தெய்வங்கள்

தெய்வங்கள்

தாய்நாடு அழைக்கின்றது..........

அவசர உலகமோ அதற்குள்ளே
அனைத்து உறவையும் கெடுக்கிறதே
மிகச்சரியாகப் புரிகிறதே உண்மை
மீண்டும் நம்மூர் அழைக்கிறதே

எல்லா உறவும் மறக்கிறதே
ஏற்றத் தாழ்வும் வருகிறதே
என்பதை எண்ணியே மனமே
எரிமலையாய் இன்று வெடிக்கிறதே

நம்மூரைப் பார்க்க துடிக்கிறதே
நல்லதும் கெட்டதும் காண்பதற்கு
இல்லமும் தேடி அலைகிறதே
இன்பமாய் இதுவே இருக்கிறதே

காலடிப் பட்டதும் சிலிர்க்கிறதே
கனவுகள் எல்லாம் நிஜமானதே
ஊர்விட்டு மறந்து போன 
உறவினை மீண்டும் நினைக்கிறதே

இத்தனை நாள் மறந்திருந்த
இன்பம் மீண்டும் வருகிறதே
இங்கேயே நான் தங்கிடவே
இன்று மனம் துடிக்கிறதே

அப்பாவின் அன்பு மகிழ்கிறதே
அம்மாவின் உணவும் ருசிக்கிறதே
இப்போதும் உறவுகளை எண்ணி
இனித் திரும்ப தருகின்றதே

Comments

 1. இனிய நினைவுகளின் ஏக்கம் புரிகிறது ஐயா...

  ReplyDelete
  Replies
  1. புரிய வேண்டிய மக்களுக்குப் புரிந்தால் சரிதான் நண்பரே

   Delete
 2. சொந்த ஊருக்கு போற சுகம் இருக்கே அது தாய் மடிபோல சுகம் - கவிதை இனிக்கிறது...!

  ReplyDelete
  Replies
  1. எவ்வளவு நாள் தங்கினாலும் மறக்க முடியாத சுகமாய் இருக்கும்

   Delete
 3. ..
  அப்பாவின் அன்பு மகிழ்கிறதே
  அம்மாவின் உணவும் ருசிக்கிறதே
  இப்போதும் உறவுகளை எண்ணி
  இனித் திரும்ப தருகின்றதே
  ..

  உண்மைதான் உறவின் நினைவுகள் அருமை...

  ReplyDelete
  Replies
  1. உறவின் பிரிவை உணரும் தருணம் .பிரிவை நினைத்து புலம்பும் நேரம்

   Delete
 4. நான் எழுதணும்னு நினைச்சதே சங்கவி எழுதிட்டார். மற்ற வரிகளும் அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. எல்லோர் உணர்வும் எழுத்திலும் அடங்காதது .தொடர்ந்து வாங்க

   Delete
 5. ஊர்விட்டு மறந்து போன
  உறவினை மீண்டும் நினைக்கிறதே
  // உண்மை...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.புறப்படும்போதே நினைவு பிறந்த இடத்திற்கு வந்துவிடும்.ஆனந்தம் ஆரம்பமாகிவிடும்

   Delete
 6. அனைவருக்கும் தங்கள் பிறப்பிடத்தைத்
  தொடுகையில் ஏற்படும் உணர்வுதான் ஆயினும்
  எத்தனைபேரால் இத்தனை அருமையாகச் சொல்லமுடியும்
  (தலைப்பு தாய் மண் அல்லது தாய் பூமி என இருந்திருக்கலாமோ)

  ReplyDelete
  Replies
  1. எண்ணம் தான் இங்கு அழைக்கிறது .உள்ளம் செல்லத் துடிக்கிறது.உணர்வு பறந்து வந்து விடுகிறது

   Delete
 7. Replies
  1. உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிங்க சார்.

   Delete
 8. சொந்த ஊர் பாசம் மறக்க கூடியதா? அருமையாக எழுதியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க .எஸ்.சுரேஷ்

   Delete
 9. மனமதில் அனைவருக்கும் நிறைந்திருக்கும் ஏக்கமதனை
  மிகமிக அழகாகத் தந்தீர்கள்! அருமையான நினைவுகள்!
  வாழ்த்துக்கள் சகோ!

  தாயவள் மடியும் தவழ்ந்த மண்ணும்
  நோயதைத் துரத்தி நிம்மதி காக்கும்
  சேயெம் வாழ்வில் சேர்ந்திடும் ஆவல்
  பாயினில் விழுமுன் பார்த்திடக் கூடுமோ?...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா...உங்களின் ஏக்கம் புரிகிறது. நீங்க தாய்நாடு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்குமென நினைக்கிறேன்

   Delete
 10. இத்தனை நாள் மறந்திருந்த
  இன்பம் மீண்டும் வருகிறதே
  இங்கேயே நான் தங்கிடவே
  இன்று மனம் துடிக்கிறதே

  இனிய நினைவுகள்..!

  ReplyDelete
  Replies
  1. மறக்க கூடாத நினைவுகள்.நிகழ்வுகள்

   Delete
 11. உண்மை. தாயின் மடியைப் போல் தாய் மண்ணும் சுகம் தான்.

  ReplyDelete
  Replies
  1. சொல்ல இயலாதது.சோகமான அனுபவம்ஆனால் தாய்மண்ணைப் பற்றி நினைத்தாலே இன்பமாய் இருக்கும்.தொடர்ந்து வாங்க

   Delete
 12. தாயும், தாய் மண்ணும் என்றுமே சுகம்தான்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்.சுகமாகவே இருக்கும்

   Delete
 13. //காலடிப் பட்டதும் சிலிர்க்கிறதே
  கனவுகள் எல்லாம் நிஜமானதே//
  ஏக்கம் கலந்த வரிகள் மிக அருமை!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் வெளிநாட்டில் வசிப்போருக்கு தாய்நாடு செல்லும்போது இம்மாதிரியான உணர்விருக்கும்.

   Delete
 14. எங்களுக்குளும் உறைந்து கிடக்கும் உணர்வு இது .
  வேதனைக்குரியதே .நன்றி சகோதரரே பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. ஆம்.உங்களுக்கும் ஏக்கமும் இருக்கும் எதிர்பார்ப்பும் இருக்கும்.வருகைக்கு நன்றிங்க

   Delete
 15. வணக்கம் அன்பரே...


  கண்ணதாசன் என்ற பெயருக்கு கவிதை சுமார் தான்..
  ஏதேனும் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து எல்லா கவிதைகளையும் படித்துப் பாருங்கள் .நான் கவிஞர் கண்ணதாசன் அல்ல.கவிதை எழுத முயற்சிக்கும் கண்ணதாசன்

   Delete
 16. தங்களின் தளம் அறிமுகம் : http://jeevanathigal.blogspot.com/2013/07/14-to-20-07-2013.html

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றிங்க நண்பரே

   Delete

Post a comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more