட மாட்டேன் உள்ளத்தில் நட்பை வைப்பேன் உண்மையில் அன்பைப் பகிர்வேன் உரிமையாய் குறைகளைச் சொல்லி உண்மை நட்பை வளர்ப்பேன் ````````````கவியாழி```````````

மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள்

மின்னலிடைக் கொடியாள் வானத்தில் மேகத்தின் மேனியெல்லாம் தழுவி கன்னலென இருந்தக் கார்மேகத்தை வண்ண ஒளிவீசிச் சிரித்தாள் எண்ணம் எனக்கோ தெரியாமல் என்ன சொல்வதெனப் புரியாமல் சின்ன விழியிரண்டை மூடினேன் சில்லென்ற காற்றில் தேடினேன் கன்னம் சிவந்த கயல்விழியால் கண்டவுடன் சிரித்தாள் மறைந்தாள் தின்ன மறந்த தேன்பலாவின் திகட்டாத சுவையை மறுப்பேனா இன்னும் வேண்டுமென எப்போதுமே இனிமையான சுவையைத் தீண்டியே உண்ண விரும்பும் அவளை உதறித் தள்ளி விடுவேனா ஓடிச்சென்றுப் பார்த்தேன் அவளின் ஒருசுளையைத் தவிர்க்க முடியுமா ஓய்வாய் அருகில் அமர்ந்தேன் ஒருகிழி நடுவில் கிழித்தேன் இடைவெளி.........

பேயும் வாழட்டும் மகிழ்ந்தே.............

பேயும் இருந்தால் நன்றே பேதைமை கொள்வோரைக் கடித்தே போதையும் கொண்டே மீண்டும் பேயும் வதைக்கட்டும் தொடர்ந்தே அரக்கனை அழிக்க வேண்டாம் அவனையே வாழவும்  வைத்தால் அத்தனை திருடனையும்  கொன்றே அகிலமும் சிறக்கும் நன்றே உணவில் கலப்படம் செய்வோர் உரிமையை  மறுத்திடும் முதலாளி ஊரையே சுரண்டும் தலைவன் ஊழலை வளர்க்கும் மனிதன் சோம்பலை விரும்பும் மக்கள் சொன்னதைக் கேட்கா  இளைஞன் சுரண்டலைச் செய்யும்  அரசியலார் சுற்றித் திரியும் சோம்பேறி உழைக்க மறுக்கும் கணவன் ஊதாரி செலவிடும் பெண்கள் உடலை வருத்தா ஊழியன் உண்மையே சொல்லாத் திருடன் நாளையை விரும்பா மாணவன் நாணயம் இல்லா ஆசிரியர் நலிந்தவர் வாழ்வைச் சுரண்டியே நாளும் வட்டிக் கேட்பவன் போன்றோரைக் கொன்று வதைக்கவே போக்கிடம் இன்றி அலைந்தே பொழுதும் கொல்லுதல் செய்தே பேயும் வாழட்டும் மகிழ்ந்தே =======கவியாழி======

இதுவும் மனித இயல்பன்றோ..........

கஷ்டத்தில் வாழும்போது காணாத சுற்றமும் நட்பும் உதவிக்காய் இஷ்டமாக வருவார்கள் இல்லையென இல்லாத ஒப்பாரி வைப்பார்கள் காரியம் நடைபெற வேண்டுமானால் கண்ணீர் விட்டும் அழுவார்கள் கவலைத் தீர்ந்ததும் உணராது கண்டபடித் தவறாய் சொல்வார்கள் குற்றம் சொல்லிப் பயனில்லை குறையாய் எண்ண வழியில்லை கொள்கை இல்லா மனிதனுக்கு குணமாய் அமைந்தது இயல்பன்றோ இல்லை யென்றே சொல்லாமல் இருக்கும் போதே  கொடுத்திடுங்கள் கொள்ளை இன்பம் உங்களுக்கு கொடுத்தே இதயம் மகிழ்ந்திடுமாம் பெற்றப் பிள்ளைகள் பேரின்பம் பிணிகள் அகன்றே நன்றாக இல்லை என்ற நிலையாக இனிதே மகிழ்ந்தே வாழ்ந்திடுமாம் இதயம் மகிழ உதவிடுங்கள் இனிமை வாழ்வுக்கு நிரந்தரமாய் இதையும் நல்ல சேமிப்பாய் இருக்கும் போதே செய்திடுங்கள் -----கவியாழி-----

தித்திக்கும் தீபாவளித் திருநாள்

தித்திக்கும் தீபாவளித் திருநாள் -------------------- எப்பொழுது விடியுமென்று எல்லோரும் காத்திருக்க எல்லோரும் தெருவிலே பட்டாசு வெடிச்சிருக்க குப்பென்ற இருட்டு கொஞ்சமாய் மறைந்திருக்க-சேவல் கூவாமல் எல்லோரும் எழுந்திருக்கும் திருநாள் ஏழைபணக்காரன் என்றதொரு வித்தியாசம் எங்கும் இல்லாமல் மகிழ்ந்திடும் திருநாள் காலைமாலை என்ற கணக்கு இல்லாமல் - மக்கள் காசுசெலவழிக்கும் தீபாவளி ஒருநாள் புத்தாடைக்கு புதுமஞ்சள் சாந்திட்டே அணிந்திட்டு புதுநாளைக் கொண்டாட மாப்பிளையும் அழைத்திட்டு வித்தாரம் பேசாமல் வீதியெங்கும் கூறாமல் -சண்டை விநியோகம் செய்யாத தீபாவளி நன்னாள் காசுபணம் கரியாக்க கடனாக வாங்கியும் ஓசிப்பொருள் வாங்காமல் உழைத்தே வைத்திருந்து புத்தம் புதிதாய் துணிகள் வாங்கி மகிழ்ந்தே -நாளை  பெரிசு இளசுகளும் போற்றிடும் தீபாவளிநாள் இனிப்புகளும் காரமும் இல்லாத வீடில்லை இரண்டுமுறை தின்னாலும் இன்றுமே தப்பில்லை நெருப்புடனே திரிந்தாலும் தப்பாக நினைக்காமல்-ஆசி நெஞ்சார வாழ்த்துகின்ற தீபாவளித் திருநாள் இந்துக்கள் அல்லாது எல்லோரும் ஒற்றுமையாய் இந்தியத் திருவிழாவ

திரண்ட பாறையுமே தள்ளி

தினந்தோறும் மகிழ்ச்சியாய் ஓடி திசையெங்கும் செழிக்க வைத்து வனத்தையும்  வயலையும் காத்து வானம் மகிழ  வந்தாய் பலஊர்கள் மைல்கள்  தாண்டி பாமரனும் மகிழ்வாய் வாழ பரந்து விரிந்த பாதைவழியே பகலிரவு ஓடிவந்து மகிழ்ந்தாய் கிடந்த கற்கள் மலைகள் கடந்தும்  உடைத்தே நடந்து அடர்ந்த வனம் செழிக்க அமைதியாக உருட்டிச் சென்றாய் திரண்ட பாறையுமே தள்ளி திருட்டுத் தனமாய் கடத்தி வறண்ட இடத்திலும்  சென்று வழியெங்கும் சமன் செய்தாய் கண்குளிரக் காட்சி தந்த  கடவுளாய் போற்றி வந்த  தண்ணீரில் கடந்து வந்து தவமாகக் காத்து நின்றாய் சுரண்டலுக்கு ஆசைப் பட்ட சுயநலக் காரர்களின் கண்ணில் சூழ்ச்சிக்குத்  தப்ப மறந்து சுரண்டி சுரண்டி மடிந்தாய் தினந்தோறும் மணல் அள்ளியதால் திசையெங்கும் வறட்சி வந்தே பருவம் மாறிப் பகலவனின் பார்வையால் பாமரனும் வருந்துகிறான் நிலைமாறக் காரணம் தெரிந்தும் நீயும் மௌனம் காப்பதேன் நிம்மதியைக் கெடுத்தவரை ஏன் நேரம் கொண்டே அழிக்கவில்லை விலைபேசும் நிலைக்கே சென்றாயே வேதனை வேதனையே  எமக்கு விதியில்லை வீரமில்லைத் தடுக்க வீணர்களின்  விலைவ

மேல்சாதி நானென்று சொல்கிறான் ?

மெத்தப் படித்தவனும் பெருமையாய் மேல்சாதி நானென்று  சொல்கிறான் மேன்மக்கள் கீழ்மக்கள் உள்ளதென மேடையிலும் பெருமையாய்ப் பேசுகிறான் ஒத்த உள்ளங்களாய் இருந்தோரை ஒரே வார்த்தையில் பிரிக்கின்றான் ஊரேகூடி மகிழ்ந்தாலும் ஒருவனே ஒப்பாரி வைக்கின்றான் நடிக்கின்றான் உழைப்பதிலே ஒற்றுமையாய் இருந்தாலும் உழுவதிலே சேர்ந்து மகிழ்ந்தாலும் உத்தமனாய் சாதியை வளர்க்கிறான் உதவாத காரியத்தைச் சொல்கின்றான் சத்தியமாய் பேதமில்லை வாழ்கையிலே சங்கடங்கள் குறைவில்லை  குடும்பத்திலே சோத்துக்கும் கஷ்டமாக இருக்கின்றான் சொந்தங்களும் மறுத்தே வாழ்கிறான் இத்தனைக்கும் இருப்பது ஒரேஊரில் இழவுக்கும் மகிழ்வுக்கும் செல்கின்றான் இருந்தாலும் எப்போதும் சொல்கின்றான் இவனெல்லாம் இன்ன சாதியென்று எத்தனை நாள் இப்படியேச் சொல்லி எல்லோரையும் பிரித்துப் பார்க்க என்சாமியும் துணைக்கு வருகிறதோ எல்லோரையும் பிரித்துப் பார்க்கிறதோ .......கவியாழி........

அடுத்தநிலை ஏற்றமாய் இருக்கும்

நடுத்தர வாழ்க்கையே நரகமாக நாட்டிலே பலபேர் வாழ்வதற்கு நம்மில்  சிலரும் காரணமாம் நாணயம் மறந்தும் இருப்பதனால் கிடைக்கிற  ஊதியம் போதலை கிடைத்தாலும் அன்றாட செலவுக்கே கொடுத்தாலும் போதாது  மிஞ்சாது கொடுமையே மிஞ்சும் தங்கும் பிள்ளையின் நலன் கருதியே பிணியையும் மறந்த நிலையில் படிக்கவும் பயணமும் செய்ய பணத்தைக் கட்டியும் மீதியில்லை உற்றார் உறவுக்கும் உதவி உண்மையில் செய்ய் முடியாது மற்றோர் மதிப்பு வேண்டி மடத்தனமாய் செலவு செய்யாதே சோர்வின்றி மனம் தளராது சோம்பலின்றி மிகுந்த கஷ்டப்படு மிகுந்த வருமானம் மட்டுமே மகிழ்ச்சியாய் வந்திடும் தங்கிடும் அடுத்தத் தலைமுறை வந்திட்டால் ஆனந்தம் வந்திடும் தந்திடும் அதுவரை பொறுத்திடு படிக்கவை அப்படிச்  சொல்லியே ஊக்கப்படுத்து அவனுக்கும் வந்திடும் முயற்சியே அப்புறம் கிடைத்திடும் மகிழ்ச்சியே அதையார் தடுத்திட முடியும் அடுத்தநிலை  ஏற்றமாய் இருக்கும் ======கவியாழி=======

என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா?

Image
நான் 1980 ஆம் ஆண்டு  சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில்(Littel Flower Higher Secondary School) +2 படித்து  முடிக்கும்போது எனது வகுப்புத் தோழர்களுடன் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம். முடிந்தால் என்னைக் கண்டுபிடித்து அடையாளம் சொல்லுங்களேன் --------------------------------------------------------------------------------------------------------------------- பதில் -------- மேலிருந்து இரண்டாவது வரிசையின் இரண்டாவதாய்  நிற்கும் கருத்த உருவமாய் ஒல்லியான ஏழ்மையின் அடையாளமாய்  தெரிபவன் நானே நான்.

ஓய்வு கொடுக்க வேண்டுமா

Image
ஆண்டுகள் பதினெட்டும்  என்னோடு ஆனந்த பயணம் செய்துவந்த அடிக்கடி நிற்காதக் களைக்காத ஆதவனின் நண்பன் கடிகாரம் வேதனையும் நாளும் கண்டவன் வேடிக்கை பலதும் பார்த்தவன் வீறிட்டு அழத்தெரியாத  பண்பன் வேகமாய் செல்லாத துணைவன் சாப்பிடும் நேரம் சொல்பவன் சாதனைக் கண்டே ரசித்தவன் சரிநிகர் சமமாய்  இருந்தவன் சங்கடம் பலதும் கண்டவன் அடிக்கடிப் பார்த்திடும் கடிகாரம் ஆன்மா இல்லாத அவதாரம் அனைவரும் விரும்பும் பலநேரம் அதுவே எல்லோருக்கும் ஆதாரம் உடலோடு உறவாட தவறவில்லை உயிரின்றி  என்றுமே நின்றதில்லை உள்ளமும் என்றுமே வெறுத்ததில்லை உறவாக என்னையும் பிரிந்ததில்லை ஓய்வு வேண்டியே விரும்பியே ஓடிக்கொண்டே இருந்தாலும் வயதால் ஒளியிழந்து கையில் துடிக்கிறான் ஓய்வு கொடுக்க வேண்டுமா ------கவியாழி------

வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது

வலைப்பக்கம் தினமும் பார்க்காவிட்டால் வருத்தம் மிகுந்தே  தொடர்கின்றது வாழ்கையில் இழந்ததாய் நினைக்கிறது வேதனை மிகுந்தே தவிக்கின்றது எண்ணங்களைப்  பகிர்ந்து கொண்டு  எழுத்துலகில் நீந்தத் துடிக்கிறது சின்ன வயது பையனோடும் சேர்ந்திருக்க இன்றும்  முடிகின்றது  இத்தனைநாள் மறைத்து வைத்த இன்பமான தருணத்தை ரசிக்கின்றது இனிமையான நினைவுகளை நன்றே  இப்போதும் எழுத துடிக்கின்றது வெளிநாட்டு உறவின் வேதனையும் விருப்பமில்லா வாழ்வின் அவசியமும் வேடிக்கைக் காட்டிச் செல்கிறது வேதனை பலதும் மறைகிறது வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது வசந்தமும் மீண்டும் தொடர்கிறது வயதும் வேண்டி நினைக்கிறது வாழ்க்கைச் சிறப்பாய் நகர்கிறது =====கவியாழி=====

தீண்டாத இரவுகள்.......

மழையும் அடிக்கடி  வருவதால் மனதும் துடிக்குது  தேடுது மாலை ஆவதும் முன்பே மயக்கமும் வருது  தொடருது காரமாய் சாப்பிடத் தோணுது காண்பதை யெல்லாம்  விரும்புது காற்றையும் மீறியே அனலாய் காத்தும் மூக்கிலே  வருகிறது சூரியன் பார்த்ததும் மறையுது சுகமாய் மறைந்தே போகுது சில்லுன்னு காத்தும் வீசுது சீக்கிரம் போர்த்திக்க ஏங்குது துணையும் தேடிடும் நேரத்தில் தூறலும் அவசரம் காட்டுது தொடரவே வேண்டுது  விரும்புது தொடக்கமே மகிழ்ச்சியாய் இருக்குது நறுமணம் வீசுது மணக்குது நரம்பெல்லாம் சூடும் ஏறுது நடுவிலே தூக்கம் கலைந்ததால் நடுநிசிக் கனவாய் முடிந்தது -----கவியாழி-----

இனிமேல் மரங்கள் வளர்க்கணும்

வனமும் வனப்பையும் இழந்தால் வனத்தின் நிறமும் மாறுமாம் வானமும் இயல்பை மாற்றியே வானத்தின் தன்மையும் கூடுமாம் எல்லா இடமும் வெளிச்சமாய் எங்கும்  வெய்யில் எரிக்குமாம் ஏரிக் குளமும் வற்றுமாம் எரிச்சல் அதிகம் இருக்குமாம் பொல்லா நிலையால் பலபேரோ பொசுங்கி மடிந்தே விழுவாராம் பொழுதும் கழிந்தால் மட்டுமே பொறுத்தே வெளியில் வருவாராம் இந்த நிலைக்குக் காரணம் இழந்த மரங்கள் அதிகமாம் இதையே நாமும் அறிந்தேனும் இனிமேல் மரங்கள் வளர்க்கணும் மழையும் நன்றாய் பெய்யுமாம் மரங்கள் அடர்ந்து வளருமாம் மக்கள் துயரம் நீங்கியே மக்கள் மனமும் குளிருமாம் வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய் வருடம் முழுக்க பெய்யுமாம் வாழ்வில் இதையே  மகிழ்ச்சியாய் வானத்தைப் பெருக்கிக் காக்கணும் =====கவியாழி=====

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே.....

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே நாகரீகம் மறந்து சிரிப்பாரோ நாணயம் மறந்த பேச்சாலே நல்லவர் மனதை வதைப்பாரோ அறிவும் மழுங்கி இளிப்பாரோ ஆடைத் துறந்து  இழப்பாரோ அடுத்தவர் மனத்தைக் கெடுப்பாரோ அடிமை மதுவால் ஆவாரோ குடியால் மென்மை துறப்பாரோ குடும்பம் இழக்க நினைப்பாரோ குழந்தை பெறவே மறுப்பாரோ குணத்தை இழந்து தவிப்பாரோ பெருமை அடைந்து மகிழ்வாரோ பணத்தை அழித்து திரிவாரோ பெண்ணின் சாபம் பெறுவாரோ பொய்யாய் வாழ்க்கை வாழ்வாரோ மிகுந்த குடியால் குடும்பமே மேன்மை இழந்தும் தவிக்குமே மற்றோர் மனதும் வருந்தியே மனிதனை சிரிக்க வைக்குமே இல்லறம்  அழிய  காரணம் இதையேன் மகிழ்வாய் நினைக்கனும் இனியும் சிலநாள் தவிர்க்கனும் இனிமை வாழ்வும் தொடரனும் ===கவியாழி===

மகிழ்ச்சியைத் துறப்பவள்

இளமைக் காலம் முதலே இளையவர் நன்கே வளர இன்முகம் காட்டி சிரித்தவள் இளமை மறந்து வாழ்ந்தவள் விடைலை வயதில் நின்றவள் வீதியில் வீம்பாய் நடந்தவள் வேடிக்கைப் பார்த்துச் சென்றவள் வாழ்க்கைச் சிறையில் மகிழ்ந்தவள் குடும்பம் தொடங்கி வைப்பவள் குழந்தை சிலதைப் பெற்றவள் குறும்புத் தனத்தை மறந்தவள் குழந்தை வளர்வதால் நிமிர்ந்தவள் சோதனைக் காலம் கண்டவள் துணையுடன்  மகிழ்ந்து வாழபவள் துயரம் மிகுந்தும் நகைப்பவள் தூய்மை  அன்பைக் கொடுப்பவள் ஆக்கம் கொடுத்த தாய் அவள்தான் எனது சகோதரி அன்பாய் இருக்கும் மனைவி அடுத்தது எனது மகளே ******கவியாழி*******

வெற்றி பெறவே துடிக்குது..............

நேற்றைய வாழ்க்கை முடிந்தது நேரமும் காலமும் கழிந்தது நிம்மதி சிலநாள் கிடைத்தது நேர்மையாய் உணர முடிந்தது பார்ப்பவர் எண்ணம் புரிந்தது பாதையும் தெளிவாய் தெரிந்தது பகலும் இரவும் போலவே பசுமை வெறுமை கடந்தது இன்றைய நாளில்  நடப்பது இன்பம் விரும்பி வாழ்வது இளமை  வெறுமை இழந்தது இனிமை வாழ்க்கை ஏங்குது துன்பம் மெல்ல விலகுது துயரம் தாண்டி செல்லுது தூயநல்  நட்பும் தொடருது துணையாய்  அருகில் வாழுது நாளைய ஏக்கம் தொடருது நல்லதும் கெட்டதும் தெரியுது நாணயம் என்னுள் இருப்பதால் நன்மையும் தீமையும் தெளிந்தது வேதனை சிலதும் மறைந்தது வெளிச்சமும்  அதனால் வந்தது வேண்டி  விரும்பி  மனதுமே வெற்றி பெறவே  துடிக்குது -----கவியாழி------

அம்மா கடவுள் சரஸ்வதியே

அம்மா கடவுள் சரஸ்வதியே அகிலம் போற்றும் குணவதியே எல்லா குழந்தையும் கற்றிடவே என்றும் கொடுப்பீர் அருள்மழையே இல்லா பிள்ளையும் கற்றிடவே இலவசக் கல்வியை கொடுப்பவர்க்கும் பொல்லாப் பணத்தைப் பிடுங்கியும் பொழுதும் கொள்ளை அடிப்பவர்க்கும் சொல்லில் கடுமையாய்  இருப்போர்க்கும் சொல்லித் தந்தே மகிழ்பவர்க்கும் நல்ல ஒழுக்கமும் நன்னடத்தை நாளும் கற்பிக்கும் ஆசிரியருக்கும் செல்வம் சேர்க்கா பணியாக செலவில்லாமல் தினம் கற்பிக்கும் சொல்லில் சிறந்த சீமான்கள் செய்யும் பணியும்  சிறந்திடவே அன்பும் அறிவும் பெருகிடவே அனைவரும் போற்றும் கல்விக்கு அம்மாதாயே அருள் கொடுத்தால் ஆயுள் முழுக்க வணங்கிடுவேன் ----கவியாழி----

அய்யா வயதில் மூத்தவரே

அய்யா வயதில் மூத்தவரே அன்பில் என்னுள் ஆள்பவரே அழைத்தால் தினமும் மகிழ்பவரே ஆறாம் எண்ணில் அழைப்பவரே அன்பில் சளைத்தவர்  உங்களைபோல் அருகில் எனக்கு இல்லையே அதனால் எனக்கும் லாபமே அடிக்கடி கோபமாய் வாழ்த்துங்களேன் எல்லா  நண்பரும்  மகிழ்வாக எண்ணி இருந்திட நினைப்பவரே சொல்லால்  தவறை சுட்டியே சிறப்பாய் இருந்திடச் செய்பவரே என்மேல் என்ன கோபமைய்யா எதற்கு அப்படிக் கடிந்தீரோ என்னை விடவா உங்களுக்கு ஏக்கம் தந்திடும் மீசையுமக்கு பொல்லா கோபம் இல்லையே பொசுக்கி என்னைக் கொல்லவே எல்லா நாளும் இப்படியே என்னிடம் திட்டி வதைக்காதீர் --கவியாழி--

வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

வயதாகிப் போனாலும் வற்றாத வாலிபமும் மீண்டும் திரும்பாத வாழ்த்துகின்ற வயதிலும் வந்திடும் வாடிக்கையாய் அன்றி நின்றிடும் திரும்பாத முகத்தையும் திருப்பிடும் தீராத ஆசையைத் தூண்டிடும் தெரிந்தோரை மீண்டுமே அழைத்திடும் திரவியம் உள்ளதைக் காட்டிடும் வருந்தாத உள்ளங்கள் இல்லையே வார்த்தையில்  சொல்லவும் மில்லையே பொருந்தாத இடத்திலும் பொங்கிடும் புகழையும் சமயத்தில்  மழுக்கிடும் தெரிந்தோரே உண்மையை சொல்லுங்கள் தெளிவில்லா சங்கதி இன்றுமே தொடர்ந்திடும் என்பதும் உண்மையா தெளிந்தீரா இப்போதும் நன்மையாய் அன்பெனும் அடிமை உண்மையாய் அமைந்திட்ட வாழ்கையே நன்மையாய் துன்புறும் மனதையும் காத்திடும் தூயஒழுக்கமும் வாழ்வில் சேர்த்திடும் புரிந்தீரா சொலவதைக் கேட்டதை புலப்படுதா சொல்லிலே உண்மையை வருந்தாத வாலிப மூத்தோரே வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

தமிழ்மணப் பட்டையை வைத்தீர்.....

நண்பரே அன்பரே வாருங்கள் நல்லதை எல்லோர்க்கும் தாருங்கள் நாட்டிலே நடக்கிற செய்தியும் நல்லதாய் கதைகளும் சொல்லுங்கள் வீட்டிலே ஆதரவு முக்கியம் விடியலில் எழுவதும் அவசியம் பாட்டுக்கள் கதைகள் கட்டுரைகள் பார்த்ததும் படிப்பது அவசியம் தமிழ்மணப் பட்டையை  வைத்தீர் தணிந்ததா தாகமே இனிமேல் கருத்துக்கள் அதிகமாய் சொன்னால் கடையில்  வாடிக்கைப் பலபேர் அடிக்கடி வலைக்கு வாங்க அனைவரின் படைப்பையும் படிங்க பொறுப்புள்ள கருத்தையே சொல்லி புகழ்பெறம் வரிசையில் நீங்க எழுத்திலே உமக்கு ஏற்றம் இருப்பதாய் அறிந்தே உரைத்தேன் இன்னுமும் சிறப்பாய் எழுதி இமயம் போற்ற வாழ்க

நானும்இறைவனே

படைப்பில் நானும் இறைவனே பண்பாய் நானும் தினமுமே பாட்டாய் எழுதித் தருவேனே பதிலும் தினமும் கொடுப்பனே உருகி உருகி எழுதியும் உணர்ச்சி மிகுந்தே சொல்லியும் உண்மைத் தன்மை மாறாது உள்ளதை நன்றே சொல்வேனே எதுகை மோனை எழுத்திலே என்றும் தொடர்ந்தே காப்பேனே எல்லா நேரமும் நல்லதாய் எதையும் எழுதி விடுவேனே காதல் காமம் எழுதுவேன் கண்ணீர் வந்திட சொல்லுவேன் ஊர்கள் சென்றதை சொல்லுவேன் உணர்ச்சிப் பொங்கிட எழுதுவேன் மனதில் தோன்றும்  எல்லாமே மகிழ்ச்சிக் கொண்டே  எழுதியே மக்கள் என்னை ஒதுக்கும்வரை மகிழ்வாய் கவிதை படைப்பேனே அழகாய் கவிதை படைப்பதால் அன்பாய் நாளும் இருப்பதால் அனைவரும் என்னை விரும்புவதால் அதனால் நானும் இறைவனே

மணிக்கூடும் மனிதக்கூடும்

எத்தனை மணித்துளிகள் இப்போது என்று கேட்டாலும் தப்பேது முப்போதும் ஓடினாலும் தப்பாது முறையாக ஓடிடுவாய் எப்போதும் ஒவ்வொரு மணித் துளியும் ஓய்வுக்காய் என்றுமே தவறாது ஒப்பில்லா காலத்தை உணர்த்தாமல் ஒருபோதும் தடுமாறி நிற்காது நொடியுமே தவறாக ஓடவில்லை நிமிடமும் தனக்காக நின்றதில்லை மணியுமே அவசரமாய் சென்றதில்லை மனிதரைப்போல் குற்றமாய் சொன்னதில்லை ஏழையாய் இருந்தாலும் எப்போதும் எல்லோரும் அவசியமாய் தன்னோடு எப்போதும் துணையாக வந்திடும் எந்நாளும் சரியாகக் காட்டிடும் இருதயம்போல எப்போதும் ஓடிடும் இன்முகமாய் காலத்தைக் காட்டிடும் இதையாரும் வெறுக்கிறவர் இல்லார் இலவசமாய் தருகிறவர் உண்டா --கவியாழி--

மீசை மட்டுமே அழகா

மீசை இருந்தால் அழகேதான் மாதமும் மழித்தால் நல்லதுதான் ஆசை அதனால் குறையாது ஆயுளில் அதனால் பயனேது மீசை இல்லா முதியோரே மீண்டும் வசந்தம் கேட்பாரோ மீண்டும் மீசை வையுங்கள் மிகுந்த இன்பம் கொள்ளுங்கள் ஆண்கள் அனைவரும் பெரும்பாலும் ஆசைக் கொண்டே வளர்திடுவர் ஆயுள் முழுக்க சிலபேரோ அதையும் துறந்தே இருக்கின்றனரே அய்யா பெரியவர்  என்னிடமே அதனால் கடிந்தே பேசியதால் என்னா செய்வேன் இளையவன்நான் எப்படி மறுத்தே சொல்லிடுவேன் அய்யா வயதில் மூத்தோரே அய்ந்தாம் நிலையில் உள்ளவரே அடியேன் என்னை வெறுக்காதீர் அன்பைக் கொடுக்க மறக்காதீர்

இன்பமாய் உலா.....செல்லுங்கள்

இன்பமாய் உலா செல்வீரே இல்லறம் சிறக்குமே  கண்டீரா இன்னலும் தீர்ந்திட சென்றிரா இன்பமாய் இனியச் சுற்றுலா மலைப்பகுதியும் மரங்கள் வளர்ந்த மிதமாய் குளிரும் தரைபகுதியும் நீரால் சூழ்ந்த நீர்ப்பகுதியும் நிலமேத் தெரியாத பணிப்பகுதியும் உல்லாசமாய் எல்லாமும் நினைத்தே ஊரெல்லாம் தொலைதூரம் சென்றே பொல்லாதக் கோபத்தைக் குறைத்தே பொறுமையாய் செல்வீரே அடிக்கடியே துன்பமும் நீங்கிடும் துணையாலே தினந்தோறும் மகிழ்ந்திடும் வாழ்கையில் அன்பையும் கூட்டிடும் மகிழ்ச்சியில் அனைவரும் விரும்பிடும்  சுற்றுலா பண்பையும் நன்றே மாற்றிடும் பணியிலும் ஊக்கத்தை கூட்டிடும் இன்பமாய் சிலநாள் இருந்தால் இதயமும் மகிழ்ந்தே சிரிக்குமாம் ---கவியாழி---

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமே

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமா உலகினில் மீண்டும் திரும்புமா பழகிய நாட்களும் மறக்குமா பாசமும் நேசமும் கிடைக்குமா அழகிய நாட்களை மறந்திட அன்பை மீண்டும் கொடுத்திட பழகியே நேசத்தை காட்டிட படைத்தவர் உயிரை மீட்டிட தினமும் மகிழ்ச்சியே தந்திட்ட திங்களும் வணங்கிட செய்திட்ட மனிதருள் தெய்வமாய் திகழ்ந்திட்ட  மகனாய் என்னை படைத்திட்ட உறவை மறந்து பிரிந்த உண்மையில் அன்பைப் பகிர்ந்த உணர்ச்சியில்  நான் வருந்த உடையோரை எங்கே மறைந்தீர் தினம் தோறும் வேண்டுகின்றேன் திங்கள் தோறும் அழைக்கின்றேன்  விரும்பாது சென்ற பிதாக்களே வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்களேன் ---கவியாழி---

இன்றைய மாணவர் வாழ்க்கை

இன்றைய  மாணவர் வாழ்க்கையோ இழிந்தே செல்லும் நிலையாலே பண்பை மறந்தே மாணவனும் பகலில் குடித்து கெடுவதுமேன் மகனும்  மறைந்து குடிப்பதில்லை மாணவனாய் இருந்து படிக்கவில்லை அவனின் வாழ்வைக் கெடுப்பதற்கா தினமும் பணமே கொடுப்பதுமேன் அறிவை வளர்க்கும் மாணவன் அடிமையாகும் மதுவைக் குடித்து அறியாமல் செய்யும் தவறுக்கு அப்பனும் ஆத்தாளுமே துணையாமே இளமை  வாழ்வோ சிலகாலம் இனிமை சேர்க்க ஒழுங்காக இல்லமும் உன்னைக் கொண்டாட இருப்பாய் சிறப்பாய் பொறுப்பாக தலைமைப் பொறுப்பை அறிந்தேநீ தினமும் கற்பாய் முறையாக தினமும் படிப்பைத் தொடங்கினால் தெரியும் மகிழ்வாய் எதிர்காலம்

வெள்ளையப்பன் வேதனையை மறைப்பவன்

வெள்ளை நிறத்தவன்  அவன் வேதனையை மறைக்க வைப்பவன் எல்லா  வீட்டிலும் இருப்பவன் ஏழையின் வீட்டிலும் குடியிருப்பவன் கொள்ளைப் பணத்தை முழுங்கி குடும்பம் முழுதையும் வதைப்பவன் இல்லை யென்றாலும் விடமாட்டன் இம்சையை தீர்க்கவே  விரும்புவான் தொல்லை கொடுக்கும் வலிக்கு தோதாய்  வந்து காப்பவன் பிள்ளைத் தாத்தா பாட்டிக்கும் பிணியைத் தீர்த்து வைப்பவன் எத்தனை  நிறத்திலும் இருந்தாலும் எல்லோர் மனதைப் போலவே துள்ளிச் சிரித்தே தொடர்வான் துணையாய் கூடவே வருவான் வறுமை வயதும் பாராமல் வாழ்வை தொடர விரும்பினால் வள்ளல் போலவே  நிம்மதியை வாரிவழங்கியே மகிழ்ந்திடுவான் முதியோர்தின வாழ்த்துக்கள் ---கவியாழி--

கண் கண்ணாடியைக் காணவில்லை

கண்கண்ணாடியைக் காணவில்லை கண்டு பிடிக்க முடியவில்லை கண் அழற்சியானதால் எப்போதும் கண்சிவந்து எரிச்சல் தாளவில்லை இல்லத்தார் எல்லோரும் கண்டுபிடிக்க இண்டு இடுக்கு  இடமெல்லாம் இரண்டு நாளாய்த் தேடுகிறோம் இயலவில்லை இருக்குமிடம் தெரியவில்லை நாவறண்டு கத்தினாலும் முடியாது நாநயமாய் பேசினாலும் வந்திடாது நான்வைத்த இடத்தைக் காணாமல் நண்பர்கனிடம் சொன்னாலும் கிடைக்காது மூன்று வயது நினைவுகூட முந்தி கொண்டு வருகிறது மூக்கில் மாட்டும் கண்ணாடியின் மூடிப்போன இடம் தடயமில்லை பேயறைந்த முகத்தைப் பார்த்து பேரன் பேத்தி  சிரிக்கிறார்கள் பேந்த பேந்த முழிப்பைப் பார்த்து பேருதவி மனைவியும் செய்கிறார்கள் வீட்டுக்கு வந்தவரின் கதையை விருப்பமின்றிச் சொன்னபோது  நானும் விட்டுவிட்ட பொருள் கணக்கை விபரமாகச் சொல்ல முடியவில்லை

பாம்பையே படம் பிடித்தேன்

Image
மைசூர் பயணம் தொடர்ச்சி ......  நாங்கள் அனைவரும் மைசூரிலுள்ள மிருக காட்சிச் சாலையில் ஒவ்வொரு பகுதியாக சென்று வந்தோம்.அப்போது மதிய நேரம் என்பதால் பெரும்பாலான விலங்குகள் தூங்கிக் கொண்டிருந்தன.என்னைபோல சுறுசுறுப்பாய் சிலதும் இருக்குமே என்றுதான் அந்தப் பகுதிக்குச் சென்றோம்.   ஆம் ,நகரத்து நண்பர் பாம்புகள் இருக்கும் பகுதிக்குச் செல்லலாம் என்று அடம்பிடித்தார் . ஒரு கண்ணாடிப் பெட்டி அருகே  நண்பர்களை வழக்கம்போல நானே படம் பிடித்தேன். அப்போது ....... ""பின்னாடிப் பாம்பு " என்று சொன்னதும் எல்லோருமே அங்கிருந்து துள்ளி ஓடி வந்தார்கள்.நான் அந்த பாம்பு நீளமாய் கண்ணாடிக்குள்ளே ஊர்ந்து சென்றதை கூறியதும் அப்படியா நாங்கள் மிக்கப் பயந்து  விட்டோம் என்றார்கள். என்னோடு வந்த நன்பர்கள் ஆமாங்க சிங்கமேதான்  என்னைப் பார்த்துப் பயந்துடிச்சி ராஜ நாகம்  நலம் விசாரித்தது மலைப்பாம்பு அமைதியானது மைசூர்  அரண்மனை  சூரியனின் காலை வணக்கம்                                                  மைசூரும்  மாலை நேரமும்                        நிமிசம்மா கோயில

மைசூர் பயணமும் படங்களும்

Image
நான் கடந்த வாரம் மைசூர் சென்றிருந்தேன்  அங்கு நான்கு நாட்கள் நண்பர்களுடன் தங்கி மகிழ்ந்தேன்  எல்லா இடங்களும் சென்றேன் இதயம் மகிழ்ந்து திரிந்தேன் அருள்மிகு சாமூண்டீஸ்வரி அம்மன் ஆலையம் எனது அலுவலக நண்பர்களுடன் நான் நந்திக்கோயில் மிருகக் காட்சிச்சாலை விலங்குகளைக் காண சென்ற ஊர்தி என்னைக் காண ஆவலாய் வந்த பாம்பு மைசூர் அரண்மனையின் முகப்புத்தோற்றம் மைசூரின் அதிகாலைத் தோற்றம் இம்மாதம் நடக்கவிருக்கும் தசரா விழா ஏற்பாடுகள் இன்னும் நிறைய படங்கள் எடுத்திருந்தேன்  எல்லாமே என்னால் பதிவிட முடியவில்லை முடிந்தால் விரும்பினால் மீண்டும் பதிவிடுகிறேன் ---கவியாழி--

பதிவர் விழாக் கணக்கு சரிபார்ப்புக் கூட்டம்

Image
விழுந்து விழுந்து சிரிக்கும் கே.ஆர்.பி.செந்தில், மதுமதி,கவியாழி,அரசன்,மெட்ராஸ் பவன் சிவகுமார்,ஸ்கூல் பையன் .சரவணன்,ஆரூர்.மூனா.செந்தில்.,ரூபக் ராம்,மின்னல் வரிகள்,பாலகணேஷ்,புலவர் அய்யாவைக் காணவந்த எனது நண்பர்.செல்லப்பா.ஆகியோருடன் வணக்கத்திற்குரிய அய்யா.ராமாநுசம்

இயற்கைச் சூழலை ரசியுங்கள்

இயற்கை சூழலை ரசியுங்கள் இனிமை கிடைப்பதை உணருங்கள் இன்பம் தேடிச்சென்றாலே எப்போதும் இளமை கொண்டே வாழலாம் கண்கள் குளிர்ச்சி கொள்ளும் கனத்த மனதும் லேசாகும் அங்கம் முழுதும் மகிழ்ச்சியால் அடையும் நன்றே உணர்வாலே மலையில் மரங்களைக் காணுங்கள் மகிழ்ச்சி கிடைத்திடும் நம்புங்கள் இலைகள் தழைகள் பசுமையாய் இன்பம் தந்திடும் இளமையாய் பசுமை மாறா காட்டிலே பாய்ந்து தாவிடும் குரங்குகள் பறந்து பேசிடும் பறவைகள் பார்க்கும் திசையிலே இன்பமே மான்கள் துள்ளி ஓடிடும் மயில்கள் தாவி களித்திடும் முயல்கள் ஒளிந்தே ஓடிடும் உள்ளமும் தூய்மை யாகிடும் அடிக்கடி வெளியே செல்லுங்கள் ஆனந்தம் மிகுவதைக் காணுங்கள் குடும்பம் அனைவரும் சேர்ந்தாலே குறையும் கஷ்டங்கள் தன்னாலே

முத்துக்கள் பத்து

Image
ஈர்ப்பு என்பது இயல்பாக வந்தால் தோற்பதில்லை துணையாகவே நிற்கும் தோல்வியை பார்க்காதவன் உலகில் யாருமில்லை துவண்டு வீழ்பவன் மனிதனில்லை வேள்விக்கு மயக்கமில்லை வீண் சந்தேகம் வெற்றி பெறுவதில்லை முயற்சிக்கு தடைகளில்லை முன்னேற்றம் யாரும் தடுப்பதில்லை? சிரிக்க மறக்காதே சிந்திக்க மறுக்காதே பொறுப்பை விலக்காதே பெருமையாய் பேசாதே காற்றுக்கு வழி சொல்ல கடமையாய் இருபது யார்? காலத்தை நிப்பாட்ட துணையாய் போவது யார்? வாழ்கையை தவறவிட்டு மனம் வெதும்பி போவது நீ..... வாழ விரும்பி முடிவு  வழியை திறக்கவும் நீ நீயே முடிவு செய்  நேர்மையாய் உணர்ந்து செய் உள்ளம் வதைப்படும்போதும் உணர்சிகள் தடைபடும்போதும் இதயம் வலிமையாகிறது ஈரம் இல்லாத எல்லாமே  இறைவனிடம் சேர்த்திடும்  ஆனால்  எண்ணங்கள் விரும்பிய எல்லோரிடமும் சேரும் துன்பப்படுவோருக்கு உதவு துன்பமாய் ஏற்றுக்கொள் துயர் நீக்கி தூய்மையாகு தெய்வமாய் நீ காணலாம் கடல் கடந்தாலும் கண்ணியம் மறக்காதே உடல் உழைப்பை கொடுக்க மறுக்காதே தடம் தவறி வாழ நினைக்காதே தமிழனின் தைரியத்தை என்றுமே இழக்காதே பணம் மட்டுமே மகிழ்ச்சியைத்தராது

வணக்கம்...வணக்கம்...வணக்கம்

வந்துவிட்டேன் மீண்டும் வந்துவிட்டேன் மக்களுக்கு வணக்கத்துடன்  வந்துவிட்டேன் விதியாலும் சதியாலும் வேலைப்பளுவாலும் விரக்தியின் காரணத்தாலும்  இதுநாளும் மதிகெட்டும் மனமும் புண்பட்டும் மக்களைக் காணாமல் இருந்துவிட்டேன் வலைப்பக்கம் வரமுடியாமல்  நெட்டின் வசதிஇன்றி தினமும் தவித்தேன் கதையும் மாறியது கடந்தது கவலையும் கொஞ்சமாய் தீர்ந்தது நிலையும் தேறியது நெட்டும் நிம்மதிதேடி இன்றுதான் வந்தது வலைப்பக்கம் வாராது இருந்தேன் வாழ்கையில் எதையோ இழந்ததாய் வாரம் இரண்டும் தவித்தேன் வந்துவிட்டேன் இனி மகிழ்வேன் துணையாக வந்த எல்லோரும் துடிப்பாக மீண்டும் வாருங்கள் விலையாக அன்பைத் தருவேன் வணங்கியே ஆசியும் பெறுவேன்

துயரங்கள் தொலைந்து போகும்

துயரங்கள் தொலைந்து போகும் ஆம் மறந்தால் துயரமும் மறைந்து விடும்.மறக்க முயற்சிக்க வேண்டும்  எல்லோருக்குமே மனதில் இனம்புரியாத வலி இருந்துகொண்டுதான்  வரும்.யாருக்குமே துன்பமோ துயரமோ இல்லாத வாழ்க்கை அமைவதில்லை. சிலபேர் சொல்லுவதுண்டு நான் எப்போதுமே துன்பப்படவில்லை என்று ஆனால் உண்மை அல்ல. வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் இருந்தால்தான் மனதில் மகிழ்ச்சியை உணர முடியும் என்பதை எல்லோருமே ஒத்துக்கொள்ள வேண்டும் .இந்த அனுபவத்தை உணராதவர்கள் யாரும் இருக்க முடியவே முடியாது.அப்படி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது காரணம் அவர்களுக்காக வேறுயாரேனும் கஷ்டப்பட்டிருப்பார்கள். துயரை உணர்ந்தால் தெளிவு பிறக்கும். காரணம் தெரியும் அதனால் மீண்டும் அவ்வாறு நடக்குமுன் நம் மனது நம்மை எச்சரித்துவிடும்.எல்லோருமே எப்போதுமே நிம்மதியாக இருப்பதில்லை.சின்னச்சின்ன விஷயங்களிலும் நாம் கோபப்படவோ எரிச்சலடையவோ இருப்பதன் காரணம்  அதனால் ஏற்பட்ட மனகஷ்டமே நம்மை அவ்வாறு செய்யச்சொல்கிறது. வாழ்கையில் ஓவ்வொரு நிலைகளில் துயரப்பட்டிருப்போம் ஒவ்வொருவரும் துன்பப்பட்டிருப்போம்.இதுதான் வாழ்கையின் பரிணாம நிகழ்வு.நம்மையே மறந்து நாம் செ

ரசித்தவர்கள்