Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

தூக்கி செல்ல நால்வர்........

உடலும் கழிவாய் மாறும் உயிரும் பிரிந்து போனால் உணர்ந்தே நாளும் வாழ்ந்தால் உண்மை வாழ்க்கை  புரியும் தூக்கி செல்ல நால்வர் துவண்டே அழவும் சிலபேர் தொடர்ந்தே வந்திட உற்றார் தொலைத்த குடும்ப உறவோர் வாழ்ந்த வாழ்க்கை  போற்றி வாழ்த்தும் நண்பர் கூட்டம் வணங்கிச் செல்லும் மக்கள் வருந்தி அழைத்தால் வருமா ஆக்கம் செய்த பணிகள் அனைத்தும் முன்னே வருமாம் அன்பால் செய்த செயலே அருகில் நின்று அழுமாம் ஏக்கம் இல்லா வாழ்வும் ஏழ்மை உணரா உயர்வும் என்றும் நன்மை செய்யா எவரும் நம்மை மதியார் தூக்கம் விழித்துப் பார்க்கத் தோழமை வேண்டும் உலகில் தொடர்ந்தே குழிவரை வருவோர் துயரம் கண்டிட வேண்டும் உயிரும்  உள்ள போதே உரிமை  கொண்டோர் மகிழ உணர்வை மதித்துச் செய்தால் உடலும் மனமும் அழுமே எல்லா உயிரும் இதுபோல் ஏந்தல் செய்வது மில்லை பொல்லா மனித இனமே புரிந்தால் வாழ்க்கை நலமே ---------கவியாழி----------

இன்றும் வாழும் பாரதியே....

Image
இன்றும் வாழும் பாரதியே எப்படி மறப்பேன் உனையே ! எழுச்சித் தமிழை உணர்த்தி-அன்று எல்லோர் மனதிலும் இடம் பிடித்தாய்! உன்னை விட்டு வைத்தால் உலகையே மாற்று வாயென, பெண்மை யொத்த சிலரால்-மனதால் பெரும்பிணி யேற்றும் வாழ்ந்தாய் கண்ணைபோல் வளர்த்த மகளை கலப்புத் திருமணம் செய்து கடவுள் இதையும் ஏற்பாரென-விரும்பி கண்குளிர பார்க்க எண்ணியதை, திண்ணைத் தோறும் சென்று தீராப்பழி சுமத்தி வந்தோர் பெண்ணை மயக்கிப் பிரித்தே-நீயின்றி திருமணம் செய்து வைத்தார் கண்ணை இழந்துக் கலங்கிக் கடின வாழ்க்கை வாழ்ந்தும் காளையெனச் சுற்றித் திரிந்ததை-சூழ்சியால் கண்துயில வைத்து விட்டனரே! (கவியாழி) 

பிடிவாதம் மனநோயா? ஊனமா?

          பிடிவாதம் என்பது தவறோ சரியோ ஆனால் இது எல்லா வயதினரையும்  விட்டு வைப்பதில்லை. எப்போதாவது அல்லது எப்பவுமே பிடிவாதத்தையே  இயல்பாக கொண்டவர்கள் நிறையப்பேர் உள்ளனர். தான் சொல்வதுதான் சரி என்று வாதிட்டு அவர்களே தம்மைத்தாமே சரி என்று சுயநிர்ணயம் செய்து பிடிதளராமல் தான் நினைத்ததையே செய்வார்கள்.          குழந்தைப்பருவத்தில் இருக்கும் பிடிவாதம் நாளாவட்டத்தில் எடுத்துச் சொன்னால் சரியாகிவிடும், போகப்போக தனது குணத்தை மாற்றிக் கொண்டு விடுவார்கள். ஆனால் சில குழந்தைகள் எப்போதும் அன்பாகப் பேசிப்பேசியே காரியத்தைச் சாதித்துக்கொள்ளும். அப்படிப் பிடிவாதமாய் இருக்கும் பிள்ளைகள் அப்பா அம்மா சண்டையிட்டுக் கொண்டால் இது நம்மால் வந்த பிரச்சனையோ என்று அஞ்சி பின்பு சரியாகி விடுவார்கள்.           பத்திலிருந்து பதினைந்து வயதிற்குள் மாறி விடுவார்கள். இவ்வயதையும் தாண்டிய குழந்தைகள் அப்படியேதான் இருப்பார்கள். அதைப் பிறவிக்குணம் அப்பா,அம்மா மாதிரி  என்று பெற்றோரும் சமாதானமாகி விடுவார்கள். ஆனால் அது சரியல்ல. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கேற்ப மாற்ற முயற்சித்தால் நிச்சயம் மாறி விடுவார்

சொல்வீரே... நல்லோரே...

இல்லா நிலையில் உள்ளோர்க்கு-இயைந்து இருப்பதைக் கொடுக்கச் சொல்வீரே பொல்லா வார்த்தையைச் சொல்லாமல் -புரிந்து புகழை மட்டும் சொல்வீரே நல்லோர் வாழ்த்த நாளும்- நகைந்தே நட்புடன் வாழச் சொல்வீரே எல்லா நாட்களும் நல்லதென்றே -உணர்ந்து எதையும் மகிழ்ந்தே சொல்வீரே தினமும் நல்ல வார்த்தைகளைத் -தொடர்ந்து தெரிந்தே வாழ்த்தச் சொல்வீரே (கவியாழி)

புயல் மழைக் காலங்களில்....

புயல் மழைக் காலங்களில் எங்கும் புறப்பட்டுச் சென்றாலே மூக்குச்சளி அழையாத நண்பனாக உறவாடும் ஆறுநாள் தொடந்தே இருக்கும் அடிக்கடித் தும்மலும் அடங்காது அழும்படி செய்து விடும் தலைவலி மிகுந்து வேலை செய்ய தடையாக இருந்தே தொல்லையாக்கும் கயல்விழிக் காது தொண்டை கரகரவென்றே இருந்தும் வலிக்கும் அயல்நாட்டு மருந்து தின்றும் அடங்காமல் தொடர்ந்து வரும் ஐங்கடுகு சூரணதைக் குடித்து அடிக்கடி மிளகு ரசம் பருகி துளசி தூதுவளை செடியின் தூய இலைதனை மென்றாலும் வயல் நண்டு  ரசம் தொடர்ந்து வாரம் இருமுறை குடித்தால் வரும் துன்பம் நீங்கித் தீரும் வழக்கமான வேலைகள் தொடரும் (கவியாழி)

அரசுபள்ளிப் ஆசிரியர்கள்,மாணவர்கள் -அன்றும் இன்றும்

கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஆரம்ப பள்ளிகளின் ஆசிரியர்களே முக்கிய பங்காற்றினார்கள் என்றால் மிகையாகாது.குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப் படுத்தும் விதமாக சொந்த பணத்தில் மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை செலுத்தியும் ஆசிரியர்களே அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று மாணவர்களை அழைத்துப் பாடம் சொல்லித்தந்தார்கள். பெற்றோர்களையும் சந்தித்து கல்வியறிவின் தேவையையும் படித்தால் பிற்காலத்தில் அறிவு மேம்பாடு ,வாழ்க்கைத்தரம் உயர்வு அரசு வேலை போன்ற அறிவுரைகளைச் சொல்லி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வற்புறுத்துவார்கள்.மாணவர்களை படிக்க வைக்க வேண்டி அரசு வழங்கும் மதியஉணவுத் திட்டத்தில் ஏழை மானவர்களைச்  சேர்த்து மதிய உணவு தந்து படிக்க வைத்தார்கள்.மாணவர்களின் குறைநிறைகளை பெற்றோர்களுக்குத் தெரியப் படுத்தி மாணவர்களின் கல்விக்குப் பேருதவி  செய்தார்கள் நானும் அரசுப் பள்ளியில்தான் எட்டாம் வகுப்புவரைப் படித்தேன்.நான் ஆரம்பக் கல்வி படிக்கும்போது மாணவர்கள் மேல் அக்கறையுள்ள பல ஆசிரியர்கள் தாங்களாகவே மாணவர்களை அழைத்துவர கிராமத்திற்குள் செல்வார்கள

இறைவா எங்கே நீ இருக்கின்றாய்

இறைவா !எங்கே நீ இருக்கின்றாய் இதையும் பார்த்தும் சிரிக்கின்றாய் மறையோர் புலவர் இருந்தாலும் மனதைக் கெடுத்தே பாடுகின்றார் பலபேர் அறியா மொழியாலே பக்தி பாடலெனப் பாடுகிறார் சிலபேர் தமிழில் பாட வந்தால் சினமே கொண்டே தள்ளுகிறார் தட்டில் விழுகின்ற காசைப் பார்த்து தருவார் பூவும்  குங்குமம் திருநீறுமே பொட்டில் அறைந்தது போல் பேசியுமே புறமே சற்றே தள்ளிச் சாடுகின்றார் மனமே வருந்தி வருவோரை தினம் மனதில் உன்னையே  நினைப்போரை கனமே அருகில் பார்க்க விடாமல் கடிந்தே உடனே துரத்து கின்றார் இருந்தால் இதையும் பார்த்துக் கொண்டு எப்படி அங்கே நீ  வாழுகின்றாய் தப்புகள் உனக்கும் தெரியலையா தண்டனை  யாருக்கும் புரியலையா? (கவியாழி)

36வது வயதிலும் அப்பாவிடம் அடிவாங்கினேன்.....

Image
எனக்கு அப்போது 36 வயது , நான் சென்னையில் எனது (United India Insurance)காப்பீட்டு நிறுவனத்தில் கிளை மேலாளராகப் பணிபுரிந்து மனைவி மகளுடன் சென்னையில் தனியாக வசித்து வந்தேன். நான் அப்பா அம்மாவை பார்க்க நினைத்தாலும்  அடிக்கடி எனது சொந்த ஊரான சேலத்திற்குச் செல்வதில்லை .ஊரில் எனது இரண்டு சகோதர்களும் நான்கு சகோதரிகளும் 32 பேரன் பேத்திகளும் மற்றும் எல்லா உறவினர்களும் வசித்து வருகிறார்கள் இருந்தும் என்னையே வரவழைப்பார். நான் அவரை நேரில் சென்று பார்க்க வேண்டி அவராகவே பொய்யான காரணத்தைச் சொல்லி உடல்நிலை சரியில்லை,மனநிலை சரியில்லை என்று சாப்பிடாமல் இருந்து என்னை வரவழைப்பது வழக்கம்.நானும் நேரில் சென்ற உடன் எழுந்து என்னுடன் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருப்பார் அதைப் பார்க்கும் எனது அண்ணனும் தம்பியும் செல்லமான பொறாமையுடன் ,நீயே சென்னைக்கு அழைத்துச் செல் என்று சொல்வார்கள். அப்பா என்னைப் பார்த்து சிரித்து நான் அங்கெல்லாம் வரமாட்டேன் என்பார். இதே கார்த்திகை மாதத்தில் அப்போது அவருக்கு வயது 83 இருக்கும் நல்ல ஆரோக்கியமாகவும் இருந்தார்.அப்போது சிறிய அளவில் கால்வீக்கம் மற்றும் கால்வலி வந்து நடக்க முட

மூத்தப் பதிவருடன் கவிஞர்.நா.முத்துநிலவன்

Image
 நா,முத்துநிலவன் அவர்களின் சென்னை சந்திப்பு 18.11.2014அன்று கவிஞர் .நா.முத்துநிலவன் அவர்கள் சென்னை வருவதாகவும் .அவர் வரும்முன் நான் புலவர்.ராமானுசம் ,கவிஞர் .மதுமதி ஆகியோரைப் பார்க்க விரும்புவதாகவும் அவர்களுக்கு தகவல் சொல்லிவிடுங்கள் என்றும் சொல்லியிருந்தார்.நான் அவரை மாம்பலம் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி விடுமாறும் அங்கிருந்து உங்களை அழைத்துச் செல்கிறேன் என்றேன் மாலை ஆறு மணிக்கு சொன்னபடியே நான் காத்திருந்து  அவரை நான் மாம்பலம்  தொடர்வண்டி நிலையத்திலிருந்து புலவர் அய்யா வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.பின் கவிஞர்.மதுமதியும் உடன் சேர்ந்து கொண்டார்.அப்போது எங்களது கடந்த கால பதிவர் சந்திப்புகள் பற்றியும் நடைமுறை சிக்கல்கள் என்ன ?  நீங்கள் ஏன் வரவில்லை ?உங்களை அங்கு சந்திக்காதது எங்களுக்கு ஏமாற்றமாய் இருந்தது என்று சொல்லி . வருத்தப்பட்டார். பதிவர் சந்திப்பில் பார்க்க முடியாததால் நேரில் வந்து விசாரித்ததுடன் மூத்தப் பதிவர்.புலவர் அய்யா அவர்களை நேரில் கண்டு நலம் விசாரித்ததுடன் அடுத்த பதிவர் சந்திப்புக்கு ஆலோசனைகளையும் கேட்டு இன்னும் வரும்காலத்தில் எப்படி சிறப்பாக நட

சிறைபிடிக்கும் மழலைகளே....

மெல்ல மெல்ல தாவிவந்து  மேனியோடு  சேர்ந்த ணைத்து எல்லையில்லாக் குறும்பு செய்யும் எனதருமைக் குழந்தைகளே வண்ண மயில் போலவும் வயதையொத்துப் பாடவும் சின்னதாகக் கதையைச்  சொல்லி சிரித்து விளை யாடவும் எண்ணமெல்லாம் ஓரிடத்தில் எளிதில் நம்மை வசப்படுத்தி சின்னக் சின்னக் குறும்புகளில் சிறைபிடிக்கும் மழலைகளே பள்ளி செல்லும்போது மட்டும் பார்வையாலே சிறைபிடித்து எல்லையினைத் தாண்டிச் சென்று ஏன்அழுது செல்லுகிறாய் கண்ணெதிரே வளர்ந்துநீ கல்வியிலும் சிறந்திடவே புன்னைகையைத் தந்துவிட்டு புகழுடனே நன்கு படிப்பாய் (கவியாழி)

கட்டிளங் காளையரும்.....

கொட்டி மழைப் பொழிகிறதே கொட்டோ வென்றே  குடையெல்லாம் பறக்கிறதே அய்யோ வென்றே தட்டிவீடும் நனைகிறதே சொட்டுசொட் டென்று-ஏழைக்கு  தங்குமிடம் கிடைக்கவில்லை  எங்கும் சென்றே பட்டித் தொட்டி கழனியெல்லாம் வெள்ளமாக பயிரெல்லாம் அழுகுவதால் உள்ளம் ஏனோ கட்டவிழ்ந்த  நிலையில் மனதைக் கண்டு-விவசாயி கண்ணீரில் நீந்துகிறான் கனத்த மழையால் கட்டிளங் காளையரும்  நொந்து போக காடுமேடு இருப்பதுபோல் சாலை யெங்கும் திட்டுத்திட்டாய் இருக்கிறதே எல்லா திசையும்-வேலைக்குத் திட்டிக்கொண்டே செல்லுகிறார் சாலையிலே விட்டுவிட்டு மழைப் பெய்வதாலே பெண்கள் வீட்டில் இருந்தால் எல்லோருக்குமே கும்மாளமாம் கெட்டிக்கார கணவன் மார்கள் மகிழ்ச்சியாக-இன்று கேட்டதெல்லாம் வாங்கித்தருவார் மகிழ்ச்சியாக (கவியாழிகண்ணதாசன்)

அய்யா.ஆ.சிவலிங்கனார்.மறைவு-வாழ்த்துப்பா!

Image
அய்யா.ஆ.சிவலிங்கனார் அவர்களுக்கு அஞ்சலி            10.07.2014 அன்று அய்யாவுடன் புலவர் குட்டியாண்டி (எ)திருநாவளவன், .  புலவர்.இராமனுசம்,புலவர்.கி,த.பச்சியப்பன் மற்றும் அவரின் இரு மகன்களுடன் நானும். தங்கமான எங்களாசான்                                                               ************** தங்கமான எங்களாசான் தமிழை மட்டும்     ஊட்டவில்லை, இளமையில் நாங்கள் செய்த கொங்குதமிழ்க் குறும்புகளோ கொஞ்சமல்ல;     கோதில்லாப் படிப்புக்கும் பங்க மின்றி மங்கையர் உடன்பயிலும் வகுப்பில் நீங்கள்    மாத்தமிழைக் கற்றலோன்றே குறியாய் நிற்பீர் சங்கடங்கள் வந்துவிடும் சார்ந்த கல்வி    நின்றுவிடும் எண்ணியதைப் பாரீர் என்பார்; பொங்குதமிழ் உணர்ச்சிக்குப் பொறுப்பு மாவார்    புரியவைக்கும் ஆற்றலிலும் பொறுமை காப்பார் தங்குதடை இல்லாமல் தமிழில் பாட்டுத்    தந்திடுவார் மேற்கோள்கள் பலவும் காட்டி; சங்கநூல்கள் சதுராடும் இவரின் வாயில்     சாந்துணையும் தமிழ்படிக்கத் தூண்டும் சொற்கள் நுங்கினைப்போல் உண்டுண்டு மகிழ்ந்த நாளை     நும்மிடத்தில் எடுத்துரைக்கக் காலம் போதா!

அய்யா புதுவை எழில் நிலவன் (புலவர்.சீனு.ராமச்சந்திரன்

Image
அய்யா புதுவை எழில்நிலவன் (எ) சீனு.ராமச்சந்திரன் ******** புதுவை தந்த பாரதிபோல்  புரட்சிப் பாரதி தாசனைப்போல்  இவரும் தமிழைப் படித்தறிந்து-தவறாய்  இமியின் அளவும் வாராமல்  அகவை எழுபது வயதிலுமே  அனைவரும் மெச்சும் வல்லவராய்  அங்குமிங்கும் எவ்விடமும்-தமிழை  அழியா வண்ணம் காத்திடவே  சிலம்புச் செல்வர் அடிதொற்றி  சிறந்தே தமிழை மெருகூட்டி  தினமும் தமிழே உயிர்மூச்சாய்-எல்லா  திசையும் சென்று பாடுகிறார்  கவிதைக் கதைகள் நாடகமே  காவியம் சொல்லும் நடிகராக  இளமைக் காலம் முதற்கொண்டு-தமிழை  இன்றும் விரும்பிக் காதலித்தும்  பலரைப் போற்றிப் பாவடித்தே பழைய நினைவை மறக்காமல்  புத்தகம் வடிவாய் உருவேற்றி-நல்ல  புதிய சரித்திரம் படைத்துவிட்டார்  இளைஞர் பலரும் விளையாட  இவரோ விரும்பியது தமிழைத்தான்  இன்றும் அன்றுபோல் இளைஞராக  இனிதே தமிழை  உயிர்மூச்சாய்  கடுகின் அளவும் குறைவின்றி  கருத்துப் பிழைகள் நிகழாமல்  விருத்தம் ஓசை சந்தத்துடன்-கவியை  விரைந்தே மகிழ்ந்துப் பாடுகிறார்  அய்யா இன்றும் ஏக்கமுடன்  அழியாத் தமிழை விருப்பமுடன்  அனைத்துப் புதி

சுற்றமும் நட்பும் உறவாய்.....

விதவை மணம் மறுத்து வீதியிலே செல்லும்போது கதைகள் பல சொலலி காயப் படுத்வோர் பலராம் உறவும் அறுந்து  வாழ்க்கை உணர்வும் மடிந்து சிலரோ துறவம் இருந்து வந்தால் துன்பம் அங்கே மிகுமாம் வாழ்வும் இன்பம் தொலைத்தார் வறுமை கொண்டே வாழ்வோர் ஊரும் உறவும் பிரிந்து உலகம் பலதும் சென்றும் காணும் மக்கள் எங்கும் கன்னித் தமிழைப் போற்றி நாளும் இருந்து வருவோர் நாவில் இதுபோல் வேண்டாம் சுற்றமும் நட்பும் உறவாய் சேர்ந்து வாழ்ந்து வருவீர் குற்றம் குறைகள் மறந்து குலமே தமிழாய் வாழ்வீர் (கவியாழி)

மூத்தப் பதிவர்.புலவர்.இராமானுசம்

Image
(அய்யா புலவர் இராமானுசம்) வயதில் மூத்த பதிவர் வளமைக் கொண்டகவிஞர் இளமை பருவம் முன்பிருந்தே இனிமைத் தமிழைப் படித்தறிந்தே தெளிந்த நடையில் கவிபடைக்கும் தேர்ந்த கவிதைப் புலவராவார் வலையில் வருவார் போவோரை வயதைப் பார்த்துப் பேசாமல் உறவாய் வலையைப் போற்றியே உடனே படித்துப் பார்த்துமே புரிந்தால் மட்டும் கருத்துகளை பதியத் தயங்கிட மாட்டார் உதவி என்று கேட்போரை உடனே அழைத்துப் பேசிடுவார் நிலைமை நன்கே புரிந்தவுடன் நிறைய உதவிகள் செய்திடுவார் துணையை இழந்தும் மறவாமல் தினமும் எண்ணிக் கலங்கிடுவார் மகளைப் பெற்ற தாயாக மகிழ்ந்தும் இன்றும் வாழுகின்றார் என்னையும் மதித்துப் பாங்குடனே என்றும் அறிவுரை சொல்லிடுவார் அன்னை போன்ற என்மகளை அன்பாய் பேத்தி என்றிடுவார் இவரைப் போலப் பதிவுலகில் எல்லாப் பதிவரும் இருப்பீரே எழிலாய் தமிழைப் போற்றியே இணைந்தே மகிழ்ந்தே வருவீரே (கவியாழி)

மனிதம் போற்றி வாழ்வோம்...

மழையுமில்லை பனியு மில்லை மக்கள் மனதில் மகிழ்ச்சி யில்லை உழைப்புக் கேற்ற ஊதிய மில்லை உழவன் மனமோ ரொம்பத் தொல்லை நகர வாழ்க்கை விரும்ப வில்லை நடந்து செல்ல பாதையும் மில்லை அடுத்த வீட்டு நட்பு மில்லை  அன்புகொண்டு பேசவு மில்லை வணிகன் கடைகள் திறப்ப தில்லை வயித்துக் கேற்ற உணவு மில்லை பிழைப்புக்கேற்ற ஊதிய மில்லை பிழைக்க வழியும் தெரிய வில்லை பிள்ளைப் படிப்பை முடிக்கவில்லை பீசு கட்ட கையில் பணமுமில்லை படித்து முடித்தும் வேலையு மில்லை பசங்க வாழ்வும் நிம்மதி யில்லை பிறந்த வாழ்வை முடிக்க வேண்டி பிழைகள் கண்டு மனமும் வெம்பி உலக நடப்பை மனதில் எண்ணி உணர்ந்து வாழ்வோம் மனிதம் போற்றி (கவியாழி)

இன்று இதமாய் இருக்கிறது

இதமான காலை இன்று இன்பமாய் இருக்கத் தோணுது நலமாக மனமும் வளமாய் நல்லதே சொல்ல எண்ணுது காலை வேளையில் காற்றும் கதைகள் பலதைச் சொன்னது கண்கள் இரண்டும் எதையோக் காணவேண்டி மேலே பார்க்குது செடியும் பூச்சியும் செல்லமாய் சேட்டை சிலதைப் பண்ணுது சேவலும் நாய்களும் இன்பமாய் சாலையில் திரிந்து ஓடுது மரங்கள் எல்லாம் இன்றும் மகிழ்வாய் சிரித்து மகிழுது மாலையில் இருப்பது போலவே மனதில் எதையோ தேடுது மழையும் இதையே கண்டு மறுபடி மறுபடி சிரிக்குது மக்களும் மழையைப் பார்த்து மகிழ்ச்சியாய் ஆடத் தூண்டுது (கவியாழி)

புகழோடு மீண்டும் வருவேன்......

எதாச்சும் சொல்ல நினைச்சா எல்லாமே மறந்து போச்சு யாராச்சும் கேட்க நினைச்சா என்னான்னு சொல்லித் தாங்க பேரெல்லாம் ஊரெல்லாம் எனக்குப் புரியாமல் தெரியாமல் ஆச்சு பெரும்பாலும் எல்லோர்க்கும் இதனால் வருத்தமே பெருகிப் போச்சு ஏதோதோ எழுத விரும்பி எந்நாளும் ஆர்வம் இருந்தும் போதாத நேரத்தாலே தொடர்ந்து பொழுதும் எழுத முடியல தீராத தலைவலியே  நிதமும் தீர்க்காமல் தொடர்ந்து நின்று ஆறாத மனக் குறையாய் அன்றாடம் முன்னாள் வருது தீராத மனக் குறையைத் தீர்க்கவே தொடர்ந்து சென்று போராடிச் ஜெயிப்பேன் மீண்டும் புகழோடு மீண்டும் வருவேன் (கவியாழி)

கல்லறை வரையில் துணையே.......

இதயம் அடிக்கடித் துடிக்கும் இமையும் இணைந்தே அடிக்கும் கருவைச் சுகமாய்ச் சுமக்கும் கருவறை சிறையாய் இருக்கும் பிறந்ததன் கதைகளைச் சொல்லி பெரியவர் வரையில் தொடர்ந்து உழைக்கும் மனித வாழ்க்கை உறவுகள் இணைந்தால் சிறக்கும் இளமைக் கனவுகள் பலிக்கும் இணைந்ததும் சுகமாய் இருக்கும் பிறவிப் பலனை அடைந்தே பெரியவராக்கி உண்மையைச் சொல்லும் உறவுகள் தொடந்தே வாழும் உரிமைகள் மகிழ்ந்தே தொடரும் பிரிவைத் வெறுத்தே ஒதுக்கும் பிள்ளைகள் இணைந்தால் மகிழும் கடனே இல்லா வாழ்க்கை கடந்தும் இருந்தால் நன்று கல்லறை வரையில் துணையே கிடைத்தால் வாழ்கை மகிழ்ச்சி (கவியாழி)

மனிதனாக வாழ்க்கை முடியுமே

விலைவாசித் தாறுமாறா ஏறுது விடிந்தாலே கடனெல்லாம் அழைக்குது தரவேண்டிய வட்டியும் சேர்த்ததும்  தலைமேல முடியெல்லாம் கொட்டுது பணக்காரன் வசதியும் பெருகுது பணத்தாலே எல்லாமே முடியுது மருந்தாலே வாழ்கையை ஒட்டியும் மளமளன்னு பணமோ சேருது விலைவாசி உயர்வை எண்ணியே விவசாயி மனசும் எரியுது நிலமெல்லாம் தண்ணீர் குறைச்சலால் நெடுந்துயர்ந்த வீடாய் மாறுது பிழையாக படிக்க மறந்த பிள்ளையின் மனசும் தவிக்குது நெடுநாட்கள் படிப்பை முடித்தும் நிம்மதியாக வேலை மறுக்குது அரசாங்கம் கடமை தவறியே அநியாயம் வளர  தொடங்குது அதனாலே பலபேரின் வாழ்க்கை அடங்காத செயலைத் தூண்டுது பலபேர்கள் மடிந்து சாவதற்கு பணம் ஏனோ தகுதியாகுது மனம்மாறி பகிர்ந்து வாழ்ந்தாலே மனிதனாக வாழ்க்கை முடியுமே (கவியாழி)

இனிப்பான மனிதர்கள்

வெள்ளைச் சோறு மட்டுமே விரும்பி உண்டு வந்தோர் வேதனையாய் இன்று ஏனோ வேண்டாமெனத் தள்ளி வைத்து பச்சைக் காய்கறிகள் தின்று பகல் வருமுன்னே விழித்து பாதம் வலிக்க நடந்தும் பயிற்சிகள் பலவகை செய்தும் உணவைக் கொஞ்சமாய்  குறைத்து உலர் பழங்கள் அதிகம் சேர்த்து உண்டதை எல்லாமே மறந்து உடலை வருத்தியே தினமும் காலை மாலையென பகிர்ந்தே கணக்காய் உணவைத் தின்று வேளை வரும்போது மாத்திரையை வேதனையுடன் தின்று வாழும் இனிப்பை மறந்தும் இனிமையாய் இன்னும் மன உறுதியுடன் சிறப்பாய்  வாழ்ந்து வரும் சொந்தங்களே நட்புகளே வாழ்க (கவியாழி)

அடங்காத முத்தங்கள் ஆயிரம்

ஆயிரம் முத்தம் தந்தும்  அடங்காத ஆசை கொள்வாள்  அடுத்தவர் முன்னே மகிழ்ந்து  அணைத்து மீண்டும் தருவாள்  தீராத அன்புடனே இருப்பாள்  தினமும் ஆவல் கொண்டே  திரும்பத் திரும்ப உணர்வாய்  கரும்புபோலக் கடிப்பாள்  தேக்கிவைத்த ஆசையெல்லாம்  தீர்க்கவே தினமும் கட்டியனைத்தே  திகட்டத் திகட்டத் தருவாள்  தீரும்வரை இணைந்தே மகிழ்வாள்  வெளியில் தெரியாத வெட்கத்துடன்  வீட்டில் புகுந்ததும் கொடுப்பாள்  வெளியூர் சென்றால் ஏங்கியே  வேதனையைத் தீர்ப்பாள் வந்ததும்  கட்டியணைத்து முத்தம் தந்து  கன்னத்தைக் கடித்தும் விடுவாள்  காலையும் மாலையும் தொடர்ந்து  கதைகள் கேட்டும் தருவாள்  நெஞ்சின் மீதேறி நெடுநேரம்  நிம்மதியாய் தூங்கி விடுவாள்  நேரத்தைக் குத்தகை கேட்டு  நீண்ட நேரம் முத்தமிடுவாள்  சத்தமில்லா முத்தங்கள் எத்தனை  தித்திக்குமே என்றென்றும் அதனை  வாடிக்கையாய் கிடைத்தால் தினமும்  வாராது துயரம் அதனால்  அன்பான முத்தங்கள் இழந்தே  அருகில் யாரும் உள்ளாரோ  இனிமை மறந்த முத்தம்  இடுவோர் யாரும் உளரா  (கவியாழி)

அவளன்றி மகிழ்வேது

அன்பானவள் எனக்கே அழகானவள் அனைத்திலும் என்னை அறிந்தவள் பண்பும் தெரிந்தவள் பாசக்காரி பழகுவதில் சிலநேரம் ரோசக்காரி எப்போதும் என்னையே சார்ந்தவள் எவ்விடமும் உரிமையாய் திட்டுபவள் முன்கோபம் வந்தால் பத்ரகாளி முடியாத நேரத்தில் பங்காளி முன்பொழுதில்  தினம் எழுவாள் மூன்று வேலையும்  சமைப்பாள் முகம் மலர்ந்தே உணவை முன்னே வந்து பகிர்வாள் கட்டளைப் போடும் எசமானி கஷ்டம் வந்தால் உபதேசி சித்திரை வெயிலாய் சிலநேரம் சிடுசிடு வென்றே தகதகப்பாள் ஆனாலும் எப்போதும் அன்பானவள் அகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள் அவளன்றி வாழ்வே இருக்காது அருகின்றி எனக்கே மகிழ்வேது (கவியாழியின் மறுபதிவு)

சுதந்திரம் எமக்கும் வேண்டும்

வேண்டும் வேண்டும் மனதில் வேதனை மறைந்திட வேண்டும் தாண்டும் உயரம் யாவும் தடைகளைத் தாண்டிட வேண்டும் சுதந்திரம் எமக்கும் வேண்டும் சூழ்நிலை மாறிட வேண்டும் மனிதருள் ஒற்றுமை வேண்டும் மகிழ்ச்சியைப் பகிர்ந்திட வேண்டும் வாழ்வில் நிம்மதி வேண்டும் வசந்தமும் மீண்டும் வேண்டும் வலையில் மீண்டும் எழுதும் வாய்ப்புகள் தொடர்ந்திட வேண்டும் மீண்டும் மீண்டும் உங்களை மகிழ்ச்சியாய் சந்திக்க வேண்டும் தீண்டும் பணிகள் யாவும் தீர்ந்திட நிம்மதி வேண்டும் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள் (கவியாழி)

இந்த நிலைக்குக் காரணம் யார்?

வனமும் வனப்பையும் இழந்ததால் வனத்தின் நிறமும் மாறுமாம் வானமும் இயல்பை மாற்றியே வானத்தின் தன்மையும் கூடுமாம் எல்லா இடமும் வெளிச்சமாய் எங்கும்  வெய்யில் எரிக்குமாம் ஏரிக் குளமும் வற்றுமாம் எரிச்சல் அதிகம் இருக்குமாம் பொல்லா நிலையால் பலபேரோ பொசுங்கி மடிந்தே விழுவாராம் பொழுதும் கழிந்தால் மட்டுமே பொறுத்தே வெளியில் வருவாராம் இந்த நிலைக்குக் காரணம் இழந்த மரங்கள் அதிகமாம் இதையே நாமும் அறிந்தேனும் இனிமேல் மரங்கள் வளர்க்கணும் மழையும் நன்றாய் பெய்யுமாம் மரங்கள் அடர்ந்து வளருமாம் மக்கள் துயரம் நீங்கியே மக்கள் மனமும் குளிருமாம் வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய் வருடம் முழுக்க பெய்யுமாம் வாழ்வில் இதையே  மகிழ்ச்சியாய் வானத்தைப் பெருக்கிக் காக்கணும் =====கவியாழி=====

உண்மை வாழ்வு...

முதுமையைத் தேடி செல்பவர் யாரோ முறையாய் அதையும் தடுப்பவர்  உளரோ மூன்றும் மூன்றும் ஒன்பதைத் தவிர்க்க முடிந்தால் கணக்கை மாற்றிடத் துணிவோ காலைமாலை என்பது உண்மை என்றால் கடவுளும் செயலும் நம்பிக்கை என்றால் நேரமும் பொழுதும் மாறுதல் நன்றாம் நிம்மதியைக் கெடுப்பது மட்டும் எதனால் சொல்வோர் சொல்லும் சொற்கள் யாவும் சொல்லா நிலையில் தவிர்த்திட முடிந்தால் எல்லோர் வாழ்வும் நிம்மதி கொண்டே எளிதில் சொல்லால் மடிந்திட மாட்டார் அவரவர்  வாழ்கையை வாழ்ந்திட நினைத்தால் அவரால் முடிந்தால் உதவிகள் செய்தால் அன்பும் அறமும் ஓங்கி வளர்ந்ததால் அகிலம் முழுதும் அன்பே வாழும் படைப்பில் நிறைய அர்த்தங்கள் உண்டு பகலும் இரவும் செய்யும் நிகழ்வால் கிடைக்கும் மகிழ்ச்சி நிலைப்பது போல கிடைத்த அனைத்தும் மகிழ்ச்சியே என்று (கவியாழி)

புருசனையே காவல் வைத்து.....

தண்டசோறு தின்னாலும் புருஷன் தன்னருகே வேண்டுமென்றும் தன்குடும்பம்பிள்ளையோடு தானும் வாழ்க்கை வாழ வேண்டி ரெண்டுவேளைக் கோவிலுக்கும் ராப்பகலாய் வேலை செய்தும் கண்டவரும் மெச்சும்படியும் கண்கலங்கா வைத்திருந்து பெண்டுபிள்ளை இந்த காலத்தில் பத்தினியாய் வேலைசெய்து பிள்ளைகளைக் படிக்க வைத்து புருசனையே காவல் வைத்து கண்டதையும் திண்ணாமல் வீட்டில் காத்திருக்கும் வீட்டுக்காரன் பிள்ளைக்குமாய் சொத்துபத்து சேர்த்து வைத்து சொன்னபடி கடனைக் கட்டியே உண்ண மறுத்தாலும் தொடர்ந்து உழைத்து உறங்க மறந்தாலும் குடும்ப நலனாய் எண்ணம் முழுதும் கணவன் வாழ எல்லா கோவிலுக்கும் செல்வது முறையா (கவியாழி)

விதியா? விஞ்ஞானமா?

எல்லா நொடியும் செல்வதுபோல எல்லோர் மனமும் செய்வதுபோல சொல்லா நிலையில் செய்ததுபோல செய்தால் தவறும் இருந்திடாதோ நல்லது என்றே நாளும் செய்து நடப்பவை அனைத்தும் நல்லதே என்றும் நாட்கள் முழுதும் செய்யும் செயலில் நலிந்த செயலும் உள்ளது  முறையா மதிதான் சொல்லும் செயலை செய்து மக்கள் மனதில் இடமும் பிடித்தும் மறந்தும் செய்யும் செயலை எண்ணி மறுபடி எண்ணி வருத்துதல் தவறா பிணியைப் போக்க மருந்தும் உண்டு பிழையாய் அதனால் நிகழும் செயலும் துணையாய் எண்ணி மருத்துவர் ஏனோ தொடர்ந்து இன்னும் கொடுத்தல் நன்றோ எல்லோர் மனமும் ஏக்கம் இன்றி எல்லா தினமும் மகிழ்ச்சி கொண்டால் பொல்லா நிலையும் அன்றி வாழ்ந்தால் பொழுதும் விதியை மறுத்து வாழ்வோம் விதியென்று நான் நம்ப மறுத்தும் விளையாட்டாய் எண்ணி தவிர்த்தால் விஞ்ஞானம் ஏன் என்னைத் திருத்தி வீண் செயலை ஏன் தடுக்கவில்லை (கவியாழி)

விதியின் செயல்......

சிறிதாய் மனதில் காயம் பட்டாலும் சிதறி ஓடுமாம் சில்லறை போல பெரியோர் மனதும் வெம்பித் தவித்து பெரும் வேதனையில் வெந்தே போகுமாம் வருவோர் துயரம் அறியாமல் தெரியாமல் வந்ததும் சொல்லும்  வார்த்தை யாலும் பெரிதாய் ஏதும் மாற்றமும் மின்றி பெருகியே வருந்தியே  கடனாய்ச் சேர்க்கும் உரியோரும் உற்றாரும் சொன்னால் கூட உதவிக்கு உழைப்பையும் தந்தால் கூட பணமும் பொருளும் கொடுத்தாலும் கூட படைத்தவன்  வந்தாலும் தோஷம் தீருமா எல்லோர்க்கும் வந்திடும் இந்த நிலை எப்படி தீர்ந்திடும் எப்போது மாறிடும் தப்பாமல் தவம் செய்தாலும் மாறா தங்கியே கடனை தீர்க்கும் மாயை விதியாய் வந்ததாய் சொல்வார் சிலர்  விரைவில் தீர்ந்திடும் கடவுள் நினைத்தால் மதியால் வெல்ல முடியா தருணம் மனிதன் படைப்பில் யாவர்கும் பொதுவோ (கவியாழி)

கடவுளைக் கண்டால் சொல்லுங்களேன்.......

கடவுளைக் கண்டால் உடனடியாய் கண்டவர் வாழ்க்கைச் செழித்திடவே உடனே வரமும் கேட்பீரே உயரும் நிலையைப்  பெறுவீரே கடனே இல்லாத வாழ்க்கையைக் கஷ்டம் தராத நாட்களை தடமே முடியா பாதையை தெரிந்தும் சொல்லச்  சொல்வீரோ பகைமை இல்லா உறவுகள் பணமே கேட்கா நண்பர்கள் குணமே புரிந்த மனைவியும் கொடுமை சொல்லா பிள்ளையும் படமே எடுக்கா நாகமும் பயமே இல்லா பறவையும் பசுமை எங்கும் மாறாத படைப்பை கேட்டுப்  பார்த்தீரா எதிலும் மகிழ்ச்சி கிடைக்கவே என்றும் முயற்சி செயிக்கவே எண்ணம் முழுதும் உண்மையாய் எப்படி உதவி செய்வாரோ மனதில் என்றும் அன்புடனே மற்றவர் உயர வார்த்தைகளை தினமும் ஒருவர் என்றழைத்து தெரிந்த  வரத்தைக் கொடுப்பாரோ நன்மை செய்ய சொல்லுங்கள் நல்லவர் பெருக வாழ்த்துக்கள் நாளும் மகிழ்ச்சிப் பெறவே நல்ல வரங்களைக் கேளுங்கள் (கவியாழி)

சிந்தை யது மங்கும்.....

சிந்தை யது மங்கும் சித்தம் மழுங்கி நடுங்கும் வித்தை செய்யும் மனதால் விடியும் வரை கலங்கும் சொந்தமும் தள்ளி வெறுக்கும் சொல்லைக் கேட்க மறுக்கும் சந்தங் களின் றின்றி சரீரம் அதிரக் கத்தும் வேந்தன் முதல் வீரன் வேட்கை யுள்ள யாரும் விரும்பி அருகில் வந்தால் வெட்டித் தலை சாய்க்கும் எங்கும் இருள் பரவி இருட்டாய் மனதுள் இருக்கும் அருகில் வர பயந்தே ஆட்டமாய் ஆடி ஒடுங்கும் தூக்க மின்றித் தவித்தே துயரம் கொள்ளும் மனிதன் தீர்க்க வரும் நிகழ்வால் துயரம் பறந்தே போகும் (கவியாழி)

நட்பை நானும் மறக்கவில்லை

பணத்தை நானும் மதிப்பதில்லை-அதனால் பணமும் என்னிடம் தங்குவதில்லை தப்பாக நட்பை சொன்னதில்லை-இன்றும் தவறாக யாரிடமும் பழகுவதில்லை தோல்வியின் முகத்தை ரசித்ததுண்டு-அங்கே தோழனின் நட்பை கண்டதில்லை விடியும்வரை நான் காத்திருந்து -விளக்கை விரைந்தும் அணைத்த தில்லை துணையாய் நானும் இருந்ததுண்டு-அன்பாய் துணிந்து நெருங்கி வந்ததுண்டு நன்றி மறந்து வாழவில்லை-அதையும் நானும் மறுத்துப் பேசவில்லை கொள்கை மறந்து நினைவில்லை-என்றும் கோழையாக நானும் விரும்பவில்லை இத்தனை தூரம் வருவதற்கு-நட்பே இணைத்து வந்ததை மறக்கவில்லை (கவியாழி)

குழந்தைப் பாட்டைப் பாடுங்கள்

பூஜ்யமும் ஒன்றும் ஒன்று புவியில் பிறந்திட்டாய்  இன்று 0+1=1 ஒன்றும் ஒன்றும் இரண்டு அப்பா அம்மா இரண்டு 1+1=2 இரண்டும் ஒன்றும் மூன்று உன்னோடு சேர்த்து மூன்று 2+1=3 மூன்றும் ஒன்றும் நான்கு பாப்பா பிறந்தால் நான்கு 3+1-4 நான்கும் ஒன்றும் ஐந்து தாத்தா பாட்டியும் ஐந்து 4+1=5 ஐந்தும் ஒன்றும் ஆறு நண்பனைச் சேர்த்தால் ஆறு 5+1=6 ஆறும் ஒன்றும் ஏழு புறப்படும் நேரம் ஏழு 6+1=7 ஏழும் ஒன்றும் எட்டு படிப்பில் கவனத்தை எட்டு 7+1=8 எட்டும் ஒன்றும் ஒன்பது தூங்க செல்வாய் ஒன்பது 8+1=9 ஒன்பதும் ஒன்றும் பத்து உணரும் வயதும் பத்து 9+1=10

ஏற்காட்டில் செய்த சமூக நலப்பணிகள்

Image
    1980 ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தபோது  NCC,NSS  போன்ற சமூகப்பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. படிக்கும்போதே   வாய்ப்புக் கிடைத்ததால் நான் பல முகாம்களில் பங்குகொண்டு கிராமங்களுக்குச் சென்று சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ,மாணவர்களுக்கு கல்விப் பற்றிய அறிவுரைகள் கோவில்களுக்கு வெள்ளையடித்தல் சாலை வசதி மேம்பாடு போன்ற சமூக அக்கறை கொண்ட பணிகளில் நாட்டம் ஏற்பட்டது, எனக்கு ஏற்பட்ட சமூக சேவை ஈடுபாடு காரணமாக சேலத்தில் இயங்கி வந்த சேலம் மிட்டவுன் ஜேசிஸ் சங்கத்தில் உறுப்பினரானேன் .அங்கு பல சமூக சேவைகள் செய்யும் நிகழ்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது இதன் காரணமாக இதையே நாம் தொடர்ந்தால் என்ன என்ற எனக்குள் மனதில்  ஏற்பட்ட கேள்வியின் காரணமாகவே பின்னாளில் ஏற்காட்டில் எனக்கு சமூக சேவை செய்யும் எண்ணத்திற்கு தூண்டுகோலாய் இருந்தது.       1986 ம் ஆண்டு நிரந்தர அரசாங்க பதவி நான் விரும்பிய எற்காட்டிலேயே காப்பீட்டுத்துறை வளர்ச்சி அதிகாரியாக நிரந்தர வேலையில் பணி நியமனம் செய்யப்பட்டேன்.பணி நிமித்தமாக நான் எல்லா வங்கிகளுக்கும் சென்று வந்ததால் என்னைப் போன்ற இளையோர்களுடன்சேர்ந்து பழகும் வாய்ப்

அவரவர் வாழ்கையை வாழுங்கள்

அவரவர் வாழ்கையை வாழுங்கள்..... அம்மா வாழ்ந்த காலத்திலும் அடிமை யாக இருந்ததில்லை அப்பா தாத்தா பாட்டியிடம் அன்பாய் இருக்கத் தவற வில்லை எல்லோர் சொல்லையும் கேட்டறிந்து எந்த முடிவும் செய்திடுவார் இல்லா நிலையிலும்   உள்ளதையே இனிமை யாகச் சொல்லிடுவார் வசதி யான வாழ்க்கைக்கு   வெளியில் வேலைக்குச் சென்றதில்லை வருவோர் போவோர் நண்பரிடம் வீட்டுச் சண்டையைச் சொன்னதில்லை இப்போ நிலைமை மாறியது இனிமை வாழ்வும் மறைந்ததுவே.. தப்பாய் எண்ணும் பழக்கத்தால் தனியாய்ச் செல்லும் நிலையானது பிரிந்தே வாழ்ந்து வந்தாலும் பொறுப்பாய் இணைந்தே உழைத்தாலும் இருந்தும் சண்டை வருகிறதே இல்லற வாழ்வும் கசக்கிறதே அமைதி யான  வாழ்க்கைக்கு அன்பாய்ப் பரிவாய்ப் பேசுங்கள் அடுத்தவர் பேச்சைக் கேட்காமல் அவரவர் வாழ்க்கையை வாழுங்கள்

நான் பார்த்த ஏற்காடு

எனது முதல் ஏற்காடு பயணம்          நான் ஏற்காடு முதலில் சென்றது )சைக்கிளில் (மிதிவண்டி)அதாவது ஒரு ரூபாய் கொடுத்து பேருந்திலோ அல்லது சுமையுந்திலோ மேலே வைத்துவிட்டு மலையில் உள்ள ஏரிக்கு அருகில் இறங்கி அங்கு ஊர் சுற்றிவிட்டு பின்னர் மிதிவண்டியி லேயே இறங்கி வரவேண்டும்  என எனது அண்ணன் சித்தப்பா மகன் சந்திரசேகர் கூறினார். ஏறக்குறைய இருபத்து மூன்று கிலோமீட்டர் மலைப்பாதையில் உன்னால் தைரியமாய் வர முடியுமா என்றார்       அப்போது வயது பதினேழு இருக்கும்  எனக்கு மனதில் பயம் இருந்தாலும் உடனே சரி போகலாம் என்று சொல்லி சனிக்கிழமை விடுமுறை என்பதால் அன்றே செல்லத் தீர்மானித்தோம் .நான் படிக்கும்போதே எனது படிப்புச் செலவுக்காக எனது தாய் தந்தையரை துன்புறுத்தாமல் நானே சுயமாக சம்பாத்தித்து வந்தேன் அதனால் என்னிடம் எப்போதும் சேமிப்பு வைத்திருப்பேன் அதிலிருந்து இருபது ரூபாய் செலவு செய்வது என தீர்மானித்து விரும்பியபடியே சென்றேன்.        பேருந்தில் இரண்டு ரூபாய் பயணக் கட்டணம் ஒருரூபாய் மிதிவண்டிக்கு  ஒரு ரூபாய் என(2+1=3) மூன்று ரூபாய் இருவருக்கும் ஆறு ரூபாய் செலவு செய்து காலை 8.00 மணிக்குப் புறப்பட்டு ஒருமணி ந

இன்பசுற்றுலா - ஏற்காடு

Image
"ஏழைகளின் ஊட்டி ஏற்காடு  "            ஏழைகளின் ஊட்டி  என்றழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் சேலம் நகரிலிருந்து  முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருபது கொண்டை  ஊசி வளைவுகளுடன்  கடல் மட்டத்திலிருந்து சுமார் 1850  அடி உயரத்தில்  இருக்கிறது ஏற்காடு  ஏரியின் எழில் மிகுத் தோற்றம்       நான் 1981-1992 வரை ஏற்காடு பகுதியில் நான் பணிபரியும் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்தேன்.அன்று பணி நிமித்தமாக நான் சுற்றித் திரிந்த நாட்களில் இருந்த தோற்றம் இன்று காலப்போக்கில் மாறி விட்டது. தற்போது நிறைய தங்கும்  விடுதிகள் கட்டப்பட்டு போக்குவரத்தும் மிகுதியாகி இருக்கிறது.அதற்கேற்றாற்போல் சாலை வசதியும் மேம்பட்டிருக்கிறது இந்த ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியில் இருந்து செல்லும் உபரி நீரே கிள்ளியூர் நீர்வீழ்சியாய்  கொட்டிக் கொண்டிருந்தது  தற்போது  ஏரியில் நீர்மட்டம் குறைந்ததும்  அருவி இருக்குமிடம் தெரியாமல் கட்டிடங்களாய் மட்டுமே உள்ளது         இந்த முகத்துவாரத்தில்  உள்ள நீரேற்றும் நிலையத்தின் வாயிலாக இங்குள்ள அனைத்துப் பகுதிகளுக்க

சித்திரை மகளே வருக.........

சித்திரை மகளே வருக சீர்மிகு வாழ்வைத் தருக சீரிய பணிகள் செய்தே சிறப்புற ஆசியும் தருக கற்பனை செய்யும் அறிவை காலமும் எனக்குத் தருக கற்றதில் உள்ள குறையை கற்கத் தெளிவைத் தருக அற்ப மனித பிறப்பில் அன்பாய் நாளும் இருக்க அப்பன் ஆத்தா ஆசிரியராய் அறிவை இன்னும் தருக உலகில் உள்ள உயிர்கள் உயர்வாய் என்றும் இருக்க உழவன் வாழ்வை சிறக்க உடனே மழையைத் தருக எத்தகு பணியும் எளிதில் ஏற்றம் கிடைக்கச் செய்து எளிமை வாழ்வை  வாழ என்னுடன்  துணையாய்  வருக நேசமும் நட்பும் சூழ்ந்தே நிறையாய் வாழ்க்கை வாழ நித்திரை நாளும் கிடைத்து நிம்மதி மனதில் தருக (கவியாழி)

வெட்கமாய் இருக்குது விளக்கணைங்க....

வெட்கமாய் இருக்குது விளக்கணைங்க விடிந்ததும் சொல்லுறேன் தூங்கிடுங்க சுத்தமாய் எனக்கு விருப்பமில்லை சொல்வதைக் கேட்டு உறங்கிடுங்க மிச்சமாய் எதுவும் தரவேண்டாம் மேனியில் கையும் படவேண்டாம் அச்சமாய் இருக்க வழியில்லையே  அவங்களும் நமக்குத் துணையில்லையே கூச்சமாய் எனக்கு இருக்குதுங்க குறுகுறுன்னு எதுவோ ஓடுதுங்க பேச்சினால் என்னை மடக்காதீர் பிள்ளைக்குத் தெரிஞ்சா தவறில்லையா மச்சினி இன்னும் ரகசியமாய் மருமகள் இருந்தும் தெரிந்தவளாய் துச்சமாய் எண்ணியே அவங்களெல்லாம் தினமும் அடிக்கடி நடக்கிறதாம் உங்களைப் பத்தித் தெரிந்துதானே உடம்புல வலியும் மறந்துநானே உள்ளுக்குள்ளே பயமாய் இருப்பதாலே உடனே தள்ளிப் போயிடுங்க சத்தியம் சொல்லி செய்யுறேண்டி சங்கதி எதுவும் செய்யுலடி மிச்சமும் தடவி அமுக்கிடுறேன் முன்னம்போல் உடம்பும் இருக்குமடி இப்பவே கழுத்து பரவாயில்ல இடுப்புல வலியும் அதிகமில்ல சுத்தமா முதுகுல வலியில்ல சத்தியம் இன்னைக்குக் காத்திட்டிட்டீங்க -----கவியாழி----- (வயதாகி விட்டால் இப்படித்தான் நிலைமை இருக்குமோ?)

இணையத்தால் இணைந்தோம் மகிழ்ந்தோம்-2

Image
.  இரண்டாவது நபராக திரு.துளசிதரன் அவர்களைத் தொடர்புகொண்டு பேசியபோது ஓ..மீசைக்கார நண்பரா என்று கேள்விகேட்டுவிட்டு அவரே தொடர்ந்து நிச்சயம் நான் உங்களைச் சந்திக்க வேண்டும்உங்களை எங்கு எப்படி எப்போது காண்பது என்று ஆசிரியருக்கே உரித்தான கேள்விகளால் மகிழ்வோடு கேட்டார்.நானும் திங்கட்கிழமை வந்து அன்றிரவே சென்னைத் திரும்ப இருக்கிறேன் என்றதும் ஏன் இன்னொருநாள் தள்ளிபோட முடியாதா என்று திரு.தேவதாஸ் அவர்களைப் போலவே கேட்டார்.   நான் என் நிலையைச் சொல்லி அவசர வேலையாக வந்த காரணத்தினால் இப்போது முடியாது மற்றொருநாள் வருகிறேன் பிறகு பார்க்கலாமே என்றதும்  உடனே இல்லை இல்லை நண்பரே உங்களை நான் எப்படியும் பார்த்துவிட  வேண்டும் நான் பணி செய்யும் இடம் பாலக்காடு என்றும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிசெய்வதாகவும் இங்கிருந்து 180 கிலோ மீட்டர் தள்ளி எனது வீடு உள்ளதென்றும் திங்கள் வந்து வெள்ளியன்று வீடு திரும்புவேன் என்றும் சொல்லியதுடன் இன்றிரவு 10.30 மணிக்கு உங்களது தொடர் வண்டி பாலக்காடு வரும் அப்போது உங்களைச் சந்திக்க முடியுமா அல்லது தூங்கி விடுவீர்களா என்றார்."கரும்புதின்னக் கூலியா நண்பரை சந்திக்க சிர

இணையத்தால் இணைந்தோம் மகிழ்ந்தோம்

Image
          நான் அவசர வேலையாக கேரளாவிலுள்ள  கொச்சின் நகருக்கு செல்வதாய் இருந்தேன்.நான் செல்லும் எல்லா ஊர்களிலும் ஏதாவதொரு இணைய நண்பர்களை சந்திக்க விரும்புவது வழக்கம் அப்படி செல்லும் முன் இணையத்தின் இணையில்லாத தவிர்க்க இயலாத அனைவரும் அறிந்த நண்பர் திரு.திண்டுக்கல்.தனபாலனிடம் கேரளாவில்  இணைய நண்பர்கள் உள்ளனரா என்று ஒரு நாள் முன்புதான் கேட்டேன்.மாலை என்னை அழையுங்களேன் என்று  சொன்னார் மாலையில் அவர் இரண்டு நண்பர்களின் கைப்பேசி எண்களைத் தந்து நீங்களே பேசிவிடுங்கள் என்றார்.         23.03.2014 அன்று  மாலை நான் திரு.தேவதாஸ் அவர்களை தொடர்பு கொண்டபோது மகிழ்ச்சியுடன் என்னை நினைவு கூர்ந்து  எனது தளத்துக்கு வந்து அனைத்தையும் படிப்பேன் என்றும் மற்ற இணைய நண்பர்களைப் பற்றியும் விசாரித்தார்..அப்போது இன்று இரவு புறப்பட்டு நாளைக் காலை எர்ணாக்குளம் வருகிறேன், நான் பயணிக்க ஒரு வாடகை மகிழுந்து (கார்) வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன் உடனே இன்னும் சிறிது நேரத்தில் தொடர்பு கொள்கிறேன் என்று சொன்னபடியே உங்களுக்கு வாடகைக் கார் பேசிவிட்டேன் என்றார்.மேலும் நானே நேரில் வருகிறேன் என்று மனமுவந்து சொன்னது எனக்கு மக

ரசித்தவர்கள்