Thursday, 4 July 2013

பச்சைக் கீரையைப் பார்த்தவுடன்

                                              பச்சைக் கீரையைப் பார்த்தவுடன்
நிச்சயம் உண்ண மனம் வருதே
அதிக விலையில் விற்பதில்லை
அதையும் சிலரோ விரும்பவில்லை

பார்த்தால் நம்மைக் கூப்பிடுமாம்
பக்கத்தில் போனால் நாறிடுமாம்
பயந்தே வாங்கி சமைத்தாலே
பலனோ வருவது நோய்நொடியாம்

மழையில் பணியில் அதிகமாக
மலிந்த விலையில் கிடத்திடுமாம்
மனதோ உண்ணத் துடித்திடுமாம்
மறுபடி மீண்டும் தடுத்திடுமாம்

குப்பை மேடு கழனிகளில்
குளிர்ச்சியாக மிகுந்தே வளர்ந்திடுமாம்
கோழி ஆடு மாடுகளும் விரும்பி 
குனிந்தே அதையும் திண்ணுடுமாம்

இப்போ நிலைமை அதுவில்லை
இயற்கை உரமோ போடவில்லை
செயற்கை மருந்தை தெளிப்பதனால்
சீக்கிரம் வளர்ந்தே விடுகிறதாம்

இயற்கையை மாற்றி வருவதனால்
இழப்போ மனித உயிர்தானே
இனிமேல் கீரையை விளைவிக்க
இயற்கை உரங்களை போடுங்களேன்

24 comments:

 1. கீரையின் பெருமையும் இயற்கை உரத்தின் பெருமையும் சொல்லும் அருமையான கவிதை ஐயா..
  ஒரு வரியில் மட்டும் சிறிது சந்தேகம்.. :)
  //பயந்தே வாங்கி சமைத்தாலே
  பலனோ வருவது நோய்நொடியாம்// வருவது நோய்நொடியா? மன்னிக்கவும், நீங்கள் சொல்ல வரும்கருத்து எனக்குப் புரியவில்லையே..

  ReplyDelete
  Replies
  1. இன்று காலை கடைக்கு சென்றிருந்தேன் .அங்கு கண்ணைக்கவரும் வகையில் கீரைக் கட்டுகள் இருந்தன.வாங்கும் நோக்கோடு சென்றால் பூச்சிமருந்து நாற்றமே இருந்தது.கீரைக்குண்டான மனமே இல்லை.அவ்வாறு நாற்றமடிக்கும் கீரையை சாப்பிட்டால் நிச்சயம் வயிற்றுவலி வலி வரும் என்பதை அறிந்ததால்//பயந்தே வாங்கி சமைத்தாலே பலனோ வருவது நோய்நொடியாம்/// இதை எழுதினேன்
   ஆம் நோய் நொடியில் வரும் வயிற்றில் வழியைத் தருமென கருதவும்

   Delete
 2. //இனிமேல் கீரையை விளைவிக்க
  இயற்கை உரங்களை போடுங்களேன்//
  இனிமே ஆர்கானிக் விளைச்சலை நாமே வீட்டு தோட்டத்தில் விளைவித்தால் தான் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்வீட்டுக்கு அருகில் இடம் இருந்தால் நாமே கீரையை வளர்க்கலாம் .விதைகள் குறைந்த விலையில் கிடைக்கிறது

   Delete
 3. நாங்க யூஸ் பண்றது எங்க வீட்டுலயே நாங்க விளைவிச்ச கீரைகளைதான் சகோ!

  ReplyDelete
  Replies
  1. நீங்க மட்டும் சாப்பிட்டா போதுமா? எங்களுக்கும் தரவேண்டாமா?

   Delete
 4. இயற்கை உரங்களை எல்லாவற்றிக்கும் பயன்படுத்த வேண்டும்...

  வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க நண்பரே

   Delete
 5. ஆமாங்க இன்றைக்கு விற்கின்ற விலைக்கு கீரைதான் குறைந்த விலையில் அதிக சத்துக்களை தருகின்றன..

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் சீக்கிரம் நோய்களையும் அல்லவா மலிவாகத்தருகிறது.ஓட்டைகள் உள்ள கீரை நல்லது.

   Delete
 6. இயற்கை முறையில் விளைவித்த காய்கனிகளின் சுவையே அலாதி!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க அய்யா.என்னைப் போன்ற சென்னைவாசிகளின்நிலையில் அவ்வாறு கிடைப்பதில்லை.கிராமத்தில் இருந்தால் கிடைக்குமோ தெரியவில்லை

   Delete
 7. நல்லா சொன்னீங்க! செயற்கை மருந்துகளை பயன்படுத்தி காய்கறி கீரைவகைகளின் ருசியே போய்விட்டது! அருமையான படைப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ருசி இல்லாது கீரை மட்டுமே அதிக விலையில் விற்கிறார்கள்.உங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்

   Delete
 8. பயந்தே வாங்கி சமைத்தாலே
  பலனோ வருவது நோய்நொடியாம்

  செயற்கை தருவது நோய்நொடி..!

  ReplyDelete
 9. அன்றாடம் கண்ணில் படும் எதையும்
  அழகான படைப்பாக்கிவிடும் தங்கள் திறன்
  மலைப்படையச் செய்கிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வாழ்த்தும் வருகையுமே என்னை மீண்டும் மீண்டும் எழுதத்தூண்டும் வாழ்த்துக்களாய் இருக்கிறது.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சார்

   Delete
 10. கீரைக்கு மட்டுமின்றி அனைத்து விவசாயத்துக்கும் இயற்கை உரமே நல்லது. கீரை பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்ன! :))

  ReplyDelete
  Replies
  1. iஇயற்கையை பகைத்தாலே இன்னல்தான் என்பதே கருத்து

   Delete
 11. கீரையின் அருமையை அருமையாக உரைத்தீர்கள்... அத்துடன் நீங்கள் தற்போது கிடைக்கும் கீரைகளைப் பற்றி கூறியதும் உண்மையே... இதற்க்கு சிறந்த வலி நமக்கு தேவையான கீரையை நாமே வீட்டில் வளர்த்து கொள்வதுதான்.. இடம் இல்லாதவர்கள் கூட வெளிச்சம் படும் அறைகளில் சிறிய தொட்டிகளில் தேவையான கீரையை வளர்க்கலாமே...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ப்ரியா நம்ம வீட்டிலோ அருகிலோ சிறிய இடமிருந்தால் அங்கு வளர்த்தால் போதுமானது சுத்தமான கீரைக் கிடைக்கும்.தங்கள் ஆலோசனைக்கு நன்றி

   Delete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்