தெய்வங்கள்

தெய்வங்கள்

அடிக்கடி மழைத்துளி

அடிக்கடி மழைத்துளி
அணைத்திட துடிக்குது
கடிக்கிற எறும்புமே
கடையிலே கடிக்குதே ...

இடுப்பிடை மடிப்பிலே
அணைக்கிற போதிலே
இருதயம் படபடவென
அடிக்கடித் அடிக்குதே

சிலுசிலு மூச்சிலே
சேலையும் நழுவுதே
சேர்கிற நேரத்தை
சீக்கிரம் கேட்குதே

விரலிடை மேனியில்
மேகலை தேடுதே
படர்ந்திட ஆசையில்
படருதே தழுவுதே

தொடத்தொட வெட்கமே
துவழுதே தூண்டுதே
சடசட மழையிலே
சாந்தியும் அடையுதே



Comments

  1. விரகதாபம் பொழியுதே பொழியுதே

    மேகமாக மனசும் ஓடுதே ஓடுதே

    மேகம் மோதி படர்ந்து

    மழையாக பொழியுதே பொழியுதே

    பொழிந்து சாந்தி ஆனதே ஆனதே......!

    ஹா ஹா ஹா ஹா இது எப்பிடி இருக்கு அண்ணே...?

    ReplyDelete
    Replies
    1. அருமைசந்தோசமாய்இருங்க

      Delete
  2. ஓஹோ...! வாழ்த்துக்கள் ஐயா...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்நன்றிங்கநண்பரே

      Delete
  3. என்ன தீடீர்ன்னு கவியாழி கவி'வாலி 'யாக மாறீட்டிங்க?இது எப்பவும் பெய்யுற மழைஇல்லை ...கோடை மழை!குளிர்ச்சி தந்தது !

    ReplyDelete
    Replies
    1. நான் கவிஞர் வாலிபோல பெரிய ஆளு இல்லைங்க

      Delete
  4. அருமை...
    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. .. தொடத்தொட வெட்கமே
    துவழுதே தூண்டுதே
    சடசட மழையிலே
    சாந்தியும் அடையுதே ..

    அருவி போல கொட்டுது உங்கள் வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா.நல்லா இருக்கா? சந்தோசம்

      Delete
  6. மழை... அருமையான வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. மழைத்தூரல்தான்.வருகைக்கு நன்றிங்க

      Delete
  7. அருமை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்து எனக்கு எப்போதுமே உற்சாகத்தை கொடுக்கும்

      Delete
  8. தொடர்பதிவு அழைக்கிறார் குட்டன் அவர்கள்...!

    விசிட் : http://kuttikkunjan.blogspot.in/2013/07/blog-post_24.html

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ இப்படி எனது வாயை கிண்டுராங்களே?

      Delete
  9. //சடசட மழையிலே
    சாந்தியும் அடையுதே//

    ஓகோ!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.தவறாய் இருக்குங்களா?

      Delete
  10. கண்ணதாசன் சார் சூப்பர். மழையின் சந்தத்திற்கேற்ற கவிதை தமிழும் விளையாடுதே! எப்படி சார்?

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே.நேர்மையான உண்மையான எனது மன ஓட்டத்திற்கு எந்த மகளிரும் ஆதரவு தரவில்லையே ஏன்?சைவமும் /அசைவமும் விரும்ப வில்லையோ?

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more