குண்டுக் குழந்தைகள்
(நன்றி கூகிள்)
தாய்பால் மட்டும் போதுமே
தவிர எதுவும் வேண்டாமே
நோய்கள் அதனால் தீண்டாதே
நன்றே வளர்ந்திட உதவுமே
அன்னை மனமும் அறிந்திடும்
அன்பாய் பண்பாய் வளர்ந்திடும்
காண்போர் மனதும் தீண்டிடும்
கன்னத்தை கிள்ளிடத் தூண்டிடும்
செயற்கை உணவைக் கொடுக்காதீர்
சீக்கிரம் வளர்வதைப் பார்க்காதீர்
இயற்கையை மாற்றிப் போகாதீர்
இன்னல்கள் தேடி ஓடாதீர்
அதிக உட்டம் கொடுப்பதனால்
அளவில் பெரிதாய் குழந்தைகளும்
எளிதில் உருவம் பெரிதாகி
எல்லா உறுப்பும் பெருத்திடுமே
பார்க்க நமக்கே அழகாகும்
பார்த்ததும் தூக்கிட முடியாது
படிக்கும் போதே அதனாலே
பசங்கள் கேலியும் செய்வாரே
இயற்கை உணவை கொடுங்கள்
இதமாய் பதமாய் வளருங்கள்
எல்லோர் போல மெலிதாக்க
ஏற்றப் பயிற்சியை நாடுங்கள்
// இயற்கை உணவை கொடுங்கள்...
ReplyDeleteஇதமாய் பதமாய் வளருங்கள்... //
நல்ல ஆலோசனைகள் ஐயா... வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deleteஇயற்கை உணவை கொடுங்கள்
ReplyDeleteஇதமாய் பதமாய் வளருங்கள்
எல்லோர் போல மெலிதாக்க
ஏற்றப் பயிற்சியை நாடிடுங்கள்
ஏற்றதொரு நயமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
பாராட்டுக்கு நன்றிங்கம்மா
Deleteஇயற்கையோடு இணைந்து வாழுங்கள்
ReplyDeleteநல்லதொரு பதிவு அய்யா நன்றி
உண்மைதான்.இயற்கையாய் கொடுத்து இனிமையாய் வளர்ப்போம்
Deleteஉணவு விழிப்பு அவசியம் என்பதை நல்லதொரு கவிதையாக்கி தந்துள்ளீர்கள்.
ReplyDeleteஆமாங்க,இன்று வளரும் குழந்தைகளுக்கு அதிக எடைப் பிரச்னை உள்ளதை அறிவீர்கள்
Deleteஅருமையான கவிதை ஐயா... மின்னஞ்சல் முகவரியையும் கைபேசி எண்ணையும் பகிர்ந்தமைக்கு நன்றி..
ReplyDeleteநீங்க சொன்னதில் உள்ள உண்மையைப் புரிந்துகொண்டே சேர்த்தேன்.தங்களின் ஆலோசனைக்கு நன்றி
Deleteசிறப்பான கவிதை வாழ்த்துக்கள் சகோதரரே !
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சகோ.
Deleteசிறந்த கருத்தினை உவந்து சொன்னீர்கள்!
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள் சகோ!
மனம் திறந்து வாழ்த்தியமைக்கு நன்றி
Deleteஉங்கள் பெயர்
ReplyDeleteகாரணப் பெயராகத்தான் இருக்கவேண்டும்
எதையும் கவிதையாக்கிவிடுகிறீர்களே
வாழ்த்துக்கள்
எல்லாம் உங்களின் அன்பும் ஆசிர்வாதமும்தான் காரணம்.வாழ்த்துக்கு நன்றிங்க சார்
Deletetha.ma 5
ReplyDeleteஎல்லாவற்றையும் கவிதை ஆக்கிவிடுகிறீர்களே எப்படி சார்?
ReplyDeleteஅதுவா வருதுங்க அண்ணே.வருகைக்கு நன்றி
Deleteஇன்றைய தேதியில் வயதுக்கு மீறிய வளர்ச்சி குழந்தைகளிடம். இது உலகளாவிய பிரச்னை.
ReplyDeleteகவிதையில் பதமாகச் சொல்லியிருக்கிறீர்கள். பெற்றோர்கள் காதில் விழ வேண்டும்.
/இயற்கை உணவை கொடுங்கள்
இதமாய் பதமாய் வளருங்கள்
எல்லோர் போல மெலிதாக்க
ஏற்றப் பயிற்சியை நாடிடுங்கள்/ அருமை.
வாழ்த்துக்கள்
உள்ளதை உண்மையாய் தெரிந்ததை சொல்லுதல் நலமன்றோ.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deleteஇப்போதெல்லாம் அழகு கெட்டுவிடும் என்று தாய்மார்களே பிள்ளைகளுக்கு மாட்டுப்பால் வாங்கி கொடுக்கிறார்கள், சிலர் எருமைப் பால் வாங்கி கொடுக்கிறார்கள் குழந்தைகளுக்கு...!
ReplyDeleteபுத்தி சொன்ன கவிதை அழகு அண்ணே....!
உண்மைதான்.எல்லோருமே குழந்தைகள் கொழுகொழுவென இருக்க ஆசைபடுகிறார்கள்.அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திப்பதில்லை
Deleteவணக்கம்
ReplyDeleteநல்லகருத்தை நல்ல விதமாக சொல்லியமைக்கு மிக நன்றி அருமையான பதிவு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.தொடர்ந்து வாங்க
Delete