அம்மா உணவகம்-தியாகராய நகர்
அம்மா உணவகம்-தியாகராய நகர்
முகப்புத் தோற்றம்
அனைவரும் உணவருந்தும் இடம்
மகிழ்ச்சியாய் சாப்பிடுபவர்கள்
சுகாதாரமான சுத்தமான குடிநீர்
நான் கடந்த ஞாயிறு அன்று நடைபயிற்சிக்காக வழக்கமாக செல்லும் சென்னை தியாகராய நகரிலுள்ள பனகல் பூங்கா சென்றிருந்தேன்.அங்கு எனது அன்பிற்குரிய நண்பர்.திரு.பெரியசாமி.(முன்னாள் வங்கி அதிகாரி) என்னிடம்
அம்மா உணவகம் பற்றி மிகப் பெருமையாகச் சொல்லிகொண்டிருந்தார்.அவர் சொல்வதைக் கேட்டதும் எனக்கும் ஆர்வமாய் இருந்தது.ஆனால் மனதில் அவ்வளவு சுகாதாரமும் தரமும் இருக்காது என நினைத்திருந்தேன்.
அவர் எண்ணைக் கட்டாயப்படுத்தி சாப்பிட அழைத்துச் சென்றார்.நானும் அரை மனதுடன் சென்று ஒரு பொங்கல் ஐந்து ரூபாய் ஒரு இட்லி ஒரு ரூபாய் என மொத்தம் பன்னிரண்டு ரூபாய் கொடுத்து இருவரும் வாங்கி அருகிலுள்ள உணவருந்தும் பகுதிக்குச் சென்றோம்.அங்கு என் நண்பர் இருவருக்கும் இரண்டு தம்ளர் சுகாதாரமான குடிநீர் எடுத்துக் கொண்டு வந்தார்சாம்பாரும் தனியாக வாளியில் வைத்திருந்தார்கள் பின் இருவரும் உணவருந்தி மகிழ்ந்தோம்.எனது காலை உணவு இன்று ஆறு ரூபாயில் முடிந்தது
இப்போ என்ன சொல்லுறீங்க நான் சொன்னதெல்லாம் சரிதானே என்று உடனே கேட்க நானும் நீங்கள் சொல்வது உண்மைதான். என்று ஒப்புக்கொண்டேன்
இவ்வளவு குறைந்த விலையில் தரமான உணவு கிடைத்தது மகிழ்ச்சியாய் இருந்தது.இதே உணவை உணவகத்தில் அதிக விலையில் இருந்திருக்குமென்று சொன்னார்.
இங்கு பலதரப்பட்ட மக்களும் வரிசையில் நின்று வாங்கி உண்டு மகிழ்ந்தார்கள்
என்பதை எனது படங்களே சாட்சி..ருசிக்கு இல்லாவிட்டாலும் பசிக்கு ஏற்ற உணவே என்பதில் ஐயமில்லை.இதை மற்றைய பகுதிகளுக்கும்விரிவு படுத்தினால் இன்னும் பலபேர் பயனடைவார்கள்
நல்லதொரு சேவை... தொடர வேண்டும்...
ReplyDeleteஅம்மாவுக்கும் பாராட்டுக்கள்
Deleteபடங்கள் பளிச்
ReplyDeleteநல்ல புகைப்படக் கலைஞராகவும்
இருப்பீர்கள் போல் இருக்கிறதே
பசிக்கு ருசியைத் தீர்மானிப்பதில்
அதிகப் பங்குண்டு என்பது என் கருத்து
நல்ல திட்டம்.தொடரவேண்டும்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்க சார்.நான் புகைப்படங்களை எனது மைக்ரோமெக்ஸ் 3டி கைபேசிக் கேமராவில் பதிந்தேன்.
Deletetha.ma 3
ReplyDeleteநல்ல சேவை..!
ReplyDeleteஆம்.அம்மா சேவை அற்புதமான சேவை என்பதில் சந்தேகமில்லை
Deleteஓட்டள்ளி கொடுக்க போகும் திட்டமாச்சே! அதனால கவனிப்பு கொஞ்சம் கூடுதல்தான்னு அரசியல் தெரிஞ்சவஙக் பேசிக்குறாங்க.
ReplyDeleteநீங்க சொல்லறது அரசியல்.நான் சொல்லியது உண்மை
Deleteசுகாதாரமான சுவையான உணவு என்றால் நல்லதே...!
ReplyDeleteஆமா, இனி அய்யா வந்தால் அம்மா உணவகத்தின் நிலை என்ன அண்ணே...?
தொடர வேண்டும்.தொழிலாளர்கள் பயன் பேற வேண்டும்
Deleteநான் இதுவரை சாப்பிட்டதில்லை. எனக்கும் ஆர்வமுண்டு.
ReplyDeleteDD யும், RR மேடமும் நல்ல சேவை என்கிறார்களே.... விலைப்பட்டியலில் 'சேவை'யின் பெயர் இல்லையே...! :))))
நிறைய பதிவுகள் வந்ததால் அதை ருசிப் பார்க்க ஆவலாய் இருந்தேன்.
Deleteஅது நாளுக்குநாள் மாறுபட்டதாய் சொன்னார்கள்.
ரைட்டு..
ReplyDeleteஆமா,..கரெக்ட்டு
Deleteநல்லதொரு முயற்சி. பாராட்டுகள்.
ReplyDeleteஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்னும் குறளுக்கேட்ப நண்பராகவே இருந்தாலும், சொன்னதை அப்படியே ஏற்றுவிடாமல் நேரடியாகவே சென்று பரிசோதித்து முடிவைப் படங்களுடன் வெளியிட்டமை சிறப்பு. பகிர்வுக்கு நன்றி ஐயா.
உண்மைதான் மெத்தப் படித்தவர் நல்ல பதவியில் இருந்தவர் சொல்லியதும் எனக்குமே ஆர்வமாய் சென்று உண்மையை உணர்ந்தேன்.வருகைக்கு நன்றி
Deleteஇது மலிவான உணவுத்திட்டம் தான் ஆனால் அம்மாவின் இந்த திட்டத்தால் உணவகங்களில் வேலை செய்யும் எத்தனை பேரின் வேலையும் வருமானமும் போனதோ யார் கண்டது. மலிவாக என்ன கிடைத்தாலும் நுகர்வோருக்கு மகிழ்ச்சி தான் ஆனால் இந்த திட்டம் சென்னையில் தள்ளுவண்டியில் உணவு தயாரித்து விற்கும் பல ஏழைகளின் வியாபாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அதை விட ஒரு ரூபாய்க்கு இட்லி அம்மாவுக்கு பெயரையும் வாக்குகளையும் பெற்றுக் கொடுக்கலாம் கொடுக்கும் ஆனால் தமிழ்நாட்டில் மக்களிடம் உள்ள பணப்புழக்கத்துக்கு ( எனக்கு அடிக்கடி தமிழ்நாட்டுக்குச செல்லும் வழக்கமுண்டு) இங்குள்ள விலைகள் தேவையில்லாத அளவுக்கு மலிவானவை. இதனால் அரசாங்கத்துக்கு நட்டம் வரும் அதனால் கடைசியில் வேறு ஏதாவது சேவைகளை அரசாங்கம் வெட்ட வேண்டி வரும் அல்லது ஏதாவது வரியை அதிகரிக்க வேண்டும். அதையெல்லாம் ஈடுகட்ட அம்மா என்ன செய்வார் என்பது அடுத்த தேர்தலுக்குப் பின்னால் தான் தெரிய வரும். :)
ReplyDeleteஇது அரசின் முடிவு. எல்லா அரசாங்கமும் இதுபோலச் சிலச் சமூகநல காரியங்களில் ஈடுபடுவதுண்டு.அதுபோலத்தான் இதுவும்
Deleteஇதற்கு என்ன மாதிரியான வரிகள் உயரப் போகிறதோ... எந்த நலத்திட்டமும் அடிமட்ட மக்களுக்கு பயன் தான்... மேல்தட்டும் பிரச்சனையில்லை...எல்லா வித கஷ்டமும் அரசு வேலையில் (வரி உயர்த்தும் போது வருமானத்தையும் இவர்களுக்கு உயர்த்தி விடும்) இல்லா நடுத்தர வர்கத்தினருக்கே....
ReplyDeleteஉங்களின் கருத்துத் தவறு.மாதச் சம்பளத்தினர் பாடுதான் பெரும்பாடு.இதற்கும் புதிய வரிக்கும் சம்பந்தமில்லை.
Deleteஇன்று வரை யாரும் குறை சொல்லாத அம்மா ஆட்சியின் சிறப்பான திட்டம்...
ReplyDeleteஅப்படியும் சொல்லலாம்.
Deleteபலராலும் பாரட்டப்பட்ட நல்ல திட்டம்
ReplyDeleteஉண்மைதான்.சிலசமயம் இவ்வாறு நல்ல விஷயங்களும் நடப்பதுண்டு
Deleteசிறப்பான செயல் .
ReplyDeleteவாழ்த்துவோம்
Delete