தெய்வங்கள்

தெய்வங்கள்

17.07.2013 அன்று கோவைப் பதிவர்களோடு ......

17.07.2013 அன்று   நான் கோவை ரயிலில் சொந்த வேலையாக கோவைக்கு சென்றிருந்தேன்.என்னை கோவை பதிவர்களின் சார்பாக நண்பர் கோவை ஆவி (ஆனந்த்) அவர்கள் வரவேற்றார். அங்கிருந்து கோவைஆவியும்  நானும்  கோவையின் பிரபலப் பதிவர்களான.திரு.கோவை ஜீவா,உலகதமிழ் சினிமா ரசிகன் ஆகியோரய் சந்தித்தோம்.அங்கு  சென்னையை சேர்ந்த பதிவர்களின் நலன் விசாரித்தார்கள் பிறகு அடுத்த பதிவர் சந்திப்பு நிகழ்வு பற்றி ஆர்வமாய்  கேட்டார்கள் .அடிக்கடி நாங்கள் சந்திப்பதுப் பற்றி சொன்னதும் மகிழ்ந்தார்கள்.

ஆனால் நான் ரயிலிலேயே மதிய உணவு சாப்பிட்டேன் என்று சொல்லியும் நிச்சயம் எங்களோடும் உணவருந்த வேண்டுமென கட்டாயப்படுத்தி னார்கள் .அதனால் மேலும் நான் சாப்பிட வேண்டிய  சூழ்நிலையில் பரோட்டாவும்  மிளகு கோழி வறுவல் நால்வரும் பேசிக் கொண்டே உணவருந்தினோம். கோவை ஜீவா அவர்கள் எனக்கு பரிமாரியதுடன் கவனமாக அதைப் படங்களும் எடுத்துக் கொண்டார்.

பேச்சினூடேஉங்க வயது என்ன? என்று நண்பர் ஜீவா அவர்கள் கேள்வி கேட்டு  பின்அவரைவிட மூத்தவன் (நானும் இளைஞன்)என்று புரிந்து கொண்டு  அடுத்த கேள்வியாக எல்லோருமே கேட்க விரும்பும் கேள்வியைக் கேட்க கோவை ஆவி தானாக முன்வந்து என்சார்பாக பதிலளிக்க முயல அதைப் பார்த்த உலகசினிமா ரசிகனின் முகம் மாறியது. அதைப் பார்த்துப் புரிந்து கொண்டு நானே சொன்னவுடன் இருவரும் திருப்தி அடைந்தார்கள்.

கோவைப் பதிவர்கள் சார்பாக எனக்கு விருந்து படைத்து  என்னுடன்  மகிழ்ச்சியாக உரையாடியமை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. எத்தனையோ வேலைகள் இருந்தும் எனக்காக நேரம் பகிர்ந்து என்னை மகிழ்வித்தப் பதிவர்களை நினைத்துப் பெருமைப் பட்டேன்.பதிவுலகம் என்பது உண்மையான நேர்மையான நட்பு பரிமாறும் தளம் மட்டுமல்ல நண்பர்களாக,உறவினராக ,மரியாதைக்குரியவராக மதித்து பழகும் நல் உள்ளங்களின் புகலிடமாகவும் இருக்கிறது என்பதை எண்ணி  மகிழ்ந்தேன்.

கணினியின் வளர்ச்சியால் எத்தனையோ பயன்பாடு இருந்தாலும் உறவுக்கும் துணையாக இருக்கும் இந்தப் பதிவர்களின் சந்திப்பு நிகழ்வு எனது குடும்பத்தினரிடம் சொன்னபோது அவர்களும்  மகிழ்ந்தார்கள். காரணம் எனக்கு உறவினர்களும் நண்பர்களும் அதிகம்பேர் கோவையில் வசித்தாலும்
இந்த சந்திப்பினால் எனக்கு மேலும் நல்ல நண்பர்களையும்  சந்திக்கும் வாய்ப்பையும்  பெற்றமை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

பதிவர்கள் உறவு என்ற புதிய உறவு எல்லா இடங்களிலும் எல்லா ஊர்களிலும் நாடுகளிலும் எல்லோருக்கும் இதுபோல நல்லுறவும் நட்பையும்  வளர்க்கும் நாகரீகமான கருவிதான் இந்த பதிவுலகு என்று உறுதியாக நம்புகிறேன்.இந்த வலையுலகம் நமக்கு எல்லா தகவலும் தரும் மற்றும்  தனிநபர் திறமையும் வளர்க்கும் சிறந்த உலகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்பதை இந்த கோவை பதிவர்களின் சந்திப்பு நிகழ்வின் மூலம் அறிந்து கொண்டேன் .

Comments

  1. இனிய சந்திப்பு தொடரட்டும் (சென்னையிலும்...)

    /// எல்லா ஊர்களிலும் நாடுகளிலும் எல்லோருக்கும் இதுபோல நல்லுறவும் நட்பையும் வளர்க்கும் நாகரீகமான கருவிதான் இந்த பதிவுலகு... ///

    100% உண்மை... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. ஆம்,தொடருவோம் புதிய உறவாய் தொடங்குவோம்

      Delete
  2. வேலையின் காரணமாக, நண்பர்களோடு உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது.

    இன்னொரு சந்தர்பத்தில் சந்திக்க ஆவலோடு....காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அடுத்தமுறை சிந்திப்போம் அடுத்துவரும் பதிவர் சந்திப்பில் சந்திப்போம்

      Delete
  3. பதிவர்கள் சந்திப்பு என்பது குடும்ப உறவு போல மனதுக்கு மிகவும் இதம் தரும் விஷயம் அண்ணே....வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. ஆம்,நிச்சயம் குடும்ப உறவுக்கு மேல் எனச் சொல்லலாம்.எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத உறவு

      Delete
  4. படித்து மகிழ்ந்தேன்.
    பதிவுலகத்திற்கு ஜே !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் .நிச்சயம் ஓவ்வொருவரும் ஜே போடவேண்டும்

      Delete
  5. எப்போது நினைத்தாலும் மகிழக் கூடிய உறவு இந்த பதிவுலக உறவுகள்.
    இந்த உறவு வளரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க .நிரஞ்ச மகிழ்ச்சியாய் இருக்கிறது

      Delete
  6. இனிய சந்திப்பு... தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் தொடரவேண்டும் எல்லோருமே நட்பைப் பகிரவேண்டும்

      Delete
  7. உண்மை தான் நட்புகள் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க நண்பரே

      Delete
  8. பதிவர்கள் உறவு என்ற புதிய உறவு எல்லா இடங்களிலும் எல்லா ஊர்களிலும் நாடுகளிலும் எல்லோருக்கும் // உண்மை

    ReplyDelete
    Replies
    1. புதிய எழுச்சி என்றும் எண்ணலாம்.மனமொத்த கருத்துடையவர்கள் சங்கமம் என்றும் சொல்லலாம்

      Delete
  9. வணக்கம் இளைஞரே....
    தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...உங்களை வெறும் புரோட்டா பெப்பர் சிக்கனோடு சந்தித்ததில் கொஞ்சம் வருத்தமே.,,, இனி அடிக்கடி வருவீர்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள்...ரொம்ப கவனிக்கிறேன்....
    நன்றி நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. என்னிடம் பேசியவுடன் நான் இளைங்கன் என்பதை உலகுக்கு எடுத்துரைத்தமைக்கு நன்றி.

      Delete
  10. இனிய சந்திப்பினை அழகாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சுரேஷ்.மிக்க மகிழ்வான நிமிடங்கள்

      Delete
  11. உங்கள் பழகும் பண்பிற்கு
    பெருந்தன்மையான குணத்திற்கு
    நிச்சயம் உங்களுக்கு
    யாதும் ஊரேதான் யாவரும் கேளீர்தான்
    இதில் சென்னை என்ன கோவை என்ன ?
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார்.நாம் எப்படி பழகுகிறோமோ அப்படித்தான் எல்லோரும் நம்மிடம் பழகுவார்கள்.உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

      Delete
  12. மகிழ்வான தருணங்கள்!

    அருமை!பகிர்வினுக்கு மிக்க நன்றி!

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் ஒருநாள் தமிழகம் வருவீர்கள்.நாங்களும் உங்களுடன் நட்பினைப் பகிர்ந்து மகிழ்வோம். நிச்சயம் நடக்கும்

      Delete
  13. என்ன கோவை போனதும் யூத் ஆகிவிட்டீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் கோவையில் சொல்லுகிறார்கள்.எனக்கும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

      Delete
  14. எதிர்பார்பு இல்லாத உறவுகள்! சந்திப்பு ! மகிழ்ச்சிதானே!

    ReplyDelete
    Replies
    1. மறுப்பும் இல்லை மாற்றும் இல்லை மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அய்யா

      Delete
  15. //பதிவர்கள் உறவு என்ற புதிய உறவு எல்லா இடங்களிலும் எல்லா ஊர்களிலும் நாடுகளிலும் எல்லோருக்கும் இதுபோல நல்லுறவும் நட்பையும் வளர்க்கும் நாகரீகமான கருவிதான் இந்த பதிவுலகு என்று உறுதியாக நம்புகிறேன்.//
    சந்தேகமின்றி!
    இனிய சந்திப்பு மன நிறைவு தந்திருக்கும். வாழ்த்துகள்i

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்கையா உங்கள் வருகையைப் போல மகிழ்ச்சியாய் இருந்தது

      Delete
  16. நீங்க நிச்சயம் யூத் தான் அண்ணே...! ஹா... ஹா...!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...ஆச்சர்யம்.சிரிப்பு எதுக்கு அண்ணே ?

      Delete
  17. தங்களை தொடர் பதிவு எழுத அழைத்திருக்கேன். தென்றல் வருக.

    ReplyDelete
    Replies
    1. அய்யையோஆளவைிடுங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more