தெய்வங்கள்

தெய்வங்கள்

எனக்கும் பெண்ணைப் பிடிக்கும்...

சின்ன வயதில் எனக்கு
சிரித்துப் பேசிப்பழக பிடிக்கும்
எண்ணமதைக் கவிதையாக
எழுதிப் பார்க்கப் பிடிக்கும்

வஞ்சிக்கொடி இடைப் பிடிக்கும்
வண்ண வண்ண உடைபிடிக்கும்
கொஞ்சிப் பேசும் எண்ணமுடன்
கூடிப்பேசும் இடம் பிடிக்கும்

தஞ்சம் தேடும் விழியாளின்
தாக்கும் பார்வைப் பிடிக்கும்
தள்ளி நின்று அவளருகே
தஞ்சம் கேட்கப் பிடிக்கும்

நித்திரையில் அவள் வந்து
நினைவதில ணைக்கப் பிடிக்கும்
நீண்ட நேரம் கனவுலகில்
நேர்மையாக பழகப் பிடிக்கும்

நல்ல நல்ல கவிதைகளை
நண்பியிடம் சொல்லப் பிடிக்கும்
நீண்டநேரம் பேசுகின்றப் பெண்
நட்பினையும் எனக்குப் பிடிக்கும்

அஞ்சி நின்று குறுகுறுன்னு
அவளிழிதலை சுவைக்கப் பிடிக்கும்
ஐந்திரண்டு நிமிடம் அவளழகை
ஐயத்தோடு ரசிக்கப் பிடிக்கும்

எத்தனையோ சொல்ல வேண்டும்
என்நினைவை அழைக்க வேண்டும்
பொக்கிசமாய் நினைவுகளை புனிதமாக
போற்றவேண்டும் பாடவேண்டும்




Comments

  1. //தஞ்சம் தேடும் விழியாளின்
    தாக்கும் பார்வைப் பிடிக்கும்//

    எனக்கு இந்த வரி பிடிக்கும்..

    ReplyDelete
    Replies
    1. இன்னும் கொஞ்சம் மீதமிருக்கு அப்புறமா சொல்லுகிறேன்

      Delete
  2. பொக்கிசமாய் நினைவுகளை புனிதமாக
    போற்றவேண்டும் பாடவேண்டும்

    பொக்கிஷ நினைவுகள்..!

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் விரும்புவதுதானே.வருகைக்கு நன்றி

      Delete
  3. உங்கள் சிந்தனை (வரிகள்) மிகவும் பிடிக்கும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க தனபாலன்

      Delete
  4. #ஐந்திரண்டு நிமிடம் அவளழகை
    ஐயத்தோடு ரசிக்கப் பிடிக்கும்#

    ஐம்பத்திரண்டு வாரம் [அதாவது வருடம் முழுவதும் ]ஐயமின்றி ரசித்தாலும் தவறில்லை !

    ReplyDelete
    Replies
    1. அவரவர் ரசனையைப் பொறுத்தது.வருகைக்கு நன்றி

      Delete
  5. பொக்கிசமாய் நினைவுகளை புனிதமாக
    போற்றவேண்டும் பாடவேண்டும்//

    பொக்கிச நினைவுகளை போற்றவேண்டும்.
    கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா.எல்லாம் பழைய நினைப்புதான்

      Delete
  6. பிடித்தவைகளைச் சொன்னவிதம்
    மிகவும் பிடித்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சார்

      Delete
  7. கவியாழி அவர்கள் பீடு நடை போட்டு முன்னேறுவது மகிழ்ச்சியளிக்கிறது... வரும் காலங்களில் கடுமையான போட்டி நிலவும் என்று பதிவுலக வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன :-)

    Source http://www.tamilmanam.net/blog_ranking.php?url=kaviyazhi.blogspot.com

    :-)

    ReplyDelete
    Replies
    1. தெரியுமே,ஏற்கனவே நீங்க குழு அமைத்து விட்டீர்களே.உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

      Delete
  8. அற்புதமான அழகிய கவிதை..
    ரசித்தேன்

    ReplyDelete
  9. மொத்தத்தில் இந்த கவிதைகளில் உள்ள வரிகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தது...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரசனைக்கும் நன்றி.தொடர்ந்து வாங்க

      Delete
  10. அருமையான நினைவுகளை அசைபோட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க சுரேஷ்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

      Delete
  11. இன்னாது உங்களுக்கு பெண்ணை பிடிக்குமா?! இருங்க அண்ணிக்கிட்ட சொல்றேன்

    ReplyDelete
    Replies
    1. அவளும் பெண்தானே.பிடிக்கத்தானே வேண்டும்.அவளன்றி அணுவும் அசையாது.

      Delete

  12. பிடித்த பட்டியல் இப்போது! பிடிக்காத பட்டியல் எப்போது?

    ReplyDelete
    Replies
    1. இதற்குமேல் பிடிக்காதப் பட்டியல் தயார் செய்ய வேண்டுமைய்யா.

      Delete
  13. நினைவுப் பொக்கிஷம் அருமை

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.நினைவுகளுக்கும் உயிருண்டு.

      Delete
  14. எனக்கு உங்க கவிதை பிடிச்சு இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. உங்களையும் எனக்குப் பிடிக்கும்

      Delete
  15. நிழலாய் வந்த யாவுமே
    நினைவே என்றுகூ றினீர்
    வாழ்வில் காணவேண் டுமே
    வாழ்ந்தால் ஏக்கம் இல்லையே.

    எல்லாம் கிடைத்திட்டால் கிடைத்துந்தால் அதைவிட வேறென்ன...
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கம்மா

      Delete

  16. வணக்கம்!

    கவியாழி கட்டும் கவிதை பிடிக்கும்!
    சுவைகோடி நல்கும் சுரந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கய்யா

      Delete
  17. நன்றாக இருக்கிறது. ஆனால் எதற்காக ஐயத்தோடு ரசிக்க வேண்டும்? கனவுலகில் நேர்மையாக என்றால் என்ன?!

    ReplyDelete
    Replies
    1. மிக்கமகிழ்ச்சியானால் வேதனையில் முடிந்தால் என்ன செய்வது?

      Delete
  18. அழகிய கவிதை.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா
      தொடர்ந்து வாங்க எல்லாமே படிங்க அப்புறமா க்கருத்தை ச்சொல்லுங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more